தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா

ஏசாயா அதிகாரம் 59

1 இதோ, உங்களை மீட்க முடியாத அளவுக்கு ஆண்டவருடைய கை குறுகிவிடவில்லை; உங்கள் கூக்குரலைக் கேட்க முடியாத அளவுக்கு அவருடைய செவி மந்தமாகி விடவில்லை. 2 ஆனால் உங்கள் அக்கிரமங்கள் தான் உங்களுக்கும் ஆண்டவருக்கும் பிரிவு ஏற்படுத்தின; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதபடி உங்களிடமிருந்து அவரது முகத்தை மறைத்தன. 3 ஏனெனில் உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைப்பட்டுள்ளன. உங்கள் விரல்களில் அக்கிரமம் நிறைந்துள்ளது; உங்கள் உதடுகள் பொய்களைப் பேசின, உங்கள் நாக்கு அக்கிரமத்தை முணுமுணுத்தது. 4 நீதியாய் வழக்காடுபவன் உங்களுள் எவனுமில்லை, உண்மையாகத் தீர்ப்பிடுபவன் ஒருவனுமில்லை; இல்லாத ஒன்றின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள், பொய்யான சொற்களையே பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெற்றெடுக்கிறார்கள். 5 நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள், சிலந்திப் பூச்சி வலைகளையும் நெய்கிறார்கள்; அவைகளின் முட்டையைச் சாப்பிடுகிறவன் செத்துப் போவான், உடைபடும் முட்டையிலிருந்து விரியன் பாம்பு வெளிப்படும். 6 அவர்களுடைய வலைகள் உடுக்க உதவமாட்டா, அவர்கள் பின்னியவற்றை யாரும் போர்த்துக் கொள்ள முடியாது, அவர்கள் பின்னியவையெல்லாம் அக்கிரமச் செயல்களே. அவர்கள் கை செய்பவையெல்லாம் வன்முறைச் செயல்களே. 7 அவர்களுடைய கால்கள் தீமை செய்ய ஓடுகின்றன, குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் விரைகிறார்கள்; அவர்கள் நினைவுகளோ அநீதியான நினைவுகளே, அவர்களுடைய வழிகளில் அழிவும் துன்பமுந்தான் உள்ளன. 8 சமாதான வழியினை அவர்கள் அறிந்தாரல்லர், அவர்களுடைய தடங்களில் நேர்மையில்லை; அவர்கள் போகும் நெறிகள் கோணலானவை, அவற்றில் நடப்பவன் சமாதானம் அறியான். 9 ஆதலால், நீதி எங்களை விட்டு விலகிப் போனது. நேர்மையும் எங்களை நெருங்கவில்லை; ஒளியை எதிர்பார்த்தோம், காரிருள் தான் காணப்பட்டது, வெளிச்சத்தைத் தேடினோம், இருட்டிலேயே நடக்கிறோம். 10 குருடரைப் போலச் சுவரைப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாதவரைப் போல நாங்கள் வழியைத் தடவுகிறோம். இருளில் நடப்பது போலப் பகலிலும் இடறுகிறோம், வாழ்பவர்கள் நடுவில் செத்தவர் போலக் கிடக்கிறோம். 11 கரடிகளைப் போல நாங்களனைவரும் உறுமுகிறோம், புறாக்களைப் போலப் புலம்பி விம்முகிறோம்; நீதிக்குக் காத்திருக்கிறோம், அது கிடைக்கவில்லை; மீட்பைப் பார்த்திருக்கிறோம், அது தொலைவில் நிற்கிறது. 12 உம் கண் முன்னால் எங்கள் அக்கிரமங்கள் பெருகிப்போயின, எங்கள் பாவங்களும் எங்களுக்கு எதிராய்ச் சாட்சி கூறுகின்றன; எங்கள் அக்கிரமங்கள் எங்களோடு இருக்கின்றன, எங்கள் அநீதிகளை நாங்களே அறிந்திருக்கிறோம். 13 ஆண்டவருக்கு எதிராக எழும்பித் துரோகம் செய்தோம், எம் கடவுளைப் பின்பற்றாமல் திரும்பி விட்டோம்; புறணியையும் அக்கிரமத்தையும் பேசினோம், பொய்களை உள்ளத்தில் சிந்தித்துப் பேசினோம். 14 நீதி எங்களை விட்டு அகன்று போயிற்று, நேர்மையும் எங்களுக்குத் தொலைவில் நின்றது; பொதுவிடங்களில் உண்மையானது வீழ்ச்சியடைந்தது, நியாயத்திற்கு அங்கெல்லாம் இடமே இல்லை. 15 வாய்மை மறக்கப்பட்டு விட்டது, தீமையை விட்டு விலகினவன் கொடியவர்க்கு இரையானான்; உலகில் நீதியில்லாததை ஆண்டவர் கண்டார், அவர் கண்களில் கோபத் தீ மூண்டது. 16 முன்வருபவன் யாருமில்லை என ஆண்டவர் கண்டார், சீர்திருத்த முன்வருபவன் இல்லாததால் திகைப்புக்கொண்டார்; அவருடைய கைப் புயமே அவருக்கு வெற்றி கொணர்ந்தது, அவருடைய நீதியே அவருக்குத் துணை நின்றது. 17 மார்க் கவசமாய் நீதியையும், தலைச் சீராவாய் மீட்பையும் அணிந்து கொண்டார்; பழி தீர்க்கும் சினத்தை உடையாய் அணிந்து, ஆத்திரத்தை மேலாடையாய்ப் போர்த்துக் கொண்டார். 18 செயல்களுக்குத் தக்க கைம்மாறு தருவார், தம் எதிரிகளுக்கு ஆத்திரத்தைக் காட்டுவார்; தம் பகைவர்களுக்குத் தக்க தண்டனையும், தீவுகளுக்குத் தகுதியுள்ள பலனையும் தருவார். 19 மேற்றிசையினர் ஆண்டவர் பெயருக்கு அஞ்சுவார்கள், கீழ்த்திசையினர் அவர் மகிமையைப் போற்றுவார்கள்; ஏனெனில் ஆண்டவரின் ஆவியால் உந்தித் தள்ளப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் அவர் வருவார். 20 ஆனால் சீயோனுக்கும், யாக்கோபின் வீட்டாருள் தீமையை விலக்கித் திரும்புகிறவர்களுக்கும் மீட்பராய் வருவார், என்கிறார் ஆண்டவர். 21 ஆண்டவர் கூறுகிறார்: அவர்களோடு நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன் மேல் இருக்கும் நமது ஆவியும், உன் வாயில் நாம் ஊட்டிய நம்முடைய வார்த்தைகளும், உன் வாயினின்றும், உன் மக்கள் வாயினின்றும், உன் மக்களின் மக்கள் வாயினின்றும் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் அகலா, என்கிறார் ஆண்டவர்."
1. இதோ, உங்களை மீட்க முடியாத அளவுக்கு ஆண்டவருடைய கை குறுகிவிடவில்லை; உங்கள் கூக்குரலைக் கேட்க முடியாத அளவுக்கு அவருடைய செவி மந்தமாகி விடவில்லை. 2. ஆனால் உங்கள் அக்கிரமங்கள் தான் உங்களுக்கும் ஆண்டவருக்கும் பிரிவு ஏற்படுத்தின; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதபடி உங்களிடமிருந்து அவரது முகத்தை மறைத்தன. 3. ஏனெனில் உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைப்பட்டுள்ளன. உங்கள் விரல்களில் அக்கிரமம் நிறைந்துள்ளது; உங்கள் உதடுகள் பொய்களைப் பேசின, உங்கள் நாக்கு அக்கிரமத்தை முணுமுணுத்தது. 4. நீதியாய் வழக்காடுபவன் உங்களுள் எவனுமில்லை, உண்மையாகத் தீர்ப்பிடுபவன் ஒருவனுமில்லை; இல்லாத ஒன்றின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள், பொய்யான சொற்களையே பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெற்றெடுக்கிறார்கள். 5. நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள், சிலந்திப் பூச்சி வலைகளையும் நெய்கிறார்கள்; அவைகளின் முட்டையைச் சாப்பிடுகிறவன் செத்துப் போவான், உடைபடும் முட்டையிலிருந்து விரியன் பாம்பு வெளிப்படும். 6. அவர்களுடைய வலைகள் உடுக்க உதவமாட்டா, அவர்கள் பின்னியவற்றை யாரும் போர்த்துக் கொள்ள முடியாது, அவர்கள் பின்னியவையெல்லாம் அக்கிரமச் செயல்களே. அவர்கள் கை செய்பவையெல்லாம் வன்முறைச் செயல்களே. 7. அவர்களுடைய கால்கள் தீமை செய்ய ஓடுகின்றன, குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் விரைகிறார்கள்; அவர்கள் நினைவுகளோ அநீதியான நினைவுகளே, அவர்களுடைய வழிகளில் அழிவும் துன்பமுந்தான் உள்ளன. 8. சமாதான வழியினை அவர்கள் அறிந்தாரல்லர், அவர்களுடைய தடங்களில் நேர்மையில்லை; அவர்கள் போகும் நெறிகள் கோணலானவை, அவற்றில் நடப்பவன் சமாதானம் அறியான். 9. ஆதலால், நீதி எங்களை விட்டு விலகிப் போனது. நேர்மையும் எங்களை நெருங்கவில்லை; ஒளியை எதிர்பார்த்தோம், காரிருள் தான் காணப்பட்டது, வெளிச்சத்தைத் தேடினோம், இருட்டிலேயே நடக்கிறோம். 10. குருடரைப் போலச் சுவரைப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாதவரைப் போல நாங்கள் வழியைத் தடவுகிறோம். இருளில் நடப்பது போலப் பகலிலும் இடறுகிறோம், வாழ்பவர்கள் நடுவில் செத்தவர் போலக் கிடக்கிறோம். 11. கரடிகளைப் போல நாங்களனைவரும் உறுமுகிறோம், புறாக்களைப் போலப் புலம்பி விம்முகிறோம்; நீதிக்குக் காத்திருக்கிறோம், அது கிடைக்கவில்லை; மீட்பைப் பார்த்திருக்கிறோம், அது தொலைவில் நிற்கிறது. 12. உம் கண் முன்னால் எங்கள் அக்கிரமங்கள் பெருகிப்போயின, எங்கள் பாவங்களும் எங்களுக்கு எதிராய்ச் சாட்சி கூறுகின்றன; எங்கள் அக்கிரமங்கள் எங்களோடு இருக்கின்றன, எங்கள் அநீதிகளை நாங்களே அறிந்திருக்கிறோம். 13. ஆண்டவருக்கு எதிராக எழும்பித் துரோகம் செய்தோம், எம் கடவுளைப் பின்பற்றாமல் திரும்பி விட்டோம்; புறணியையும் அக்கிரமத்தையும் பேசினோம், பொய்களை உள்ளத்தில் சிந்தித்துப் பேசினோம். 14. நீதி எங்களை விட்டு அகன்று போயிற்று, நேர்மையும் எங்களுக்குத் தொலைவில் நின்றது; பொதுவிடங்களில் உண்மையானது வீழ்ச்சியடைந்தது, நியாயத்திற்கு அங்கெல்லாம் இடமே இல்லை. 15. வாய்மை மறக்கப்பட்டு விட்டது, தீமையை விட்டு விலகினவன் கொடியவர்க்கு இரையானான்; உலகில் நீதியில்லாததை ஆண்டவர் கண்டார், அவர் கண்களில் கோபத் தீ மூண்டது. 16. முன்வருபவன் யாருமில்லை என ஆண்டவர் கண்டார், சீர்திருத்த முன்வருபவன் இல்லாததால் திகைப்புக்கொண்டார்; அவருடைய கைப் புயமே அவருக்கு வெற்றி கொணர்ந்தது, அவருடைய நீதியே அவருக்குத் துணை நின்றது. 17. மார்க் கவசமாய் நீதியையும், தலைச் சீராவாய் மீட்பையும் அணிந்து கொண்டார்; பழி தீர்க்கும் சினத்தை உடையாய் அணிந்து, ஆத்திரத்தை மேலாடையாய்ப் போர்த்துக் கொண்டார். 18. செயல்களுக்குத் தக்க கைம்மாறு தருவார், தம் எதிரிகளுக்கு ஆத்திரத்தைக் காட்டுவார்; தம் பகைவர்களுக்குத் தக்க தண்டனையும், தீவுகளுக்குத் தகுதியுள்ள பலனையும் தருவார். 19. மேற்றிசையினர் ஆண்டவர் பெயருக்கு அஞ்சுவார்கள், கீழ்த்திசையினர் அவர் மகிமையைப் போற்றுவார்கள்; ஏனெனில் ஆண்டவரின் ஆவியால் உந்தித் தள்ளப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் அவர் வருவார். 20. ஆனால் சீயோனுக்கும், யாக்கோபின் வீட்டாருள் தீமையை விலக்கித் திரும்புகிறவர்களுக்கும் மீட்பராய் வருவார், என்கிறார் ஆண்டவர். 21. ஆண்டவர் கூறுகிறார்: அவர்களோடு நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன் மேல் இருக்கும் நமது ஆவியும், உன் வாயில் நாம் ஊட்டிய நம்முடைய வார்த்தைகளும், உன் வாயினின்றும், உன் மக்கள் வாயினின்றும், உன் மக்களின் மக்கள் வாயினின்றும் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் அகலா, என்கிறார் ஆண்டவர்."
  • ஏசாயா அதிகாரம் 1  
  • ஏசாயா அதிகாரம் 2  
  • ஏசாயா அதிகாரம் 3  
  • ஏசாயா அதிகாரம் 4  
  • ஏசாயா அதிகாரம் 5  
  • ஏசாயா அதிகாரம் 6  
  • ஏசாயா அதிகாரம் 7  
  • ஏசாயா அதிகாரம் 8  
  • ஏசாயா அதிகாரம் 9  
  • ஏசாயா அதிகாரம் 10  
  • ஏசாயா அதிகாரம் 11  
  • ஏசாயா அதிகாரம் 12  
  • ஏசாயா அதிகாரம் 13  
  • ஏசாயா அதிகாரம் 14  
  • ஏசாயா அதிகாரம் 15  
  • ஏசாயா அதிகாரம் 16  
  • ஏசாயா அதிகாரம் 17  
  • ஏசாயா அதிகாரம் 18  
  • ஏசாயா அதிகாரம் 19  
  • ஏசாயா அதிகாரம் 20  
  • ஏசாயா அதிகாரம் 21  
  • ஏசாயா அதிகாரம் 22  
  • ஏசாயா அதிகாரம் 23  
  • ஏசாயா அதிகாரம் 24  
  • ஏசாயா அதிகாரம் 25  
  • ஏசாயா அதிகாரம் 26  
  • ஏசாயா அதிகாரம் 27  
  • ஏசாயா அதிகாரம் 28  
  • ஏசாயா அதிகாரம் 29  
  • ஏசாயா அதிகாரம் 30  
  • ஏசாயா அதிகாரம் 31  
  • ஏசாயா அதிகாரம் 32  
  • ஏசாயா அதிகாரம் 33  
  • ஏசாயா அதிகாரம் 34  
  • ஏசாயா அதிகாரம் 35  
  • ஏசாயா அதிகாரம் 36  
  • ஏசாயா அதிகாரம் 37  
  • ஏசாயா அதிகாரம் 38  
  • ஏசாயா அதிகாரம் 39  
  • ஏசாயா அதிகாரம் 40  
  • ஏசாயா அதிகாரம் 41  
  • ஏசாயா அதிகாரம் 42  
  • ஏசாயா அதிகாரம் 43  
  • ஏசாயா அதிகாரம் 44  
  • ஏசாயா அதிகாரம் 45  
  • ஏசாயா அதிகாரம் 46  
  • ஏசாயா அதிகாரம் 47  
  • ஏசாயா அதிகாரம் 48  
  • ஏசாயா அதிகாரம் 49  
  • ஏசாயா அதிகாரம் 50  
  • ஏசாயா அதிகாரம் 51  
  • ஏசாயா அதிகாரம் 52  
  • ஏசாயா அதிகாரம் 53  
  • ஏசாயா அதிகாரம் 54  
  • ஏசாயா அதிகாரம் 55  
  • ஏசாயா அதிகாரம் 56  
  • ஏசாயா அதிகாரம் 57  
  • ஏசாயா அதிகாரம் 58  
  • ஏசாயா அதிகாரம் 59  
  • ஏசாயா அதிகாரம் 60  
  • ஏசாயா அதிகாரம் 61  
  • ஏசாயா அதிகாரம் 62  
  • ஏசாயா அதிகாரம் 63  
  • ஏசாயா அதிகாரம் 64  
  • ஏசாயா அதிகாரம் 65  
  • ஏசாயா அதிகாரம் 66  
×

Alert

×

Tamil Letters Keypad References