தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 71

1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்: எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும். எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். 3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கிறீர். 4 தீயவனின் கையினின்று, என் இறைவா, என்னை விடுவித்தருளும்: துன்புறுத்தும் கொடியவனின் பிடியினின்று என்னை விடுவித்தருளும். 5 ஏனெனில், என் இறைவா, நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்: ஆண்டவரே, என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்; தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு: உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கிறேன். 7 நீர் எனக்கு வலிமை மிக்க துணை, எனவே, பலருக்கு நான் புதுமைப் பிறவி போல் உள்ளேன். 8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே. 9 முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்: என் பலம் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். 10 ஏனெனில் என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரை பறிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று கூடிச் சதி செய்கின்றனர். 11 கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து ஓடி அவனைப் பிடியுங்கள்: அவனை விடுவிக்க ஒருவருமில்லை" என்று பேசிக் கொள்கின்றனர். 12 இறைவா, என்னை விட்டு வெகு தொலைவில் போகாதேயும்: என் இறைவா, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 13 என் உயிருக்கு உலைவைப்பவர்கள் ஏமாற்றமடைந்து ஒழிவார்களாக: எனக்குத் தீமை செய்யப் பார்ப்பவர்களை ஏமாற்றமும் வெட்கமும் ஆட்கொள்வதாக. 14 நானோ என்றும் நம்பிக்கையோடிருப்பேன்: ஒவ்வொரு நாளும் மேன் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன். 15 உமது அருள் நன்மையை என் நா எடுத்துரைக்கும்; நாள் முழுவதும் உம் அருட்துணையை எடுத்துச் சொல்லும்: உமது அருட்செயல்களுக்கோ கணக்கே இல்லை. 16 இறைவனின் வல்லமையை எடுத்துரைப்பேன்: ஆண்டவரே, உமக்கு மட்டுமே உரிய நீதி நேர்மையைப் புகழ்ந்து உரைப்பேன். 17 இறைவா, நீர் எனக்கு என் இளமையிலிருந்தே அறிவு புகட்டினீர்: இந்நாள் வரை நான் உமது வியத்தகு செயல்களை வெளிப்படுத்துகிறேன். 18 முதிர் வயதிலும் நகரை திரை பருவத்திலும் இறைவா, நீர் என்னைக் கைவிடாதேயும்: உமது கைவன்மையை இத்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரையிலும், இனி வரும் தலைமுறைகளுக்கு உம் ஆற்றலை நான் கூறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும். 19 வானமட்டும் எட்டுகின்ற உமது நீதி நேர்மையை நான் எடுத்துரைக்கும் வரையிலும் இறைவா, நீரென்னைக் கைவிடாதேயும்: அந்த நீதியாலன்றோ அரியன பெரியன நீர் செய்துள்ளீர். இறைவனே, உமக்கு நிகர் யார்? 20 பல கொடும் துன்பங்களுக்கு நான் ஆளாகச் செய்தீர்: மீளவும் நான் உயிர் பெறச் செய்வீர். 21 பாதாளத்தினின்று என்னை மீளவும் தூக்கிவிடுவீர்: எனக்குள்ள மேன்மையைப் பெருகச் செய்வீர்; மீளவும் என்னைத் தேற்றியருளும். 22 இறைவா, நானும் வீணை கொண்டு உமது சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்: இஸ்ராயேலின் பரிசுத்தரே, யாழ் கொண்டு உமக்குப் புகழ் பாடுவேன். 23 நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்: நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும். 24 நாள் முழுவதும் உம் நீதி நேர்மையை என் நா எடுத்துரைக்கும், ஏனெனில், எனக்குக் கெடுதி செய்யப் பார்ப்பவர்கள் ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார்கள்.
1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்: எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும். .::. 2 உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும். எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். .::. 3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கிறீர். .::. 4 தீயவனின் கையினின்று, என் இறைவா, என்னை விடுவித்தருளும்: துன்புறுத்தும் கொடியவனின் பிடியினின்று என்னை விடுவித்தருளும். .::. 5 ஏனெனில், என் இறைவா, நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்: ஆண்டவரே, என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை. .::. 6 பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்; தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு: உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கிறேன். .::. 7 நீர் எனக்கு வலிமை மிக்க துணை, எனவே, பலருக்கு நான் புதுமைப் பிறவி போல் உள்ளேன். .::. 8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே. .::. 9 முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்: என் பலம் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். .::. 10 ஏனெனில் என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரை பறிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று கூடிச் சதி செய்கின்றனர். .::. 11 கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து ஓடி அவனைப் பிடியுங்கள்: அவனை விடுவிக்க ஒருவருமில்லை" என்று பேசிக் கொள்கின்றனர். .::. 12 இறைவா, என்னை விட்டு வெகு தொலைவில் போகாதேயும்: என் இறைவா, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். .::. 13 என் உயிருக்கு உலைவைப்பவர்கள் ஏமாற்றமடைந்து ஒழிவார்களாக: எனக்குத் தீமை செய்யப் பார்ப்பவர்களை ஏமாற்றமும் வெட்கமும் ஆட்கொள்வதாக. .::. 14 நானோ என்றும் நம்பிக்கையோடிருப்பேன்: ஒவ்வொரு நாளும் மேன் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன். .::. 15 உமது அருள் நன்மையை என் நா எடுத்துரைக்கும்; நாள் முழுவதும் உம் அருட்துணையை எடுத்துச் சொல்லும்: உமது அருட்செயல்களுக்கோ கணக்கே இல்லை. .::. 16 இறைவனின் வல்லமையை எடுத்துரைப்பேன்: ஆண்டவரே, உமக்கு மட்டுமே உரிய நீதி நேர்மையைப் புகழ்ந்து உரைப்பேன். .::. 17 இறைவா, நீர் எனக்கு என் இளமையிலிருந்தே அறிவு புகட்டினீர்: இந்நாள் வரை நான் உமது வியத்தகு செயல்களை வெளிப்படுத்துகிறேன். .::. 18 முதிர் வயதிலும் நகரை திரை பருவத்திலும் இறைவா, நீர் என்னைக் கைவிடாதேயும்: உமது கைவன்மையை இத்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரையிலும், இனி வரும் தலைமுறைகளுக்கு உம் ஆற்றலை நான் கூறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும். .::. 19 வானமட்டும் எட்டுகின்ற உமது நீதி நேர்மையை நான் எடுத்துரைக்கும் வரையிலும் இறைவா, நீரென்னைக் கைவிடாதேயும்: அந்த நீதியாலன்றோ அரியன பெரியன நீர் செய்துள்ளீர். இறைவனே, உமக்கு நிகர் யார்? .::. 20 பல கொடும் துன்பங்களுக்கு நான் ஆளாகச் செய்தீர்: மீளவும் நான் உயிர் பெறச் செய்வீர். .::. 21 பாதாளத்தினின்று என்னை மீளவும் தூக்கிவிடுவீர்: எனக்குள்ள மேன்மையைப் பெருகச் செய்வீர்; மீளவும் என்னைத் தேற்றியருளும். .::. 22 இறைவா, நானும் வீணை கொண்டு உமது சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்: இஸ்ராயேலின் பரிசுத்தரே, யாழ் கொண்டு உமக்குப் புகழ் பாடுவேன். .::. 23 நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்: நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும். .::. 24 நாள் முழுவதும் உம் நீதி நேர்மையை என் நா எடுத்துரைக்கும், ஏனெனில், எனக்குக் கெடுதி செய்யப் பார்ப்பவர்கள் ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார்கள்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References