தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும்} [PS] அதற்கு யோபு உரைத்த மறுமொழி;
2. [QS][SS] இதைப்போன்ற பலவற்றை[SE][SS] நான் கேட்டதுண்டு;[SE][SS] “புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.[SE][QE]
3. [QS][SS] உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா?[SE][SS] வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?[SE][QE]
4. [QS][SS] என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;[SE][SS] என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,[SE][SS] உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,[SE][SS] உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.[SE][QE]
5. [QS][SS] ஆயினும், என் சொற்களால்[SE][SS] உங்களை வலுப்படுத்துவேன்;[SE][SS] என் உதட்டின் ஆறுதல்[SE][SS] உங்கள் வலியைக் குறைக்குமே![SE][QE]
6. [QS][SS] நான் பேசினாலும் என் வலி குறையாது;[SE][SS] அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.[SE][QE]
7. [QS][SS] உண்மையில், கடவுளே![SE][SS] இப்போது என்னை உளுத்திட வைத்தீர்;[SE][SS] என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.[SE][QE]
8. [QS][SS] நீர் என்னை இளைக்கச் செய்தீர்;[SE][SS] அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று;[SE][SS] என் மெலிவு எழுந்து[SE][SS] எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.[SE][QE]
9. [QS][SS] அவர் என்னை வெறுத்தார்;[SE][SS] வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்;[SE][SS] என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்;[SE][SS] என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.[SE][QE]
10. [QS][SS] மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;[SE][SS] ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;[SE][SS] எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.[SE][QE]
11. [QS][SS] இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்.[SE][SS] கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;[SE][QE]
12. [QS][SS] நலமுடன் இருந்தேன் நான்;[SE][SS] தகர்த்தெறிந்தார் என்னை அவர்;[SE][SS] பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;[SE][SS] என்னையே தம் இலக்காக ஆக்கினார்.[SE][QE]
13. [QS][SS] அவர் தம் வில்வீரர்[SE][SS] என்னை வளைத்துக் கொண்டனர்;[SE][SS] என் ஈரலை அவர் பிளந்து விட்டார்;[SE][SS] ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை[SE][SS] மண்ணில் சிந்தினார்.[SE][QE]
14. [QS][SS] முகத்தில் அடியடியென்று[SE][SS] என்னை அடித்தார்;[SE][SS] போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.[SE][QE]
15. [QS][SS] சாக்கு உடையை நான் என் உடலுக்குத்[SE][SS] தைத்துக் கொண்டேன்;[SE][SS] புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.[SE][QE]
16. [QS][SS] அழுதழுது என் முகம் சிவந்தது;[SE][SS] என் கண்களும் இருண்டு போயின,[SE][QE]
17. [QS][SS] இருப்பினும், வன்செயல்[SE][SS] என் கையில் இல்லை;[SE][SS] மாசு என் மன்றாட்டில் இல்லை.[SE][QE]
18. [QS][SS] மண்ணே! என் குருதியை மறைக்காதே;[SE][SS] என் கூக்குரலைப் புதைக்காதே.[SE][QE]
19. [QS][SS] இப்பொழுதும் இதோ![SE][SS] என் சான்று விண்ணில் உள்ளது;[SE][SS] எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார். [* யோபு 19:25.[QE]. ] [SE][QE]
20. [QS][SS] என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே![SE][SS] கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.[SE][QE]
21. [QS][SS] ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல்,[SE][SS] அவர் மனிதர் சார்பாகக்[SE][SS] கடவுளிடம் பரிந்து பேசுவார்.[SE][QE]
22. [QS][SS] இன்னும் சில ஆண்டுகளே உள்ளன;[SE][SS] பிறகு திரும்ப வரவியலா[SE][SS] வழியில் செல்வேன்.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 42
கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும் 1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி; 2 இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு; “புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம். 3 உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா? வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ? 4 என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்; என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால், உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து, உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும். 5 ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்; என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே! 6 நான் பேசினாலும் என் வலி குறையாது; அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது. 7 உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்; என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர். 8 நீர் என்னை இளைக்கச் செய்தீர்; அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று; என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது. 9 அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான். 10 மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்; ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்; எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர். 11 இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்; 12 நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்; பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்; என்னையே தம் இலக்காக ஆக்கினார். 13 அவர் தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்; என் ஈரலை அவர் பிளந்து விட்டார்; ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார். 14 முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்; போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார். 15 சாக்கு உடையை நான் என் உடலுக்குத் தைத்துக் கொண்டேன்; புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன். 16 அழுதழுது என் முகம் சிவந்தது; என் கண்களும் இருண்டு போயின, 17 இருப்பினும், வன்செயல் என் கையில் இல்லை; மாசு என் மன்றாட்டில் இல்லை. 18 மண்ணே! என் குருதியை மறைக்காதே; என் கூக்குரலைப் புதைக்காதே. 19 இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார். [* யோபு 19:25.. ] 20 என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன். 21 ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல், அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார். 22 இன்னும் சில ஆண்டுகளே உள்ளன; பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References