தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா

பதிவுகள்

ஏசாயா அதிகாரம் 35

1 பாழ்வெளியும் வறண்ட நிலமும் அகமகிழும், பாலை நிலம் அக்களிப்பால் பூரித்து லீலி போல மலரும். 2 வளமாக முளை கிளம்பித் தளிர் கொள்ளும், மகிழ்ச்சி பொங்கப் புகழ் கூறி நடனமாடும்; லீபானின் மகிமை பாலைக்குக் கிடைக்கும், கர்மேல், சாரோன் அழகு அதனில் ஒளிரும், ஆண்டவருடைய மகிமை அங்கே விளங்கும், நம் கடவுளின் அழகொளி அங்கே புலனாகும். 3 தளர்ந்துபோன கைகளை வலிமைப் படுத்துங்கள், நடுக்கமுற்ற முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். 4 உள்ளத்தில் உரமில்லாதவர்களை நோக்கி, "உறுதியாய் இருங்கள், அஞ்சவேண்டா; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருகிறார், வந்து கைம்மாறு கொடுப்பார், கடவுள் தாமே வந்து உங்ளை மீட்பார்" என்று சொல்லுங்கள். 5 அப்போது குருடருடைய கண்கள் திறக்கப்படும், செவிடரின் காதுகள் கேட்கும் ஆற்றல் பெறும்; 6 அப்போது முடவன் மான் கன்று போலத் துள்ளுவான், ஊமைகளின் நாக்கு மகிழ்ச்சியால் பாடும்; பாழ்வெளியில் நீரூற்றுகள் பீறிட்டுக் கிளம்பும், பாலை நிலத்தில் நீரோடைகள் வழிந்தோடும். 7 கொதிக்கும் மணல் பரப்பு நீர் நிறைந்த குளமாகும், வறண்ட பூமி நீரூற்றுகள் நிறைந்திருக்கும்; குள்ள நரிகள் குடியிருந்த குகைகளிலும் நாணல், கோரை முதலியவை முளைத்து வளரும். 8 நெடுஞ்சாலையும் வழியும் அங்கே உண்டாகும். 'திருப்பாதை' என்று அது பெயர் பெறும்; அசுத்தர் அதன் வழியாய்ச் செல்ல மாட்டார்கள், உங்களுக்கு நேர் வழி அதுவே ஆகும், பேதைகளும் அதில் வழி தவற முடியாது. 9 சிங்கம் அங்கே இருக்காது, கொடிய மிருகம் அவ்வழியாய் ஏறிப் போகாது; அப்படிப் பட்டது எதுவும் அங்குத் தென்படாது, மீட்படைந்தவர்களே அவ்வழியாய் நடந்து போவார்கள். 10 ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவர், வாழ்த்திக் கொண்டு சீயோனுக்கு வந்து சேருவர்; அவர்கள் தலை மேல் அகமகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும், அவர்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பெற்றுக் கொள்வர், துன்பமும் அழுகையும் பறந்து போய்விடும்.
1. பாழ்வெளியும் வறண்ட நிலமும் அகமகிழும், பாலை நிலம் அக்களிப்பால் பூரித்து லீலி போல மலரும். 2. வளமாக முளை கிளம்பித் தளிர் கொள்ளும், மகிழ்ச்சி பொங்கப் புகழ் கூறி நடனமாடும்; லீபானின் மகிமை பாலைக்குக் கிடைக்கும், கர்மேல், சாரோன் அழகு அதனில் ஒளிரும், ஆண்டவருடைய மகிமை அங்கே விளங்கும், நம் கடவுளின் அழகொளி அங்கே புலனாகும். 3. தளர்ந்துபோன கைகளை வலிமைப் படுத்துங்கள், நடுக்கமுற்ற முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். 4. உள்ளத்தில் உரமில்லாதவர்களை நோக்கி, "உறுதியாய் இருங்கள், அஞ்சவேண்டா; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருகிறார், வந்து கைம்மாறு கொடுப்பார், கடவுள் தாமே வந்து உங்ளை மீட்பார்" என்று சொல்லுங்கள். 5. அப்போது குருடருடைய கண்கள் திறக்கப்படும், செவிடரின் காதுகள் கேட்கும் ஆற்றல் பெறும்; 6. அப்போது முடவன் மான் கன்று போலத் துள்ளுவான், ஊமைகளின் நாக்கு மகிழ்ச்சியால் பாடும்; பாழ்வெளியில் நீரூற்றுகள் பீறிட்டுக் கிளம்பும், பாலை நிலத்தில் நீரோடைகள் வழிந்தோடும். 7. கொதிக்கும் மணல் பரப்பு நீர் நிறைந்த குளமாகும், வறண்ட பூமி நீரூற்றுகள் நிறைந்திருக்கும்; குள்ள நரிகள் குடியிருந்த குகைகளிலும் நாணல், கோரை முதலியவை முளைத்து வளரும். 8. நெடுஞ்சாலையும் வழியும் அங்கே உண்டாகும். 'திருப்பாதை' என்று அது பெயர் பெறும்; அசுத்தர் அதன் வழியாய்ச் செல்ல மாட்டார்கள், உங்களுக்கு நேர் வழி அதுவே ஆகும், பேதைகளும் அதில் வழி தவற முடியாது. 9. சிங்கம் அங்கே இருக்காது, கொடிய மிருகம் அவ்வழியாய் ஏறிப் போகாது; அப்படிப் பட்டது எதுவும் அங்குத் தென்படாது, மீட்படைந்தவர்களே அவ்வழியாய் நடந்து போவார்கள். 10. ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவர், வாழ்த்திக் கொண்டு சீயோனுக்கு வந்து சேருவர்; அவர்கள் தலை மேல் அகமகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும், அவர்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பெற்றுக் கொள்வர், துன்பமும் அழுகையும் பறந்து போய்விடும்.
  • ஏசாயா அதிகாரம் 1  
  • ஏசாயா அதிகாரம் 2  
  • ஏசாயா அதிகாரம் 3  
  • ஏசாயா அதிகாரம் 4  
  • ஏசாயா அதிகாரம் 5  
  • ஏசாயா அதிகாரம் 6  
  • ஏசாயா அதிகாரம் 7  
  • ஏசாயா அதிகாரம் 8  
  • ஏசாயா அதிகாரம் 9  
  • ஏசாயா அதிகாரம் 10  
  • ஏசாயா அதிகாரம் 11  
  • ஏசாயா அதிகாரம் 12  
  • ஏசாயா அதிகாரம் 13  
  • ஏசாயா அதிகாரம் 14  
  • ஏசாயா அதிகாரம் 15  
  • ஏசாயா அதிகாரம் 16  
  • ஏசாயா அதிகாரம் 17  
  • ஏசாயா அதிகாரம் 18  
  • ஏசாயா அதிகாரம் 19  
  • ஏசாயா அதிகாரம் 20  
  • ஏசாயா அதிகாரம் 21  
  • ஏசாயா அதிகாரம் 22  
  • ஏசாயா அதிகாரம் 23  
  • ஏசாயா அதிகாரம் 24  
  • ஏசாயா அதிகாரம் 25  
  • ஏசாயா அதிகாரம் 26  
  • ஏசாயா அதிகாரம் 27  
  • ஏசாயா அதிகாரம் 28  
  • ஏசாயா அதிகாரம் 29  
  • ஏசாயா அதிகாரம் 30  
  • ஏசாயா அதிகாரம் 31  
  • ஏசாயா அதிகாரம் 32  
  • ஏசாயா அதிகாரம் 33  
  • ஏசாயா அதிகாரம் 34  
  • ஏசாயா அதிகாரம் 35  
  • ஏசாயா அதிகாரம் 36  
  • ஏசாயா அதிகாரம் 37  
  • ஏசாயா அதிகாரம் 38  
  • ஏசாயா அதிகாரம் 39  
  • ஏசாயா அதிகாரம் 40  
  • ஏசாயா அதிகாரம் 41  
  • ஏசாயா அதிகாரம் 42  
  • ஏசாயா அதிகாரம் 43  
  • ஏசாயா அதிகாரம் 44  
  • ஏசாயா அதிகாரம் 45  
  • ஏசாயா அதிகாரம் 46  
  • ஏசாயா அதிகாரம் 47  
  • ஏசாயா அதிகாரம் 48  
  • ஏசாயா அதிகாரம் 49  
  • ஏசாயா அதிகாரம் 50  
  • ஏசாயா அதிகாரம் 51  
  • ஏசாயா அதிகாரம் 52  
  • ஏசாயா அதிகாரம் 53  
  • ஏசாயா அதிகாரம் 54  
  • ஏசாயா அதிகாரம் 55  
  • ஏசாயா அதிகாரம் 56  
  • ஏசாயா அதிகாரம் 57  
  • ஏசாயா அதிகாரம் 58  
  • ஏசாயா அதிகாரம் 59  
  • ஏசாயா அதிகாரம் 60  
  • ஏசாயா அதிகாரம் 61  
  • ஏசாயா அதிகாரம் 62  
  • ஏசாயா அதிகாரம் 63  
  • ஏசாயா அதிகாரம் 64  
  • ஏசாயா அதிகாரம் 65  
  • ஏசாயா அதிகாரம் 66  
×

Alert

×

Tamil Letters Keypad References