தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா

எரேமியா அதிகாரம் 14

1 மழையில்லா வறட்சியைப் பற்றி எரெமியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: 2 யூதா கதறியழுகிறது; அதன் வாயில்கள் சோர்ந்து போயின; அதன் மக்கள் தரையில் உட்கார்ந்து புலம்புகிறார்கள்; யெருசலேமின் கூக்கூரல் எழும்புகிறது. 3 அதன் பெருங்குடி மக்கள் தங்கள் ஊழியரைத் தண்ணீருக்கனுப்புகிறார்கள்; அவர்கள் கேணிக்குச் செல்கிறார்கள்; தண்ணீரைக் காணாமல் வெறும் குடத்தோடு திரும்புகிறார்கள்; வெட்கி நாணித் தங்கள் தலையை மூடிக் கொள்கிறார்கள். 4 பூமியில் மழையில்லாமையால், கழனியெல்லாம் வெடித்திருக்கிறது; உழவர்கள் நாணித் தலையில் முக்காடிட்டுக் கொள்கிறார்கள். 5 கன்று போடும் பெண் மானும் காட்டிலே புல்லில்லாமையால் தன் கன்றைக் கைவிட்டு ஓடிப் போகும். 6 காட்டுக் கழுதைகள் மொட்டைக் குன்றுகள் மேல் நின்று, குள்ள நரிகளைப் போலக் காற்றுக்காக மூச்சுத் திணறுகின்றன; பச்சையே காணாததால் கண் பூத்து விழுகின்றன. 7 ஆண்டவரே, எங்கள் பாவங்களுக்கு எண்ணிக்கையில்லை; உமக்கு விரோதமாய் நாங்கள் துரோகம் செய்தோம்; எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொன்னாலும், உமது பெயரை முன்னிட்டு இரங்கியருளும். 8 இஸ்ராயேலின் நம்பிக்கையே, துன்ப வேளையில் அதன் மீட்பரே, உமது நாட்டில் நீர் அந்நியனைப் போல் இருப்பதேன்? இராத்தங்க நின்ற வழிப்போக்கனைப் போல் இருப்பதேன்? 9 மதி மயங்கிய மனிதனைப் போல நீர் ஆவானேன்? காப்பாற்றும் திறனற்ற வீரனுக்கு ஒப்பாவானேன்? ஆயினும் ஆண்டவரே, நீர் எங்கள் நடுவில் இருக்கின்றீர்; நாங்கள் உம் பெயரைப் பூண்டிருக்கிறோம்; ஆதலால் எங்களைக் கைவிட வேண்டாம்." 10 இந்த மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: "அவர்கள் இவ்வாறு அலைந்து திரிய விரும்பினார்கள்; தங்கள் கால்களைக் கட்டுப்படுத்தவில்லை; ஆகையால் ஆண்டவர் அவர்களை ஏற்றுக் கொள்கிறதில்லை; இப்பொழுது அவர்களுடைய அக்கிரமத்தை நினைவு கூர்ந்து அவர்களைத் தண்டிப்பார்." 11 ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "இந்த மக்களின் நன்மையைக் கோரி நீ மன்றாட வேண்டாம்; 12 அவர்கள் உண்ணா நோன்பு இருந்தாலும், அவர்கள் கூக்குரலை நாம் கேட்கமாட்டோம்; அவர்கள் நமக்குத் தகனப் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் சமர்ப்பித்தாலும், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; அவர்களை வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மாய்த்து விடப் போகிறோம்." 13 அப்போது நான்: "ஐயோ ஆண்டவராகிய இறைவனே, இதோ, 'வாளும் பஞ்சமும் உங்களுக்கு வாரா. ஆனால், இந்த இடத்தில் உங்களுக்கு நீடித்த சமாதானத்தைத் தருவோம்' என்று அவர்களுக்குத் தீர்க்கதரிசிகள் கூறுகிறார்களே" என்றேன். 14 அதற்கு ஆண்டவர் என்னை நோக்கி, "அந்தத் தீர்க்கதரிசிகள் நமது திருப்பெயரால் பொய்களைத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்; நாம் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கற்பிக்கவுமில்லை; அவர்களோடு பேசவுமில்லை; அவர்கள் உங்களுக்குத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்பவை வெறும் பொய்க் காட்சிகள், பயனற்ற குறிகள், தங்கள் சொந்த மனத்தின் வஞ்சகங்கள். 15 ஆதலால் ஆண்டவர் இந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றிக் கூறுகிறார்: நாம் அனுப்பாமலே இந்தத் தீர்க்கதரிசிகள், 'வாளும் பஞ்சமும் இந்நாட்டின் மேல் வாரா' என்று நமது திருப்பெயரால் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். ஆயினும் இந்தத் தீர்க்கதரிசிகளே வாளாலும் பஞ்சத்தாலும் மாய்வார்கள். 16 மேலும் அவர்கள் தீர்க்கதரிசனத்தைக் கேட்கும் மக்களும் பஞ்சத்துக்கும் வாளுக்கும் இரையாகி, யெருசலேமின் தெருக்களில் தள்ளுண்டு கிடப்பார்கள். இவர்களையும், அவர்களின் மனைவியரையும், புதல்வர், புதல்வியரையும் புதைக்க யாருமில்லை; ஏனெனில் அவர்கள் தீமையை அவர்கள் மேலேயே பொழிவோம். 17 நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: 'என் கண்கள் இடைவிடாது இரவும் பகலும் கண்ணீர் சொரியட்டும்; ஏனெனில் என் இனமாகிய கன்னிப்பெண் நொறுக்குண்டு நைந்து படுகாயமுற்றாள்; 18 நான் வெளியே போனால், இதோ, இங்கே வாளால் மடிந்தவர்கள்! நான் பட்டணத்துக்குள் நுழைந்தால், இதோ, அங்கே பட்டினியால் மாய்ந்தவர்கள்! தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் நாடெல்லாம் அலைந்து திரிகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அறிவு இல்லை." 19 ஆண்டவரே, யூதாவை முற்றிலும் வெறுத்து விட்டீரா? சீயோன் உமது மனத்துக்கு அருவருப்பாகி விட்டதோ? நாங்கள் நலமாக முடியாத வகையில் ஏன் எங்களைக் காயப்படுத்தினீர்? நாங்கள் சமாதானத்தைத் தேடினோம்; ஆனால் ஒரு நன்மையும் விளையவில்லை; நலமாக்கப்படும் காலத்தை எதிர்ப்பார்த்தோம்; இதோ திகில் தான் ஆட்கொண்டது. 20 ஆண்டவரே, எங்கள் கெடு மதியையும் எங்கள் தந்தையரின் அக்கிரமத்தையும் ஒப்புக்கொள்கிறோம்; ஏனெனில் உமக்கெதிராய் நாங்கள் பாவம் செய்தோம். 21 உமது திருப்பெயரை முன்னிட்டு, எங்களை வெறுத்துத் தள்ளாதிரும்; உமது மகிமை மிகு அரியணையை அவமதிக்காதேயும்; எங்களோடு நீர் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்து விடாதேயும். 22 புறவினத்தாரின் பொய்த் தெய்வங்களுள் மழை பெய்விக்கக் கூடியவர் உண்டோ? அல்லது வானந்தான் தானாகவே மழை பெய்யுமா? எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீரல்லவோ அப்படிப்பட்டவர்? உம் மீது தான் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்பவர் நீரே.
1 மழையில்லா வறட்சியைப் பற்றி எரெமியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: .::. 2 யூதா கதறியழுகிறது; அதன் வாயில்கள் சோர்ந்து போயின; அதன் மக்கள் தரையில் உட்கார்ந்து புலம்புகிறார்கள்; யெருசலேமின் கூக்கூரல் எழும்புகிறது. .::. 3 அதன் பெருங்குடி மக்கள் தங்கள் ஊழியரைத் தண்ணீருக்கனுப்புகிறார்கள்; அவர்கள் கேணிக்குச் செல்கிறார்கள்; தண்ணீரைக் காணாமல் வெறும் குடத்தோடு திரும்புகிறார்கள்; வெட்கி நாணித் தங்கள் தலையை மூடிக் கொள்கிறார்கள். .::. 4 பூமியில் மழையில்லாமையால், கழனியெல்லாம் வெடித்திருக்கிறது; உழவர்கள் நாணித் தலையில் முக்காடிட்டுக் கொள்கிறார்கள். .::. 5 கன்று போடும் பெண் மானும் காட்டிலே புல்லில்லாமையால் தன் கன்றைக் கைவிட்டு ஓடிப் போகும். .::. 6 காட்டுக் கழுதைகள் மொட்டைக் குன்றுகள் மேல் நின்று, குள்ள நரிகளைப் போலக் காற்றுக்காக மூச்சுத் திணறுகின்றன; பச்சையே காணாததால் கண் பூத்து விழுகின்றன. .::. 7 ஆண்டவரே, எங்கள் பாவங்களுக்கு எண்ணிக்கையில்லை; உமக்கு விரோதமாய் நாங்கள் துரோகம் செய்தோம்; எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொன்னாலும், உமது பெயரை முன்னிட்டு இரங்கியருளும். .::. 8 இஸ்ராயேலின் நம்பிக்கையே, துன்ப வேளையில் அதன் மீட்பரே, உமது நாட்டில் நீர் அந்நியனைப் போல் இருப்பதேன்? இராத்தங்க நின்ற வழிப்போக்கனைப் போல் இருப்பதேன்? .::. 9 மதி மயங்கிய மனிதனைப் போல நீர் ஆவானேன்? காப்பாற்றும் திறனற்ற வீரனுக்கு ஒப்பாவானேன்? ஆயினும் ஆண்டவரே, நீர் எங்கள் நடுவில் இருக்கின்றீர்; நாங்கள் உம் பெயரைப் பூண்டிருக்கிறோம்; ஆதலால் எங்களைக் கைவிட வேண்டாம்." .::. 10 இந்த மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: "அவர்கள் இவ்வாறு அலைந்து திரிய விரும்பினார்கள்; தங்கள் கால்களைக் கட்டுப்படுத்தவில்லை; ஆகையால் ஆண்டவர் அவர்களை ஏற்றுக் கொள்கிறதில்லை; இப்பொழுது அவர்களுடைய அக்கிரமத்தை நினைவு கூர்ந்து அவர்களைத் தண்டிப்பார்." .::. 11 ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "இந்த மக்களின் நன்மையைக் கோரி நீ மன்றாட வேண்டாம்; .::. 12 அவர்கள் உண்ணா நோன்பு இருந்தாலும், அவர்கள் கூக்குரலை நாம் கேட்கமாட்டோம்; அவர்கள் நமக்குத் தகனப் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் சமர்ப்பித்தாலும், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; அவர்களை வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மாய்த்து விடப் போகிறோம்." .::. 13 அப்போது நான்: "ஐயோ ஆண்டவராகிய இறைவனே, இதோ, 'வாளும் பஞ்சமும் உங்களுக்கு வாரா. ஆனால், இந்த இடத்தில் உங்களுக்கு நீடித்த சமாதானத்தைத் தருவோம்' என்று அவர்களுக்குத் தீர்க்கதரிசிகள் கூறுகிறார்களே" என்றேன். .::. 14 அதற்கு ஆண்டவர் என்னை நோக்கி, "அந்தத் தீர்க்கதரிசிகள் நமது திருப்பெயரால் பொய்களைத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்; நாம் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கற்பிக்கவுமில்லை; அவர்களோடு பேசவுமில்லை; அவர்கள் உங்களுக்குத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்பவை வெறும் பொய்க் காட்சிகள், பயனற்ற குறிகள், தங்கள் சொந்த மனத்தின் வஞ்சகங்கள். .::. 15 ஆதலால் ஆண்டவர் இந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றிக் கூறுகிறார்: நாம் அனுப்பாமலே இந்தத் தீர்க்கதரிசிகள், 'வாளும் பஞ்சமும் இந்நாட்டின் மேல் வாரா' என்று நமது திருப்பெயரால் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். ஆயினும் இந்தத் தீர்க்கதரிசிகளே வாளாலும் பஞ்சத்தாலும் மாய்வார்கள். .::. 16 மேலும் அவர்கள் தீர்க்கதரிசனத்தைக் கேட்கும் மக்களும் பஞ்சத்துக்கும் வாளுக்கும் இரையாகி, யெருசலேமின் தெருக்களில் தள்ளுண்டு கிடப்பார்கள். இவர்களையும், அவர்களின் மனைவியரையும், புதல்வர், புதல்வியரையும் புதைக்க யாருமில்லை; ஏனெனில் அவர்கள் தீமையை அவர்கள் மேலேயே பொழிவோம். .::. 17 நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: 'என் கண்கள் இடைவிடாது இரவும் பகலும் கண்ணீர் சொரியட்டும்; ஏனெனில் என் இனமாகிய கன்னிப்பெண் நொறுக்குண்டு நைந்து படுகாயமுற்றாள்; .::. 18 நான் வெளியே போனால், இதோ, இங்கே வாளால் மடிந்தவர்கள்! நான் பட்டணத்துக்குள் நுழைந்தால், இதோ, அங்கே பட்டினியால் மாய்ந்தவர்கள்! தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் நாடெல்லாம் அலைந்து திரிகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அறிவு இல்லை." .::. 19 ஆண்டவரே, யூதாவை முற்றிலும் வெறுத்து விட்டீரா? சீயோன் உமது மனத்துக்கு அருவருப்பாகி விட்டதோ? நாங்கள் நலமாக முடியாத வகையில் ஏன் எங்களைக் காயப்படுத்தினீர்? நாங்கள் சமாதானத்தைத் தேடினோம்; ஆனால் ஒரு நன்மையும் விளையவில்லை; நலமாக்கப்படும் காலத்தை எதிர்ப்பார்த்தோம்; இதோ திகில் தான் ஆட்கொண்டது. .::. 20 ஆண்டவரே, எங்கள் கெடு மதியையும் எங்கள் தந்தையரின் அக்கிரமத்தையும் ஒப்புக்கொள்கிறோம்; ஏனெனில் உமக்கெதிராய் நாங்கள் பாவம் செய்தோம். .::. 21 உமது திருப்பெயரை முன்னிட்டு, எங்களை வெறுத்துத் தள்ளாதிரும்; உமது மகிமை மிகு அரியணையை அவமதிக்காதேயும்; எங்களோடு நீர் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்து விடாதேயும். .::. 22 புறவினத்தாரின் பொய்த் தெய்வங்களுள் மழை பெய்விக்கக் கூடியவர் உண்டோ? அல்லது வானந்தான் தானாகவே மழை பெய்யுமா? எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீரல்லவோ அப்படிப்பட்டவர்? உம் மீது தான் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்பவர் நீரே.
  • எரேமியா அதிகாரம் 1  
  • எரேமியா அதிகாரம் 2  
  • எரேமியா அதிகாரம் 3  
  • எரேமியா அதிகாரம் 4  
  • எரேமியா அதிகாரம் 5  
  • எரேமியா அதிகாரம் 6  
  • எரேமியா அதிகாரம் 7  
  • எரேமியா அதிகாரம் 8  
  • எரேமியா அதிகாரம் 9  
  • எரேமியா அதிகாரம் 10  
  • எரேமியா அதிகாரம் 11  
  • எரேமியா அதிகாரம் 12  
  • எரேமியா அதிகாரம் 13  
  • எரேமியா அதிகாரம் 14  
  • எரேமியா அதிகாரம் 15  
  • எரேமியா அதிகாரம் 16  
  • எரேமியா அதிகாரம் 17  
  • எரேமியா அதிகாரம் 18  
  • எரேமியா அதிகாரம் 19  
  • எரேமியா அதிகாரம் 20  
  • எரேமியா அதிகாரம் 21  
  • எரேமியா அதிகாரம் 22  
  • எரேமியா அதிகாரம் 23  
  • எரேமியா அதிகாரம் 24  
  • எரேமியா அதிகாரம் 25  
  • எரேமியா அதிகாரம் 26  
  • எரேமியா அதிகாரம் 27  
  • எரேமியா அதிகாரம் 28  
  • எரேமியா அதிகாரம் 29  
  • எரேமியா அதிகாரம் 30  
  • எரேமியா அதிகாரம் 31  
  • எரேமியா அதிகாரம் 32  
  • எரேமியா அதிகாரம் 33  
  • எரேமியா அதிகாரம் 34  
  • எரேமியா அதிகாரம் 35  
  • எரேமியா அதிகாரம் 36  
  • எரேமியா அதிகாரம் 37  
  • எரேமியா அதிகாரம் 38  
  • எரேமியா அதிகாரம் 39  
  • எரேமியா அதிகாரம் 40  
  • எரேமியா அதிகாரம் 41  
  • எரேமியா அதிகாரம் 42  
  • எரேமியா அதிகாரம் 43  
  • எரேமியா அதிகாரம் 44  
  • எரேமியா அதிகாரம் 45  
  • எரேமியா அதிகாரம் 46  
  • எரேமியா அதிகாரம் 47  
  • எரேமியா அதிகாரம் 48  
  • எரேமியா அதிகாரம் 49  
  • எரேமியா அதிகாரம் 50  
  • எரேமியா அதிகாரம் 51  
  • எரேமியா அதிகாரம் 52  
×

Alert

×

Tamil Letters Keypad References