Tamil சத்தியவேதம்
யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்
யோபு அதிகாரம் 16
கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும் 1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி;
2 இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு; “புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.
3 உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா? வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?
யோபு அதிகாரம் 16
4 என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்; என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால், உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து, உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.
5 ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்; என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே!
யோபு அதிகாரம் 16
6 நான் பேசினாலும் என் வலி குறையாது; அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.
7 உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்; என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.
யோபு அதிகாரம் 16
8 நீர் என்னை இளைக்கச் செய்தீர்; அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று; என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.
9 அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.
யோபு அதிகாரம் 16
10 மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்; ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்; எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.
11 இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;
யோபு அதிகாரம் 16
12 நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்; பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்; என்னையே தம் இலக்காக ஆக்கினார்.
13 அவர் தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்; என் ஈரலை அவர் பிளந்து விட்டார்; ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார்.
யோபு அதிகாரம் 16
14 முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்; போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.
15 சாக்கு உடையை நான் என் உடலுக்குத் தைத்துக் கொண்டேன்; புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.
யோபு அதிகாரம் 16
16 அழுதழுது என் முகம் சிவந்தது; என் கண்களும் இருண்டு போயின,
17 இருப்பினும், வன்செயல் என் கையில் இல்லை; மாசு என் மன்றாட்டில் இல்லை.
18 மண்ணே! என் குருதியை மறைக்காதே; என் கூக்குரலைப் புதைக்காதே.
யோபு அதிகாரம் 16
19 இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார். [* யோபு 19:25.. ]
20 என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.
யோபு அதிகாரம் 16
21 ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல், அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார்.
22 இன்னும் சில ஆண்டுகளே உள்ளன; பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.