தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா

எரேமியா அதிகாரம் 31

1 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: அக்காலத்தில், இஸ்ராயேலின் எல்லாக் குடும்பங்களுக்கும் நாமே கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார்." 2 ஆண்டவர் கூறுகிறார்: "வாளுக்குத் தப்பிப் பிழைத்த ஒரு மக்களினம், பாலைநிலத்தில் நம் அருளைக் கண்டடைந்தது; இஸ்ராயேல் இளைப்பாற்றியைத் தேடிய போது, 3 ஆண்டவர் அவனுக்குத் தொலைவில் தோன்றினார்; முடிவில்லாத அன்பினால் உன்மேல் அன்பு வைத்தோம், ஆதலால் உனக்குத் தொடர்ந்து அன்பு செய்கிறோம். 4 இஸ்ராயேலாகிய கன்னிப் பெண்ணே, உன்னை நாம் மீண்டும் கட்டுவோம், நீ கட்டப்படுவாய்; மீண்டும் நீ மேளத்தோடு மகிழ்ச்சி கொண்டாடுவாரோடு ஆடிப்பாடி வெளிப்படுவாய். 5 சமாரியா நாட்டு மலைகளின் மேல் மீண்டும் நீ திராட்சைக் கொடிகளை நடுவாய்; நடுகிறவர்கள் நடுவார்கள், அதன் கனிகளை உண்டு களிப்பார்கள்; 6 நாள் வரும்; அப்போது எப்பிராயீம் மலையில் காவலர், 'எழுந்து வாருங்கள், சீயோனுக்கு நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று கூவுவார்கள்." 7 ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: "யாக்கோபைக் குறித்து மகிழ்ச்சியினால் அக்களியுங்கள்; மக்களின் தலைவர்களைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் குரலையுயர்த்தி அறிவியுங்கள், புகழ் பாடுங்கள்: 'ஆண்டவர் தம் மக்களை மீட்டார், இஸ்ராயேலில் எஞ்சினவர்களை மீட்டார்' என்று சொல்லுங்கள். 8 இதோ, வட நாட்டினின்று நாம் அவர்களை அழைத்து வருவோம்; பூமியின் கடைகோடிகளினின்று அவர்களை ஒருமிக்கச் சேர்ப்போம்; அவர்களுள் குருடரும் முடவரும் கர்ப்பவதிகளும் பிரசவப் பெண்களும் இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து பெருங் கூட்டமாய்த் திரும்பி வருவார்கள். 9 அவர்கள் அழுகையோடு திரும்பி வருவார்கள்; நாமோ இரக்கத்தோடு அவர்களை அழைத்து வருவோம்; நீரோடைகளின் அருகிலேயே அவர்களை நடக்கச் செய்வோம்; இடறாத செம்மையான நேர் வழியில் நடத்தி வருவோம்; ஏனெனில் இஸ்ராயேலுக்கு நாமே தந்தை; எப்பிராயீமோ நமக்குத் தலைப்பேறான பிள்ளை. 10 புறவினத்தாரே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்: கேட்டுத் தொலைவிலுள்ள தீவுகளுக்கு அறிவியுங்கள்: 'இஸ்ராயேலைச் சிதறடித்தவர் அவர்களைச் சேர்ப்பார், ஆயன் மந்தையைக் காப்பது போல் அவர்களைக் காப்பார்' என்று சொல்லுங்கள். 11 ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார்; வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் பாடிப் போற்றுவார்கள், ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும் நன்மைகளாகிய கோதுமை, திராட்சை ரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், மாட்டு மந்தைகள் ஆகியவற்றை நாடிக் கூட்டமாய் ஓடி வருவார்கள்; அவர்களுடைய வாழ்க்கை நீர்வளம் மிக்க நிலம் போலிருக்கும்; இனி அவர்கள் வருந்த மாட்டார்கள். 13 அப்போது கன்னிப் பெண்கள் நாட்டிய மாடிக் களிப்பார்கள்; இளைஞரும் முதியோரும் அவ்வாறே மகிழ்வார்கள்; அவர்களுடைய அழுகையை அக்களிப்பாக மாற்றுவோம்; அவர்களைத் தேற்றித் துயரத்தைப் போக்கி, அவர்களை மகிழச் செய்வோம். 14 அர்ச்சகர்களின் உள்ளத்தைச் செழுமையானவற்றால் பூரிக்கச் செய்வோம்; நம் மக்கள் நம்முடைய நன்மைத்தனத்தால் நிரப்பப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்." 15 ஆண்டவர் கூறுகிறார்: "ராமாவிலே கூக்குரல் கேட்டது; பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது; இராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெற விரும்பவில்லை." 16 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "நீ வீறிட்டழாதே, கண்ணீர் வடிக்காதே; உன் வேலைக்குத் தக்க கைம்மாறு கிடைக்கும், பகைவனின் நாட்டிலிருந்து அவர்கள் வருவார்கள், 17 எதிர்காலத்திற்கு உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் திரும்பத் தங்கள் சொந்த நாட்டிற்கே வந்து சேருவார்கள், என்கிறார் ஆண்டவர். 18 எப்பிராயீம் அழுது புலம்பியதை நாம் கேட்டோம்: 'நான் அடங்காத காளை போல் இருந்தேன், நீர் என்னைத் தண்டித்தீர், நான் தண்டனை பெற்றேன்; நீர் என்னைத் திரும்பக் கொண்டு வாரும், நானும் திரும்புவேன்; ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் நீரே. 19 நான் உம்மை விட்டு விலகிய பின் மனம் வருந்தினேன்; எனக்கு நீர் அறிவுறுத்திய பின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்; என் வாலிப வயதின் அவமானத்தைக் கண்டு நான் வெட்கி நாணி மயங்கினேன்' என்றழுதான். 20 எப்பிராயீம் நம் அருமையான மகனல்லனோ? அவன் நம்முடைய அன்புக் குழந்தையன்றோ? நாம் அவனை அச்சுறுத்தும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்ளுகிறோம். அவனை நினைத்து நம் உள்ளம் உருகுகின்றது; அவனுக்கு நாம் திண்ணமாய் இரக்கம் காட்டுவோம், என்கிறார் ஆண்டவர். 21 உனக்கு வழியடையாளங்களை நிறுத்திக்கொள்; கைகாட்டிகளை உனக்கென நாட்டிக்கொள்; நீ நடத்துபோன வழியாகிய நெடுஞ்சாலையைக் கவனித்துப்பார்; இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண்ணே, திரும்பிவா; உன் நகரங்களாகிய இவற்றுக்குத் திரும்பிவா. 22 பிரமாணிக்கமில்லாத மகளே, இன்னும் எத்துணைக் காலம் நீ இவ்வாறு தத்தளிப்பாய்? ஏனெனில் பூமியில் ஆண்டவர் புதுமையான ஒன்றைப் படைக்கிறார்: மனைவி தன் கணவனைத் தேடிச் செல்கிறாள்." 23 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "நாம் அவர்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்பக் கொண்டு வரும்போது, யூதாவின் நாட்டிலும் அதன் நகரங்களிலும், 'நீதியின் இருப்பிடமே, பரிசுத்த மலையே, ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக' என்று இன்னும் மக்கள் சொல்வார்கள். 24 உழவர்களும், மந்தைகளை மேய்க்கும் இடையர்களும், யூதா நாட்டிலும், அதன் பட்டணங்களிலும் ஒருமித்துக் குடியிருப்பார்கள். 25 சோர்ந்த உள்ளத்தை நாம் ஊக்குவோம்; பசித்தவன் எவனையும் திருப்தியாக்குவோம்." 26 அப்போது நான் விழித்தெழுந்து பார்த்தேன்; என் உறக்கம் எனக்கு இன்பமாயிருந்தது. 27 "இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது இஸ்ராயேலின் வீட்டிலும் யூதாவின் வீட்டிலும் மனிதரையும் மிருகங்களையும் விதைகளைப் போல விதைப்போம், என்கிறார் ஆண்டவர். 28 பிடுங்கவும் தகர்க்கவும் சிதறடிக்கவும் அழிக்கவும் துன்பப்படுத்தவும் அவர்களை எப்படிக் கவனித்துக் கெண்டிருந்தோமோ, அப்படியே அவர்களைக் கட்டி நிலைநாட்டவும் கவனித்துக் கொண்டிருப்போம், என்கிறார் ஆண்டவர். 29 தன் செயலுக்குத் தானே பொறுப்பாளி: "அந்நாட்களில் அவர்கள், 'தந்தையர் திராட்சைக் காய் தின்ன, பிள்ளைகளுக்குப் பல் கூசிற்றாம்' என்று இனிச் சொல்ல மாட்டார்கள். 30 ஆனால் ஒவ்வொருவனும் அவனவன் பாவத்திற்காகச் சாவான்; திராட்சைக் காயைத் தின்னும் மனிதனுக்குத் தான் பற்கள் கூசும். 31 "இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை செய்வோம், என்கிறார் ஆண்டவர்; 32 இது, நாம் எகிப்து நாட்டினின்று விடுவித்து, இவர்களுடைய தந்தையரைக் கைபிடித்து நடத்தி வந்த போது நாம் அவர்களோடு செய்த உடன் படிக்கையைப் போன்றிராது; நாம் அவர்களின் தலைவராய் இருந்தும் நம் உடன்படிக்கையை அவர்கள் முறித்துப் போட்டார்கள், என்கிறார் ஆண்டவர். 33 அந்நாள் வரும் போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடு செய்யப்போகும் உடன்படிக்கை இதுவே: நமது திருச்சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்போம்; அவர்களுடைய இதயங்களின் மேல் அதை எழுதுவோம்; நாம் அவர்களின் கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பர், என்கிறார் ஆண்டவர். 34 இனி ஒவ்வொருவனும் தன் அயலானையோ, தன் சகோதரனையோ பார்த்து, 'ஆண்டவரை அறிந்து கொள்' என்று சொல்லிக் கற்பிக்க மாட்டான்; ஏனெனில், அவர்களுள் சிறியவன் முதல் பெரியவன் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் அவர்களுடைய அக்கிரமத்தை நாம் மன்னித்து விடுவோம், அவர்களுடைய பாவத்தை இனி மேல் நினைவுகூரவே மாட்டோம்." 35 இஸ்ராயேல் நிலைத்திருக்கும்: ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்; அவர் பகலில் ஒளி வீசக் கதிரவனையும், இரவில் ஒளி கொடுக்க நிலவின் குறிப்பிட்ட முறைமையையும் விண்மீன்களையும் தருகிறவர்; அவர் கடலைக் கொந்தளிக்கச் செய்து அலைகளை ஒலிக்கச் செய்கிறவர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்: அவர் சொல்வது: 36 மேற்படி ஒழுங்கு முறைமை நம் முன்னிலையிலிருந்து நீங்கிப் போகுமாயின், இஸ்ராயேலின் சந்ததியும் நம் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமற் போகும். என்கிறார் ஆண்டவர்." 37 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "மேலே வான்வெளி அளக்கப்படுமாயின் கீழே பூமியின் அடிப்படைகள் சோதிக்கப்படக் கூடுமாயின், நமக்கு விரோதமாய் இஸ்ராயேல் மக்கள் செய்தவற்றை முன்னிட்டு அதன் சந்ததியார் அனைவரையும் நாம் (முற்றிலும்) கைவிடுவோம், என்கிறார் ஆண்டவர். 38 இதோ, நாட்கள் வருகின்றன; ஆண்டவருக்காக இப்பட்டணம் அனானியேல் கோபுரம் முதல் மூலை வாயில் வரையில் கட்டப்படும், என்கிறார் ஆண்டவர். 39 அதனை அளக்கும் நூல் நேராகக் காரேபு குன்று வரையில் போய்க் கோவா அருகில் திரும்பும். 40 பிணங்களும் சாம்பலும் நிறைந்த பள்ளத்தாக்கு முழுவதும், கேதிரோன் அருவி வரையில் உள்ள நிலப்பரப்பும், கிழக்கே உள்ள குதிரை வாயிலின் மூலை வரையிலும் அதனுள் அடங்கும். ஆண்டவருக்காக அர்ச்சிக்கப்பட்ட இந்த இடம் இனி என்றும் அழியாது, இடிபடாது."
1 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: அக்காலத்தில், இஸ்ராயேலின் எல்லாக் குடும்பங்களுக்கும் நாமே கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார்." .::. 2 ஆண்டவர் கூறுகிறார்: "வாளுக்குத் தப்பிப் பிழைத்த ஒரு மக்களினம், பாலைநிலத்தில் நம் அருளைக் கண்டடைந்தது; இஸ்ராயேல் இளைப்பாற்றியைத் தேடிய போது, .::. 3 ஆண்டவர் அவனுக்குத் தொலைவில் தோன்றினார்; முடிவில்லாத அன்பினால் உன்மேல் அன்பு வைத்தோம், ஆதலால் உனக்குத் தொடர்ந்து அன்பு செய்கிறோம். .::. 4 இஸ்ராயேலாகிய கன்னிப் பெண்ணே, உன்னை நாம் மீண்டும் கட்டுவோம், நீ கட்டப்படுவாய்; மீண்டும் நீ மேளத்தோடு மகிழ்ச்சி கொண்டாடுவாரோடு ஆடிப்பாடி வெளிப்படுவாய். .::. 5 சமாரியா நாட்டு மலைகளின் மேல் மீண்டும் நீ திராட்சைக் கொடிகளை நடுவாய்; நடுகிறவர்கள் நடுவார்கள், அதன் கனிகளை உண்டு களிப்பார்கள்; .::. 6 நாள் வரும்; அப்போது எப்பிராயீம் மலையில் காவலர், 'எழுந்து வாருங்கள், சீயோனுக்கு நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று கூவுவார்கள்." .::. 7 ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: "யாக்கோபைக் குறித்து மகிழ்ச்சியினால் அக்களியுங்கள்; மக்களின் தலைவர்களைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் குரலையுயர்த்தி அறிவியுங்கள், புகழ் பாடுங்கள்: 'ஆண்டவர் தம் மக்களை மீட்டார், இஸ்ராயேலில் எஞ்சினவர்களை மீட்டார்' என்று சொல்லுங்கள். .::. 8 இதோ, வட நாட்டினின்று நாம் அவர்களை அழைத்து வருவோம்; பூமியின் கடைகோடிகளினின்று அவர்களை ஒருமிக்கச் சேர்ப்போம்; அவர்களுள் குருடரும் முடவரும் கர்ப்பவதிகளும் பிரசவப் பெண்களும் இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து பெருங் கூட்டமாய்த் திரும்பி வருவார்கள். .::. 9 அவர்கள் அழுகையோடு திரும்பி வருவார்கள்; நாமோ இரக்கத்தோடு அவர்களை அழைத்து வருவோம்; நீரோடைகளின் அருகிலேயே அவர்களை நடக்கச் செய்வோம்; இடறாத செம்மையான நேர் வழியில் நடத்தி வருவோம்; ஏனெனில் இஸ்ராயேலுக்கு நாமே தந்தை; எப்பிராயீமோ நமக்குத் தலைப்பேறான பிள்ளை. .::. 10 புறவினத்தாரே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்: கேட்டுத் தொலைவிலுள்ள தீவுகளுக்கு அறிவியுங்கள்: 'இஸ்ராயேலைச் சிதறடித்தவர் அவர்களைச் சேர்ப்பார், ஆயன் மந்தையைக் காப்பது போல் அவர்களைக் காப்பார்' என்று சொல்லுங்கள். .::. 11 ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார்; வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். .::. 12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் பாடிப் போற்றுவார்கள், ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும் நன்மைகளாகிய கோதுமை, திராட்சை ரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், மாட்டு மந்தைகள் ஆகியவற்றை நாடிக் கூட்டமாய் ஓடி வருவார்கள்; அவர்களுடைய வாழ்க்கை நீர்வளம் மிக்க நிலம் போலிருக்கும்; இனி அவர்கள் வருந்த மாட்டார்கள். .::. 13 அப்போது கன்னிப் பெண்கள் நாட்டிய மாடிக் களிப்பார்கள்; இளைஞரும் முதியோரும் அவ்வாறே மகிழ்வார்கள்; அவர்களுடைய அழுகையை அக்களிப்பாக மாற்றுவோம்; அவர்களைத் தேற்றித் துயரத்தைப் போக்கி, அவர்களை மகிழச் செய்வோம். .::. 14 அர்ச்சகர்களின் உள்ளத்தைச் செழுமையானவற்றால் பூரிக்கச் செய்வோம்; நம் மக்கள் நம்முடைய நன்மைத்தனத்தால் நிரப்பப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்." .::. 15 ஆண்டவர் கூறுகிறார்: "ராமாவிலே கூக்குரல் கேட்டது; பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது; இராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெற விரும்பவில்லை." .::. 16 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "நீ வீறிட்டழாதே, கண்ணீர் வடிக்காதே; உன் வேலைக்குத் தக்க கைம்மாறு கிடைக்கும், பகைவனின் நாட்டிலிருந்து அவர்கள் வருவார்கள், .::. 17 எதிர்காலத்திற்கு உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் திரும்பத் தங்கள் சொந்த நாட்டிற்கே வந்து சேருவார்கள், என்கிறார் ஆண்டவர். .::. 18 எப்பிராயீம் அழுது புலம்பியதை நாம் கேட்டோம்: 'நான் அடங்காத காளை போல் இருந்தேன், நீர் என்னைத் தண்டித்தீர், நான் தண்டனை பெற்றேன்; நீர் என்னைத் திரும்பக் கொண்டு வாரும், நானும் திரும்புவேன்; ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் நீரே. .::. 19 நான் உம்மை விட்டு விலகிய பின் மனம் வருந்தினேன்; எனக்கு நீர் அறிவுறுத்திய பின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்; என் வாலிப வயதின் அவமானத்தைக் கண்டு நான் வெட்கி நாணி மயங்கினேன்' என்றழுதான். .::. 20 எப்பிராயீம் நம் அருமையான மகனல்லனோ? அவன் நம்முடைய அன்புக் குழந்தையன்றோ? நாம் அவனை அச்சுறுத்தும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்ளுகிறோம். அவனை நினைத்து நம் உள்ளம் உருகுகின்றது; அவனுக்கு நாம் திண்ணமாய் இரக்கம் காட்டுவோம், என்கிறார் ஆண்டவர். .::. 21 உனக்கு வழியடையாளங்களை நிறுத்திக்கொள்; கைகாட்டிகளை உனக்கென நாட்டிக்கொள்; நீ நடத்துபோன வழியாகிய நெடுஞ்சாலையைக் கவனித்துப்பார்; இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண்ணே, திரும்பிவா; உன் நகரங்களாகிய இவற்றுக்குத் திரும்பிவா. .::. 22 பிரமாணிக்கமில்லாத மகளே, இன்னும் எத்துணைக் காலம் நீ இவ்வாறு தத்தளிப்பாய்? ஏனெனில் பூமியில் ஆண்டவர் புதுமையான ஒன்றைப் படைக்கிறார்: மனைவி தன் கணவனைத் தேடிச் செல்கிறாள்." .::. 23 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "நாம் அவர்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்பக் கொண்டு வரும்போது, யூதாவின் நாட்டிலும் அதன் நகரங்களிலும், 'நீதியின் இருப்பிடமே, பரிசுத்த மலையே, ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக' என்று இன்னும் மக்கள் சொல்வார்கள். .::. 24 உழவர்களும், மந்தைகளை மேய்க்கும் இடையர்களும், யூதா நாட்டிலும், அதன் பட்டணங்களிலும் ஒருமித்துக் குடியிருப்பார்கள். .::. 25 சோர்ந்த உள்ளத்தை நாம் ஊக்குவோம்; பசித்தவன் எவனையும் திருப்தியாக்குவோம்." .::. 26 அப்போது நான் விழித்தெழுந்து பார்த்தேன்; என் உறக்கம் எனக்கு இன்பமாயிருந்தது. .::. 27 "இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது இஸ்ராயேலின் வீட்டிலும் யூதாவின் வீட்டிலும் மனிதரையும் மிருகங்களையும் விதைகளைப் போல விதைப்போம், என்கிறார் ஆண்டவர். .::. 28 பிடுங்கவும் தகர்க்கவும் சிதறடிக்கவும் அழிக்கவும் துன்பப்படுத்தவும் அவர்களை எப்படிக் கவனித்துக் கெண்டிருந்தோமோ, அப்படியே அவர்களைக் கட்டி நிலைநாட்டவும் கவனித்துக் கொண்டிருப்போம், என்கிறார் ஆண்டவர். .::. 29 தன் செயலுக்குத் தானே பொறுப்பாளி: "அந்நாட்களில் அவர்கள், 'தந்தையர் திராட்சைக் காய் தின்ன, பிள்ளைகளுக்குப் பல் கூசிற்றாம்' என்று இனிச் சொல்ல மாட்டார்கள். .::. 30 ஆனால் ஒவ்வொருவனும் அவனவன் பாவத்திற்காகச் சாவான்; திராட்சைக் காயைத் தின்னும் மனிதனுக்குத் தான் பற்கள் கூசும். .::. 31 "இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை செய்வோம், என்கிறார் ஆண்டவர்; .::. 32 இது, நாம் எகிப்து நாட்டினின்று விடுவித்து, இவர்களுடைய தந்தையரைக் கைபிடித்து நடத்தி வந்த போது நாம் அவர்களோடு செய்த உடன் படிக்கையைப் போன்றிராது; நாம் அவர்களின் தலைவராய் இருந்தும் நம் உடன்படிக்கையை அவர்கள் முறித்துப் போட்டார்கள், என்கிறார் ஆண்டவர். .::. 33 அந்நாள் வரும் போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடு செய்யப்போகும் உடன்படிக்கை இதுவே: நமது திருச்சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்போம்; அவர்களுடைய இதயங்களின் மேல் அதை எழுதுவோம்; நாம் அவர்களின் கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பர், என்கிறார் ஆண்டவர். .::. 34 இனி ஒவ்வொருவனும் தன் அயலானையோ, தன் சகோதரனையோ பார்த்து, 'ஆண்டவரை அறிந்து கொள்' என்று சொல்லிக் கற்பிக்க மாட்டான்; ஏனெனில், அவர்களுள் சிறியவன் முதல் பெரியவன் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் அவர்களுடைய அக்கிரமத்தை நாம் மன்னித்து விடுவோம், அவர்களுடைய பாவத்தை இனி மேல் நினைவுகூரவே மாட்டோம்." .::. 35 இஸ்ராயேல் நிலைத்திருக்கும்: ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்; அவர் பகலில் ஒளி வீசக் கதிரவனையும், இரவில் ஒளி கொடுக்க நிலவின் குறிப்பிட்ட முறைமையையும் விண்மீன்களையும் தருகிறவர்; அவர் கடலைக் கொந்தளிக்கச் செய்து அலைகளை ஒலிக்கச் செய்கிறவர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்: அவர் சொல்வது: .::. 36 மேற்படி ஒழுங்கு முறைமை நம் முன்னிலையிலிருந்து நீங்கிப் போகுமாயின், இஸ்ராயேலின் சந்ததியும் நம் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமற் போகும். என்கிறார் ஆண்டவர்." .::. 37 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "மேலே வான்வெளி அளக்கப்படுமாயின் கீழே பூமியின் அடிப்படைகள் சோதிக்கப்படக் கூடுமாயின், நமக்கு விரோதமாய் இஸ்ராயேல் மக்கள் செய்தவற்றை முன்னிட்டு அதன் சந்ததியார் அனைவரையும் நாம் (முற்றிலும்) கைவிடுவோம், என்கிறார் ஆண்டவர். .::. 38 இதோ, நாட்கள் வருகின்றன; ஆண்டவருக்காக இப்பட்டணம் அனானியேல் கோபுரம் முதல் மூலை வாயில் வரையில் கட்டப்படும், என்கிறார் ஆண்டவர். .::. 39 அதனை அளக்கும் நூல் நேராகக் காரேபு குன்று வரையில் போய்க் கோவா அருகில் திரும்பும். .::. 40 பிணங்களும் சாம்பலும் நிறைந்த பள்ளத்தாக்கு முழுவதும், கேதிரோன் அருவி வரையில் உள்ள நிலப்பரப்பும், கிழக்கே உள்ள குதிரை வாயிலின் மூலை வரையிலும் அதனுள் அடங்கும். ஆண்டவருக்காக அர்ச்சிக்கப்பட்ட இந்த இடம் இனி என்றும் அழியாது, இடிபடாது."
  • எரேமியா அதிகாரம் 1  
  • எரேமியா அதிகாரம் 2  
  • எரேமியா அதிகாரம் 3  
  • எரேமியா அதிகாரம் 4  
  • எரேமியா அதிகாரம் 5  
  • எரேமியா அதிகாரம் 6  
  • எரேமியா அதிகாரம் 7  
  • எரேமியா அதிகாரம் 8  
  • எரேமியா அதிகாரம் 9  
  • எரேமியா அதிகாரம் 10  
  • எரேமியா அதிகாரம் 11  
  • எரேமியா அதிகாரம் 12  
  • எரேமியா அதிகாரம் 13  
  • எரேமியா அதிகாரம் 14  
  • எரேமியா அதிகாரம் 15  
  • எரேமியா அதிகாரம் 16  
  • எரேமியா அதிகாரம் 17  
  • எரேமியா அதிகாரம் 18  
  • எரேமியா அதிகாரம் 19  
  • எரேமியா அதிகாரம் 20  
  • எரேமியா அதிகாரம் 21  
  • எரேமியா அதிகாரம் 22  
  • எரேமியா அதிகாரம் 23  
  • எரேமியா அதிகாரம் 24  
  • எரேமியா அதிகாரம் 25  
  • எரேமியா அதிகாரம் 26  
  • எரேமியா அதிகாரம் 27  
  • எரேமியா அதிகாரம் 28  
  • எரேமியா அதிகாரம் 29  
  • எரேமியா அதிகாரம் 30  
  • எரேமியா அதிகாரம் 31  
  • எரேமியா அதிகாரம் 32  
  • எரேமியா அதிகாரம் 33  
  • எரேமியா அதிகாரம் 34  
  • எரேமியா அதிகாரம் 35  
  • எரேமியா அதிகாரம் 36  
  • எரேமியா அதிகாரம் 37  
  • எரேமியா அதிகாரம் 38  
  • எரேமியா அதிகாரம் 39  
  • எரேமியா அதிகாரம் 40  
  • எரேமியா அதிகாரம் 41  
  • எரேமியா அதிகாரம் 42  
  • எரேமியா அதிகாரம் 43  
  • எரேமியா அதிகாரம் 44  
  • எரேமியா அதிகாரம் 45  
  • எரேமியா அதிகாரம் 46  
  • எரேமியா அதிகாரம் 47  
  • எரேமியா அதிகாரம் 48  
  • எரேமியா அதிகாரம் 49  
  • எரேமியா அதிகாரம் 50  
  • எரேமியா அதிகாரம் 51  
  • எரேமியா அதிகாரம் 52  
×

Alert

×

Tamil Letters Keypad References