தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 37

1 தீமை செய்பவர்களைக் கண் எரிச்சல் கொள்ளாதே: அக்கிரமம் செய்வோரைப் பார்த்துப் பொறாமைப் படாதே. 2 ஏனென்றால், அவர்கள் விரைவில் புல்லைப் போல் உலர்ந்து போவார்கள்: புற்பூண்டுகளைப் போல வாடிப் போவார்கள். 3 ஆண்டவர் மீது நம்பிக்கை வை, நன்மை செய்: புனித நாட்டில் எவ்விதக் கவலையின்றி இருப்பாய். 4 ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு: அப்போது உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார். 5 உன் வாழ்வின் முடிவை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவர் பேரில் நம்பிக்கை வைத்திரு: அவரே எல்லாம் செய்வார். 6 உனது நேர்மை ஒளிபோல எழும்பச் செய்வார்: உனது மாசின்மை பட்டப்பகல் போல விளங்கச் செய்வார். 7 ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே. 8 கோபத்தை விட்டு விடு; சினத்தைக் கைவிடு: எரிச்சல்படாதே; அதுவே பாவத்திற்கு வழியாகும். 9 ஏனென்றால், தீமை செய்வோர் நாசமாவார்கள்: ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். 10 இன்னும் சிறிதுகாலம்; தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்: அவன் இருந்த இடத்தைத் தேடுவாய்; ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான். 11 சாந்தமுள்ளோர் புனித நாட்டை உரிமைப்படுத்திக் கொள்வார்கள்: அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர். 12 நீதிமானுக்கு விரோதமாகப் பாவி சதித்திட்டமிடுகிறான்: அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான். 13 ஆண்டவரோ அவனைப் பார்த்து நகைக்கிறார்: அவனது அழிவுக்காலம் நெருங்குவதை அவர் காண்கிறார். 14 ஏழை எளியவரை விழத்தாட்டி, நேரிய பாதையில் நடப்பவர்களைத் தொலைக்க, தீயோர் பட்டயத்தை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகிறார்கள். 15 ஆனால் அவர்களது பட்டயம் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் ஒடிந்து போகும். 16 தீயோருடைய திரளான செல்வத்தை விட, நல்லவருடைய சிறிதளவு பொருள் மேலானது. 17 ஏனெனில், பாவிகளின் வலிமை நிலைகுலைந்து போகும்: ஆண்டவர் நீதிமான்களை நிலை நிறுத்துவார். 18 நீதிமான்களுடைய வாழ்நாட்களைக் குறித்து ஆண்டவர் கருத்தாய் இருக்கிறார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றென்றும் நிற்கும். 19 அழிவின் காலத்தில் அவர்கள் வெட்கிப் போக மாட்டார்கள்: பஞ்ச காலத்திலோ அவர்கள் நிறைவு கொள்வார்கள். 20 ஆனால் தீயோர் அழிவுறுவர்; ஆண்டவருடைய எதிரிகள் செழிப்பான புல்வெளி உலர்வது போல் ஒழிந்துபோவர்: புகை போல் மறைந்தொழிவர். 21 தீயோர் கடன் வாங்கினால், திருப்பிக் கொடுப்பதில்லை: நல்லவரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர். 22 ஆண்டவர் யாருக்குத் தம் ஆசியை அருள்கிறாரோ அவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: யாரைச் சபிக்கிறாரோ அவர்கள் அழிந்து போவார். 23 ஒருவனுடைய வாழ்வின் நெறி உறுதி பெறுவது ஆண்டவராலே: அவனுடைய வாழ்வை அவர் உகந்ததென ஏற்கிறார். 24 அப்போது அவன் கீழே விழுந்தாலும் அப்படியே குப்புறக் கிடக்கமாட்டான்: ஏனெனில் ஆண்டவர் அவனது கையைத் தாங்கிக் கொள்கிறார். 25 இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ முதிர் பருவம் அடைந்துள்ளேன்: நல்லவன் கைவிடப்பட்டதை நான் எந்நாளும் கண்டதில்லை; அவனுடைய மக்கள் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. 26 எப்போதும் அவன் இரக்கப்படுகிறான், கடன் கொடுக்கிறான்: ஆகவே அவன் மக்கள் ஆசி பெறுவர். 27 தீமையை விலக்கு, நன்மை செய்: அப்போது என்றென்றும் வாழ்வாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர். 29 நல்லவர்களோ புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: என்றென்றும் அதில் வாழ்வர். 30 நீதிமானின் வாயிலிருந்து ஞானம் வெளிப்படும்: அவனது நாவு நேரியதை எடுத்துரைக்கும். 31 கடவுளுடைய திருச்சட்டம் அவன் நெஞ்சில் பதிந்துள்ளது: அவனுடைய பாதங்கள் தடுமாறுவதில்லை. 32 தீயவன் நீதிமான் மேலேயே கண்ணாயிருக்கிறான்: அவனைக் கொன்றுவிடப் பார்க்கிறான். 33 ஆனால் ஆண்டவர் அவனைத் தீயவனின் கையில் சிக்கவிட மாட்டார்: நியாயத் தீர்ப்பு நிகழும் போது தண்டனைகளாக விட மாட்டார். 34 ஆண்டவர் மீது நம்பிக்கை வை; அவர் காட்டிய வழியில் நட: அப்போது நீ புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி உன்னை உயர்த்துவார்; தீயோர் அழிவுறுவதைப் பார்த்து மகிழ்வாய். 35 தீயவன் செருக்கித் திரிவதை நான் பார்த்தேன்: செழித்தோங்கும் கேதுரு மரம் போல் சிறந்தோங்குவதைக் கண்டேன். 36 அவ்வழியே மீண்டும் சென்றேன்; அவன் இருக்கிற இடம் தெரியவில்லை: தேடிப் பார்த்தேன், காணவில்லை. 37 நல்லவனைக் கவனித்துப் பார்; நீதிமானை எண்ணிப் பார்: அமைதியை விரும்புகிறவனுக்கு சந்ததியிராமல் போகாது. 38 பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும். 39 நல்லவர்களுக்கு ஈடேற்றம் ஆண்டவரிடமிருந்தே வரும்: துன்ப வேளையில் அவர்களுக்குப் புகலிடம் அவரே. 40 ஆண்டவர் அவர்களுக்குத் துணை நின்று விடுதலையளிக்கிறார்; தீயோரின் கையினின்று விடுவித்துக் காப்பாற்றுகிறார்: ஏனெனில், அவர்கள் அவரிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.
1. தீமை செய்பவர்களைக் கண் எரிச்சல் கொள்ளாதே: அக்கிரமம் செய்வோரைப் பார்த்துப் பொறாமைப் படாதே. 2. ஏனென்றால், அவர்கள் விரைவில் புல்லைப் போல் உலர்ந்து போவார்கள்: புற்பூண்டுகளைப் போல வாடிப் போவார்கள். 3. ஆண்டவர் மீது நம்பிக்கை வை, நன்மை செய்: புனித நாட்டில் எவ்விதக் கவலையின்றி இருப்பாய். 4. ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு: அப்போது உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார். 5. உன் வாழ்வின் முடிவை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவர் பேரில் நம்பிக்கை வைத்திரு: அவரே எல்லாம் செய்வார். 6. உனது நேர்மை ஒளிபோல எழும்பச் செய்வார்: உனது மாசின்மை பட்டப்பகல் போல விளங்கச் செய்வார். 7. ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே. 8. கோபத்தை விட்டு விடு; சினத்தைக் கைவிடு: எரிச்சல்படாதே; அதுவே பாவத்திற்கு வழியாகும். 9. ஏனென்றால், தீமை செய்வோர் நாசமாவார்கள்: ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். 10. இன்னும் சிறிதுகாலம்; தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்: அவன் இருந்த இடத்தைத் தேடுவாய்; ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான். 11. சாந்தமுள்ளோர் புனித நாட்டை உரிமைப்படுத்திக் கொள்வார்கள்: அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர். 12. நீதிமானுக்கு விரோதமாகப் பாவி சதித்திட்டமிடுகிறான்: அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான். 13. ஆண்டவரோ அவனைப் பார்த்து நகைக்கிறார்: அவனது அழிவுக்காலம் நெருங்குவதை அவர் காண்கிறார். 14. ஏழை எளியவரை விழத்தாட்டி, நேரிய பாதையில் நடப்பவர்களைத் தொலைக்க, தீயோர் பட்டயத்தை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகிறார்கள். 15. ஆனால் அவர்களது பட்டயம் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் ஒடிந்து போகும். 16. தீயோருடைய திரளான செல்வத்தை விட, நல்லவருடைய சிறிதளவு பொருள் மேலானது. 17. ஏனெனில், பாவிகளின் வலிமை நிலைகுலைந்து போகும்: ஆண்டவர் நீதிமான்களை நிலை நிறுத்துவார். 18. நீதிமான்களுடைய வாழ்நாட்களைக் குறித்து ஆண்டவர் கருத்தாய் இருக்கிறார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றென்றும் நிற்கும். 19. அழிவின் காலத்தில் அவர்கள் வெட்கிப் போக மாட்டார்கள்: பஞ்ச காலத்திலோ அவர்கள் நிறைவு கொள்வார்கள். 20. ஆனால் தீயோர் அழிவுறுவர்; ஆண்டவருடைய எதிரிகள் செழிப்பான புல்வெளி உலர்வது போல் ஒழிந்துபோவர்: புகை போல் மறைந்தொழிவர். 21. தீயோர் கடன் வாங்கினால், திருப்பிக் கொடுப்பதில்லை: நல்லவரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர். 22. ஆண்டவர் யாருக்குத் தம் ஆசியை அருள்கிறாரோ அவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: யாரைச் சபிக்கிறாரோ அவர்கள் அழிந்து போவார். 23. ஒருவனுடைய வாழ்வின் நெறி உறுதி பெறுவது ஆண்டவராலே: அவனுடைய வாழ்வை அவர் உகந்ததென ஏற்கிறார். 24. அப்போது அவன் கீழே விழுந்தாலும் அப்படியே குப்புறக் கிடக்கமாட்டான்: ஏனெனில் ஆண்டவர் அவனது கையைத் தாங்கிக் கொள்கிறார். 25. இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ முதிர் பருவம் அடைந்துள்ளேன்: நல்லவன் கைவிடப்பட்டதை நான் எந்நாளும் கண்டதில்லை; அவனுடைய மக்கள் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. 26. எப்போதும் அவன் இரக்கப்படுகிறான், கடன் கொடுக்கிறான்: ஆகவே அவன் மக்கள் ஆசி பெறுவர். 27. தீமையை விலக்கு, நன்மை செய்: அப்போது என்றென்றும் வாழ்வாய். 28. ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர். 29. நல்லவர்களோ புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: என்றென்றும் அதில் வாழ்வர். 30. நீதிமானின் வாயிலிருந்து ஞானம் வெளிப்படும்: அவனது நாவு நேரியதை எடுத்துரைக்கும். 31. கடவுளுடைய திருச்சட்டம் அவன் நெஞ்சில் பதிந்துள்ளது: அவனுடைய பாதங்கள் தடுமாறுவதில்லை. 32. தீயவன் நீதிமான் மேலேயே கண்ணாயிருக்கிறான்: அவனைக் கொன்றுவிடப் பார்க்கிறான். 33. ஆனால் ஆண்டவர் அவனைத் தீயவனின் கையில் சிக்கவிட மாட்டார்: நியாயத் தீர்ப்பு நிகழும் போது தண்டனைகளாக விட மாட்டார். 34. ஆண்டவர் மீது நம்பிக்கை வை; அவர் காட்டிய வழியில் நட: அப்போது நீ புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி உன்னை உயர்த்துவார்; தீயோர் அழிவுறுவதைப் பார்த்து மகிழ்வாய். 35. தீயவன் செருக்கித் திரிவதை நான் பார்த்தேன்: செழித்தோங்கும் கேதுரு மரம் போல் சிறந்தோங்குவதைக் கண்டேன். 36. அவ்வழியே மீண்டும் சென்றேன்; அவன் இருக்கிற இடம் தெரியவில்லை: தேடிப் பார்த்தேன், காணவில்லை. 37. நல்லவனைக் கவனித்துப் பார்; நீதிமானை எண்ணிப் பார்: அமைதியை விரும்புகிறவனுக்கு சந்ததியிராமல் போகாது. 38. பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும். 39. நல்லவர்களுக்கு ஈடேற்றம் ஆண்டவரிடமிருந்தே வரும்: துன்ப வேளையில் அவர்களுக்குப் புகலிடம் அவரே. 40. ஆண்டவர் அவர்களுக்குத் துணை நின்று விடுதலையளிக்கிறார்; தீயோரின் கையினின்று விடுவித்துக் காப்பாற்றுகிறார்: ஏனெனில், அவர்கள் அவரிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References