தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா

பதிவுகள்

ஏசாயா அதிகாரம் 15

1 மோவாபைப் பற்றிய இறைவாக்கு: ஆர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது; கீர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது. 2 அழுது புலம்புவதற்காக அரச வீட்டாரும் தீபோன் மக்களும் உயர்ந்த இடங்களுக்குப் போகிறார்கள்; நாபோ, மேதாபா இவற்றின் அழிவைக் குறித்து மோவாப் நாட்டினர் அழுகின்றார்கள்; தலைகள் யாவும் மழிக்கப்படும், தாடிகள் அனைத்தும் சிரைக்கப்படும். 3 தெருக்களில் கோணி உடுத்திக்கொண்டு திரிவார்கள், வீடுகளின் மாடிகளிலும் பொதுவிடங்களிலும், அனைவரும் புலம்பிக் கண்ணீர் வடிக்கின்றார்கள். 4 எசேபோன், எலயாலே ஓலமிடுகின்றன, யாசா வரை அவற்றின் குரல் கேட்கின்றது; அதைக் கேட்டு மோவாப் வீரர்களும் புலம்புகிறார்கள், அவர்களின் இதயமும் உள்ளுக்குள் குமுறுகிறது. 5 மோவாபுக்காக என்னுள்ளமும் கதறுகிறது, தப்பிப் பிழைத்தவர்கள் சேகோர், எக்லாத் - ஷூலிஷியா முதலிய இடங்களுக்கு ஓடுகின்றனர்; லூவித் குன்றின் மேல் அழுது கொண்டே ஏறுகின்றனர், ஒரோநாகிம் வழியிலெல்லாம் உள்ளம் உருகும்படி புலம்புகின்றனர். 6 நெம்ரிம் நீர் நிலைகள் வறண்டு போயின. புல் உலர்ந்தது, முளைகள் கருகிவிட்டன, பசுமை என்பதே இல்லாமற் போனது. 7 ஆதலால் தங்கள் சொத்தில் மிகுந்திருந்ததையும், தாங்கள் சேமித்து வைத்திருந்ததையும், அராவிம் நீரோடையின் அக்கரைக்குத் தூக்கிக் கொண்டு கடக்கிறார்கள். 8 மோவாபின் எல்லையெங்கும் அழுகைக் குரல் கேட்கிறது, அவர்களின் புலம்பல் கல்லிம் வரையில் எட்டுகிறது, அவர்களின் ஓலம் எலிம் கேணிகள் வரைக் கேட்கிறது. 9 தீபோன் நீர் நிலைகள் இரத்தம் நிறைந்துள்ளன, தீபோன் மேல் வேதனை மேல் வேதனை கொண்டு வருவோம்; மோவாப் மக்களுள் தப்பினவர் மேலும், நாட்டிலே எஞ்சியிருப்போர் மேலும் சிங்கத்தை வரச் செய்வோம்.
1 மோவாபைப் பற்றிய இறைவாக்கு: ஆர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது; கீர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது. .::. 2 அழுது புலம்புவதற்காக அரச வீட்டாரும் தீபோன் மக்களும் உயர்ந்த இடங்களுக்குப் போகிறார்கள்; நாபோ, மேதாபா இவற்றின் அழிவைக் குறித்து மோவாப் நாட்டினர் அழுகின்றார்கள்; தலைகள் யாவும் மழிக்கப்படும், தாடிகள் அனைத்தும் சிரைக்கப்படும். .::. 3 தெருக்களில் கோணி உடுத்திக்கொண்டு திரிவார்கள், வீடுகளின் மாடிகளிலும் பொதுவிடங்களிலும், அனைவரும் புலம்பிக் கண்ணீர் வடிக்கின்றார்கள். .::. 4 எசேபோன், எலயாலே ஓலமிடுகின்றன, யாசா வரை அவற்றின் குரல் கேட்கின்றது; அதைக் கேட்டு மோவாப் வீரர்களும் புலம்புகிறார்கள், அவர்களின் இதயமும் உள்ளுக்குள் குமுறுகிறது. .::. 5 மோவாபுக்காக என்னுள்ளமும் கதறுகிறது, தப்பிப் பிழைத்தவர்கள் சேகோர், எக்லாத் - ஷூலிஷியா முதலிய இடங்களுக்கு ஓடுகின்றனர்; லூவித் குன்றின் மேல் அழுது கொண்டே ஏறுகின்றனர், ஒரோநாகிம் வழியிலெல்லாம் உள்ளம் உருகும்படி புலம்புகின்றனர். .::. 6 நெம்ரிம் நீர் நிலைகள் வறண்டு போயின. புல் உலர்ந்தது, முளைகள் கருகிவிட்டன, பசுமை என்பதே இல்லாமற் போனது. .::. 7 ஆதலால் தங்கள் சொத்தில் மிகுந்திருந்ததையும், தாங்கள் சேமித்து வைத்திருந்ததையும், அராவிம் நீரோடையின் அக்கரைக்குத் தூக்கிக் கொண்டு கடக்கிறார்கள். .::. 8 மோவாபின் எல்லையெங்கும் அழுகைக் குரல் கேட்கிறது, அவர்களின் புலம்பல் கல்லிம் வரையில் எட்டுகிறது, அவர்களின் ஓலம் எலிம் கேணிகள் வரைக் கேட்கிறது. .::. 9 தீபோன் நீர் நிலைகள் இரத்தம் நிறைந்துள்ளன, தீபோன் மேல் வேதனை மேல் வேதனை கொண்டு வருவோம்; மோவாப் மக்களுள் தப்பினவர் மேலும், நாட்டிலே எஞ்சியிருப்போர் மேலும் சிங்கத்தை வரச் செய்வோம்.
  • ஏசாயா அதிகாரம் 1  
  • ஏசாயா அதிகாரம் 2  
  • ஏசாயா அதிகாரம் 3  
  • ஏசாயா அதிகாரம் 4  
  • ஏசாயா அதிகாரம் 5  
  • ஏசாயா அதிகாரம் 6  
  • ஏசாயா அதிகாரம் 7  
  • ஏசாயா அதிகாரம் 8  
  • ஏசாயா அதிகாரம் 9  
  • ஏசாயா அதிகாரம் 10  
  • ஏசாயா அதிகாரம் 11  
  • ஏசாயா அதிகாரம் 12  
  • ஏசாயா அதிகாரம் 13  
  • ஏசாயா அதிகாரம் 14  
  • ஏசாயா அதிகாரம் 15  
  • ஏசாயா அதிகாரம் 16  
  • ஏசாயா அதிகாரம் 17  
  • ஏசாயா அதிகாரம் 18  
  • ஏசாயா அதிகாரம் 19  
  • ஏசாயா அதிகாரம் 20  
  • ஏசாயா அதிகாரம் 21  
  • ஏசாயா அதிகாரம் 22  
  • ஏசாயா அதிகாரம் 23  
  • ஏசாயா அதிகாரம் 24  
  • ஏசாயா அதிகாரம் 25  
  • ஏசாயா அதிகாரம் 26  
  • ஏசாயா அதிகாரம் 27  
  • ஏசாயா அதிகாரம் 28  
  • ஏசாயா அதிகாரம் 29  
  • ஏசாயா அதிகாரம் 30  
  • ஏசாயா அதிகாரம் 31  
  • ஏசாயா அதிகாரம் 32  
  • ஏசாயா அதிகாரம் 33  
  • ஏசாயா அதிகாரம் 34  
  • ஏசாயா அதிகாரம் 35  
  • ஏசாயா அதிகாரம் 36  
  • ஏசாயா அதிகாரம் 37  
  • ஏசாயா அதிகாரம் 38  
  • ஏசாயா அதிகாரம் 39  
  • ஏசாயா அதிகாரம் 40  
  • ஏசாயா அதிகாரம் 41  
  • ஏசாயா அதிகாரம் 42  
  • ஏசாயா அதிகாரம் 43  
  • ஏசாயா அதிகாரம் 44  
  • ஏசாயா அதிகாரம் 45  
  • ஏசாயா அதிகாரம் 46  
  • ஏசாயா அதிகாரம் 47  
  • ஏசாயா அதிகாரம் 48  
  • ஏசாயா அதிகாரம் 49  
  • ஏசாயா அதிகாரம் 50  
  • ஏசாயா அதிகாரம் 51  
  • ஏசாயா அதிகாரம் 52  
  • ஏசாயா அதிகாரம் 53  
  • ஏசாயா அதிகாரம் 54  
  • ஏசாயா அதிகாரம் 55  
  • ஏசாயா அதிகாரம் 56  
  • ஏசாயா அதிகாரம் 57  
  • ஏசாயா அதிகாரம் 58  
  • ஏசாயா அதிகாரம் 59  
  • ஏசாயா அதிகாரம் 60  
  • ஏசாயா அதிகாரம் 61  
  • ஏசாயா அதிகாரம் 62  
  • ஏசாயா அதிகாரம் 63  
  • ஏசாயா அதிகாரம் 64  
  • ஏசாயா அதிகாரம் 65  
  • ஏசாயா அதிகாரம் 66  
×

Alert

×

Tamil Letters Keypad References