தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 89

1 ஆண்டவரது அருட்செயல்களை நினைத்து நான் என்றென்றும் பாடுவேன்: உமது சொல்லுறுதியை எல்லாத் தலைமுறைகளுக்கும் என் நாவால் எடுத்துரைப்பேன். 2 என்றென்றும் உள்ளது எம் அருளன்பு' என்று நீர் கூறினீர்: உமது சொல்லுறுதிக்கு வானகமே அடிதளம். 3 நான் தேர்ந்தெடுத்தவரோடு உடன்படிக்கை செய்து கொண்டேன், என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டுக் கூறியது. 4 உன் சந்ததியை என்றென்றும் நிலைநாட்டுவேன்; எல்லாத் தலைமுறைகளிலும் உன் அரியணை நிலைக்கச் செய்வேன்'. 5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் போற்றிப் புகழ்கின்றன: வானோர் கூட்டம் உமது சொல்லுறுதியைக் கொண்டாடும். 6 வானத்தில் உள்ளவர் யார் ஆண்டவருக்கு நிகராகக் கூடும்? விண்ணவருள் யார் ஆண்டவருக்கு இணை? 7 புனிதர்களின் கூட்டத்தில் கடவுள் அச்சத்துக்குரியவர்: அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அச்சத்துக்குரியவர்; மாண்பு மிக்கவர். 8 ஆண்டவரே, சேனைகளின் இறைவா, உமக்கு நிகர் யார்? ஆண்டவரே, நீர் வல்லமையுள்ளவர்: உமது சொல்லுறுதி உம்மைச் சூழ்ந்துள்ளது. 9 கொந்தளிக்கும் கடலுக்கும் நீர் கட்டளையிடுகிறீர்: பொங்கி எழும் அலைகளை நீர் அடக்குகிறீர். 10 ராகாப்பை நீர் பிளந்து நசுக்கி விட்டீர்: வன்மை மிக்க உம் கரத்தால் உம் எதிரிகளைச் சிதறடித்தீர். 11 வானமும் உமதே, வையமும் உமதே: பூவுலகையும் அதிலுள்ள அனைத்தையும் அமைத்தவர் நீரே. 12 வடக்கையும் தெற்கையும் உருவாக்கியவர் நீரே: தாபோர் மலையும் எர்மோன் மலையும் உம் பெயரைக் கேட்டுக் களிகூர்கின்றன. 13 வல்லமை மிக்கது உமது புயம்: வலிமை கொண்டது உமது கரம், ஓங்கியுள்ளது உமது வலக்கரம்! 14 நீதியும் நியாயமுமே உம் அரியணைக்கு அடித்தளம்: அருளும் உண்மையும் உமக்கு முன்செல்லும். 15 உமது விழா ஆர்ப்பரிப்பில் பங்குபெறுவோர் பேறு பெற்றோர்: ஆண்டவரே, அவர்கள் உம் முகத்தின் ஒளியில் நடக்கின்றனர். 16 உமது பெயரை நினைத்து என்றும் அகமகிழ்கின்றனர்: உமது நீதியை நினைத்துப் பெருமிதப் படுகின்றனர். 17 ஏனெனில், அவர்களது வல்லமைக்குச் சிறப்புத் தருபவர் நீர்: உம் தயவால் தான் எங்கள் வலிமை ஓங்கியுள்ளது. 18 நமக்குள்ள கேடயம் ஆண்டவருடையதே: நம் அரசரும் இஸ்ராயேலரின் பரிசுத்தருக்குச் சொந்தமானவரே. 19 ஆதியில், உம் புனிதர்களுக்குக் காட்சி தந்து நீர் சொன்னது: 'வல்லவனுக்கு மணிமுடி சூட்டினேன்; மக்களினின்று ஒருவனை நான் தேர்ந்தெடுத்து மகிமைப்படுத்தினேன். 20 என் ஊழியன் தாவீதை நான் தேர்ந்தெடுத்தேன்: புனித தைலத்தால் அவரை அபிஷுகம் செய்தேன். 21 அதனால் என் கைவன்மை என்றும் அவருக்குத் துணை நிற்கச் செய்வேன்: என் புயப்பலம் அவரை ஒடுக்க முடியாது. 22 எதிரி அவரை ஏமாற்ற மாட்டான்: தீயவன் அவரை ஒடுக்க முடியாது. 23 அவருக்கெதிரிலேயே அவருடைய எதிரிகளை நொறுக்கி விடுவேன்: அவருடைய பகைவர்களை வதைத்தொழிப்பேன். 24 என் சொல்லுறுதியும் என் அருளும் அவரோடிருக்கும்: என் பெயரினால் அவரது வலிமை ஓங்கும். 25 அவரது செங்கோல் ஓங்கச் செய்வேன்: ஆறுகளின் மேல் அவரது ஆட்சியைப் பரவச் செய்வேன். 26 நீரே என் தந்தை, என் இறைவன், எனக்கு மீட்பளிக்கும் அரண் என்று என்னை நோக்கிக் கூறுவார். 27 நானும் அவரை என் தலைப்பேறாக்குவேன்: மண்ணக அரசருள் மாண்பு மிக்கவராக்குவேன். 28 என்றென்றும் என் அருளன்பை அவர் மேல் பொழிவேன்: அவரோடு நான் செய்த உடன்படிக்கை நிலைத்திருக்கும். 29 அவரது சந்ததி என்றென்றும் வாழச் செய்வேன்: அவரது அரியணை வானங்கள் போல் நீடிக்கச் செய்வேன். 30 அவருடைய மக்கள் என் சட்டத்தை மீறுவார்களாகில், என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடில், 31 என் நியமங்களைப் பின்பற்றாவிடில், என் கற்பனைகளின் படி ஒழுகாவிடில். 32 அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சாட்டையால் அடிப்பேன்; அவர்கள் பாவங்களுக்காகக் கசையால் அடிப்பேன்: அடி கொடுத்து அவர்களைத் திருத்துவேன். 33 ஆனால் எனது அருளைத் தாவீதிடமிருந்து நீக்கிவிட மாட்டேன்: என் வாக்குறுதியை நான் மீறவே மாட்டேன். 34 நான் செய்த உடன்படிக்கையை மீற மாட்டேன்: நான் சொன்ன சொல்லை மாற்றமாட்டேன். 35 என் புனிதத்தை வைத்து ஒரே முறையாய் நான் ஆணையிட்டுச் சொன்னேன்: தாவீதிடம் நான் பொய் சொல்லவே மாட்டேன். 36 அவரது சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்: அவரது அரியணை கதிரவனை போல் என் முன் என்றும் விளங்கும். 37 வானத்தில் ஒளிரும் நிலவைப் போல், அவரது அரியணை நிலைத்திருக்கும்.' 38 நீரோ அபிஷுகமானவரைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்: அவர் மீது மிகுந்த சினம் கொண்டீர். 39 உம் ஊழியனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புறக்கணித்தீர்; அவரது மணிமுடியைத் தரையில் தூக்கி எறிந்தீர். 40 அவருடைய நகர மதில்களைத் தகர்த்தெறிந்தீர்: கோட்டைக் கொத்தளங்கள் அழிவுற விட்டு விட்டீர். 41 வழியில் போவோர் வருவோர் அவரைக் கொள்ளையடித்தனர்: அயலாரின் நகைப்புக்கு அவர் இலக்கானார். 42 எதிரிகளின் வலக்கை ஓங்கச் செய்தீர்: அவரைப் பகைத்தவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியால் துள்ளச் செய்தீர். 43 அவரது வாளின் முனையை முறித்து விட்டீர்: போரின் போது நீர் ஆதரவு காட்டவில்லை. 44 அவரது மாட்சி மறையச் செய்தீர்: அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர். 45 அவரது இளமை விரைவில் முடிவடையச் செய்தீர்: அவமானத்தில் அவரை ஆழ்த்தினீர். 46 எது வரைக்கும் ஆண்டவரே: எந்நாளுமே மறைந்திருப்பீரோ? எதுவரை உமது சினம் நெருப்¢புப் போல் மூண்டெழும்? 47 எவ்வளவு குறுகியது என் வாழ்வு என்பதை நினைவுகூரும்: நீர் படைத்த மனிதர்கள் எவ்வளவு நிலையற்றவர்கள் என்று நினைவுகூரும். 48 சாவுக்குட்படாமல் வாழ்பவன் யார்? கீழுலகின் பிடியினின்று தன் உயிரை விடுவிப்பவன் யார்? 49 ஆண்டவரே, ஆதிகாலத்தில் நீர் காட்டிய தயவெல்லாம் இப்போதெங்கே? உம் சொல்லுறுதியால் தாவீதுக்கு ஆணையிட்டுச் சொன்ன தயவெல்லாம் எங்கே? 50 ஆண்டவரே, உம் ஊழியர் படும் நிந்தனைகளையெல்லாம் நினைவுகூரும்: புறவினத்தார் காட்டும் பகையும் எதிர்ப்பும் என் நெஞ்சிலே தாங்குகிறேனே! 51 ஆண்டவரே, உம் எதிரிகள் நீர் அபிஷுகம் பண்ணினவரைப் பழிக்கிறார்கள்: அவர் போகுமிடமெல்லாம் அவரைத் தூற்றுகிறார்கள். 52 என்றென்றும் ஆண்டவர் போற்றி: ஆமென், ஆமென்!
1. ஆண்டவரது அருட்செயல்களை நினைத்து நான் என்றென்றும் பாடுவேன்: உமது சொல்லுறுதியை எல்லாத் தலைமுறைகளுக்கும் என் நாவால் எடுத்துரைப்பேன். 2. என்றென்றும் உள்ளது எம் அருளன்பு' என்று நீர் கூறினீர்: உமது சொல்லுறுதிக்கு வானகமே அடிதளம். 3. நான் தேர்ந்தெடுத்தவரோடு உடன்படிக்கை செய்து கொண்டேன், என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டுக் கூறியது. 4. உன் சந்ததியை என்றென்றும் நிலைநாட்டுவேன்; எல்லாத் தலைமுறைகளிலும் உன் அரியணை நிலைக்கச் செய்வேன்'. 5. ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் போற்றிப் புகழ்கின்றன: வானோர் கூட்டம் உமது சொல்லுறுதியைக் கொண்டாடும். 6. வானத்தில் உள்ளவர் யார் ஆண்டவருக்கு நிகராகக் கூடும்? விண்ணவருள் யார் ஆண்டவருக்கு இணை? 7. புனிதர்களின் கூட்டத்தில் கடவுள் அச்சத்துக்குரியவர்: அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அச்சத்துக்குரியவர்; மாண்பு மிக்கவர். 8. ஆண்டவரே, சேனைகளின் இறைவா, உமக்கு நிகர் யார்? ஆண்டவரே, நீர் வல்லமையுள்ளவர்: உமது சொல்லுறுதி உம்மைச் சூழ்ந்துள்ளது. 9. கொந்தளிக்கும் கடலுக்கும் நீர் கட்டளையிடுகிறீர்: பொங்கி எழும் அலைகளை நீர் அடக்குகிறீர். 10. ராகாப்பை நீர் பிளந்து நசுக்கி விட்டீர்: வன்மை மிக்க உம் கரத்தால் உம் எதிரிகளைச் சிதறடித்தீர். 11. வானமும் உமதே, வையமும் உமதே: பூவுலகையும் அதிலுள்ள அனைத்தையும் அமைத்தவர் நீரே. 12. வடக்கையும் தெற்கையும் உருவாக்கியவர் நீரே: தாபோர் மலையும் எர்மோன் மலையும் உம் பெயரைக் கேட்டுக் களிகூர்கின்றன. 13. வல்லமை மிக்கது உமது புயம்: வலிமை கொண்டது உமது கரம், ஓங்கியுள்ளது உமது வலக்கரம்! 14. நீதியும் நியாயமுமே உம் அரியணைக்கு அடித்தளம்: அருளும் உண்மையும் உமக்கு முன்செல்லும். 15. உமது விழா ஆர்ப்பரிப்பில் பங்குபெறுவோர் பேறு பெற்றோர்: ஆண்டவரே, அவர்கள் உம் முகத்தின் ஒளியில் நடக்கின்றனர். 16. உமது பெயரை நினைத்து என்றும் அகமகிழ்கின்றனர்: உமது நீதியை நினைத்துப் பெருமிதப் படுகின்றனர். 17. ஏனெனில், அவர்களது வல்லமைக்குச் சிறப்புத் தருபவர் நீர்: உம் தயவால் தான் எங்கள் வலிமை ஓங்கியுள்ளது. 18. நமக்குள்ள கேடயம் ஆண்டவருடையதே: நம் அரசரும் இஸ்ராயேலரின் பரிசுத்தருக்குச் சொந்தமானவரே. 19. ஆதியில், உம் புனிதர்களுக்குக் காட்சி தந்து நீர் சொன்னது: 'வல்லவனுக்கு மணிமுடி சூட்டினேன்; மக்களினின்று ஒருவனை நான் தேர்ந்தெடுத்து மகிமைப்படுத்தினேன். 20. என் ஊழியன் தாவீதை நான் தேர்ந்தெடுத்தேன்: புனித தைலத்தால் அவரை அபிஷுகம் செய்தேன். 21. அதனால் என் கைவன்மை என்றும் அவருக்குத் துணை நிற்கச் செய்வேன்: என் புயப்பலம் அவரை ஒடுக்க முடியாது. 22. எதிரி அவரை ஏமாற்ற மாட்டான்: தீயவன் அவரை ஒடுக்க முடியாது. 23. அவருக்கெதிரிலேயே அவருடைய எதிரிகளை நொறுக்கி விடுவேன்: அவருடைய பகைவர்களை வதைத்தொழிப்பேன். 24. என் சொல்லுறுதியும் என் அருளும் அவரோடிருக்கும்: என் பெயரினால் அவரது வலிமை ஓங்கும். 25. அவரது செங்கோல் ஓங்கச் செய்வேன்: ஆறுகளின் மேல் அவரது ஆட்சியைப் பரவச் செய்வேன். 26. நீரே என் தந்தை, என் இறைவன், எனக்கு மீட்பளிக்கும் அரண் என்று என்னை நோக்கிக் கூறுவார். 27. நானும் அவரை என் தலைப்பேறாக்குவேன்: மண்ணக அரசருள் மாண்பு மிக்கவராக்குவேன். 28. என்றென்றும் என் அருளன்பை அவர் மேல் பொழிவேன்: அவரோடு நான் செய்த உடன்படிக்கை நிலைத்திருக்கும். 29. அவரது சந்ததி என்றென்றும் வாழச் செய்வேன்: அவரது அரியணை வானங்கள் போல் நீடிக்கச் செய்வேன். 30. அவருடைய மக்கள் என் சட்டத்தை மீறுவார்களாகில், என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடில், 31. என் நியமங்களைப் பின்பற்றாவிடில், என் கற்பனைகளின் படி ஒழுகாவிடில். 32. அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சாட்டையால் அடிப்பேன்; அவர்கள் பாவங்களுக்காகக் கசையால் அடிப்பேன்: அடி கொடுத்து அவர்களைத் திருத்துவேன். 33. ஆனால் எனது அருளைத் தாவீதிடமிருந்து நீக்கிவிட மாட்டேன்: என் வாக்குறுதியை நான் மீறவே மாட்டேன். 34. நான் செய்த உடன்படிக்கையை மீற மாட்டேன்: நான் சொன்ன சொல்லை மாற்றமாட்டேன். 35. என் புனிதத்தை வைத்து ஒரே முறையாய் நான் ஆணையிட்டுச் சொன்னேன்: தாவீதிடம் நான் பொய் சொல்லவே மாட்டேன். 36. அவரது சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்: அவரது அரியணை கதிரவனை போல் என் முன் என்றும் விளங்கும். 37. வானத்தில் ஒளிரும் நிலவைப் போல், அவரது அரியணை நிலைத்திருக்கும்.' 38. நீரோ அபிஷுகமானவரைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்: அவர் மீது மிகுந்த சினம் கொண்டீர். 39. உம் ஊழியனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புறக்கணித்தீர்; அவரது மணிமுடியைத் தரையில் தூக்கி எறிந்தீர். 40. அவருடைய நகர மதில்களைத் தகர்த்தெறிந்தீர்: கோட்டைக் கொத்தளங்கள் அழிவுற விட்டு விட்டீர். 41. வழியில் போவோர் வருவோர் அவரைக் கொள்ளையடித்தனர்: அயலாரின் நகைப்புக்கு அவர் இலக்கானார். 42. எதிரிகளின் வலக்கை ஓங்கச் செய்தீர்: அவரைப் பகைத்தவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியால் துள்ளச் செய்தீர். 43. அவரது வாளின் முனையை முறித்து விட்டீர்: போரின் போது நீர் ஆதரவு காட்டவில்லை. 44. அவரது மாட்சி மறையச் செய்தீர்: அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர். 45. அவரது இளமை விரைவில் முடிவடையச் செய்தீர்: அவமானத்தில் அவரை ஆழ்த்தினீர். 46. எது வரைக்கும் ஆண்டவரே: எந்நாளுமே மறைந்திருப்பீரோ? எதுவரை உமது சினம் நெருப்¢புப் போல் மூண்டெழும்? 47. எவ்வளவு குறுகியது என் வாழ்வு என்பதை நினைவுகூரும்: நீர் படைத்த மனிதர்கள் எவ்வளவு நிலையற்றவர்கள் என்று நினைவுகூரும். 48. சாவுக்குட்படாமல் வாழ்பவன் யார்? கீழுலகின் பிடியினின்று தன் உயிரை விடுவிப்பவன் யார்? 49. ஆண்டவரே, ஆதிகாலத்தில் நீர் காட்டிய தயவெல்லாம் இப்போதெங்கே? உம் சொல்லுறுதியால் தாவீதுக்கு ஆணையிட்டுச் சொன்ன தயவெல்லாம் எங்கே? 50. ஆண்டவரே, உம் ஊழியர் படும் நிந்தனைகளையெல்லாம் நினைவுகூரும்: புறவினத்தார் காட்டும் பகையும் எதிர்ப்பும் என் நெஞ்சிலே தாங்குகிறேனே! 51. ஆண்டவரே, உம் எதிரிகள் நீர் அபிஷுகம் பண்ணினவரைப் பழிக்கிறார்கள்: அவர் போகுமிடமெல்லாம் அவரைத் தூற்றுகிறார்கள். 52. என்றென்றும் ஆண்டவர் போற்றி: ஆமென், ஆமென்!
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References