தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 118

1 அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது இரக்கம். 2 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக. 3 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று ஆரோனின் குலத்தார் சாற்றுவார்களாக. 4 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. 5 துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்: ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலை அளித்தார். 6 ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? எவன் எனக்கு என்ன செய்ய முடியும்? 7 எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்: சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன். 8 மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம். 9 தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம். 10 புறவினத்தார் எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன். 11 எப்பக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன். 12 தேனீக்களைப் போல் என்னை வளைத்துக் கொண்டனர்; நெருப்பில் அகப்பட்ட முட்களைப் போல் எரிந்தனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன். 13 என்னைத் தள்ளினார்கள்; விழத்தாட்டத் தள்ளிப் பார்த்தார்கள்: ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை செய்தார். 14 ஆண்டவர் என் வலிமையும் திடமுமாய் உள்ளார்: எனக்கு அவர் மீட்பரானார். 15 நீதிமான்களின் கூடாரங்களில் இதோ மீட்புக்குறித்து மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது. 16 ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலற்றியது. 17 இறந்தொழியன், உயிர் வாழ்வேன்: ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன். 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்: ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. 19 நீதிமான்கள் நுழையும் வாயில்களை திறந்து விடுங்கள்: உள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இது; இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: எனக்கு நீர் மீட்பரானதால் உமக்கு நன்றி செலுத்துவேன். 22 வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று. 23 ஆண்டவர் செயலிது: நம் கண்ணுக்கு வியப்பே! 24 ஆண்டவர் குறித்த நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம். 25 ஆண்டவரே மீட்டருளும்: ஆண்டவரே வெற்றியைத் தாரும். 26 ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்; ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27 ஆண்டவராகிய இறைவனே, நம்மீது ஒளிவீசினார்: மரக் கிளைகளைக் கையிலேந்தி விழாப்பவனி நடத்துங்கள், பீடத்தின் மூலை வரைக்கும் செல்லுங்கள். 28 என் இறைவன் நீரே, உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்: என் இறைவா, உம்மைப் புகழ்ந்தேத்துகிறேன். 29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
1. அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது இரக்கம். 2. என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக. 3. என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று ஆரோனின் குலத்தார் சாற்றுவார்களாக. 4. என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. 5. துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்: ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலை அளித்தார். 6. ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? எவன் எனக்கு என்ன செய்ய முடியும்? 7. எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்: சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன். 8. மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம். 9. தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம். 10. புறவினத்தார் எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன். 11. எப்பக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன். 12. தேனீக்களைப் போல் என்னை வளைத்துக் கொண்டனர்; நெருப்பில் அகப்பட்ட முட்களைப் போல் எரிந்தனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன். 13. என்னைத் தள்ளினார்கள்; விழத்தாட்டத் தள்ளிப் பார்த்தார்கள்: ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை செய்தார். 14. ஆண்டவர் என் வலிமையும் திடமுமாய் உள்ளார்: எனக்கு அவர் மீட்பரானார். 15. நீதிமான்களின் கூடாரங்களில் இதோ மீட்புக்குறித்து மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது. 16. ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலற்றியது. 17. இறந்தொழியன், உயிர் வாழ்வேன்: ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன். 18. கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்: ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. 19. நீதிமான்கள் நுழையும் வாயில்களை திறந்து விடுங்கள்: உள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20. ஆண்டவரது வாயில் இது; இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21. என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: எனக்கு நீர் மீட்பரானதால் உமக்கு நன்றி செலுத்துவேன். 22. வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று. 23. ஆண்டவர் செயலிது: நம் கண்ணுக்கு வியப்பே! 24. ஆண்டவர் குறித்த நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம். 25. ஆண்டவரே மீட்டருளும்: ஆண்டவரே வெற்றியைத் தாரும். 26. ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்; ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27. ஆண்டவராகிய இறைவனே, நம்மீது ஒளிவீசினார்: மரக் கிளைகளைக் கையிலேந்தி விழாப்பவனி நடத்துங்கள், பீடத்தின் மூலை வரைக்கும் செல்லுங்கள். 28. என் இறைவன் நீரே, உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்: என் இறைவா, உம்மைப் புகழ்ந்தேத்துகிறேன். 29. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References