தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எஸ்றா

பதிவுகள்

எஸ்றா அதிகாரம் 6

1 தாரியுஸ் அரசன் கட்டளையிடவே, பபிலோனிலுள்ள நூல் நிலையத்தைத் துருவிப் பார்க்கத் தொடங்கினர். 2 மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான் என்ற அரண்மனையில் ஒரு நூல் அகப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது" 3 சீருஸ் அரசர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டில், அரசர் சீருஸ் பிறப்பித்த ஆணையாவது: யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயம், பலிகள் செலுத்தப் பெறுவதற்குத் தகுந்த ஓர் இடத்திலே கட்டப்பட வேண்டும். அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாய் இருக்க வேண்டும். எனவே, அதற்கேற்றபடி அடிப்படை உறுதியாயிருக்க வேண்டும். 4 அது மூன்று வரிசை பொளியப்படாத கற்களாலும், மூன்று வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்பட வேண்டும். அதற்கு வேண்டிய செலவு அரசரின் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். 5 மேலும், யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோனுக்குக் கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிப்பாத்திரங்கள் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்." 6 எனவே, தாரியுஸ் கட்டளைக் கடிதம் ஒன்று எழுதினான்: "நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழும் தத்தானாயியும் ஸ்தார்புஜனாயிமாகிய நீங்களும், நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வரும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்த அபற்சக்கேயராகிய யாவரும் யூதர்களை விட்டு அகன்று போக வேண்டும். 7 யூதர்களின் ஆளுநரும் அவர்களின் மூப்பர்களும் இக் கடவுளின் ஆலயத்தை அது முன்பு இருந்த இடத்திலேயே கட்டும்படியாக விட்டு விடுங்கள். 8 மேலும், கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்கு யூதர்களின் மூப்பர்கள் செய்ய வேண்டியதைக்குறித்து, நாம் இடும் கட்டளையாவது: வேலை தடை படாமலிருக்கும் பொருட்டு, நதிக்கு அக்கரையில் உள்ள நாட்டினின்று அரசனுக்கு வரும் கப்பத்திலிருந்து அம்மனிதர்களுக்கு வேண்டியதையெல்லாம் தவறாது கொடுக்க வேண்டும். 9 மேலும், தேவைக்குத் தகுந்தபடி விண்ணகக் கடவுளுக்குத் தகனப் பலிகளைச் செலுத்துவதற்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், வெள்ளாட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றை யெருசலேமிலுள்ள குருக்களின் சொற்படியே நாள்தோறும் தவறாது கொடுக்க வேண்டும். 10 குருக்கள் விண்ணகக் கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தி, அரசரும் அவருடைய புதல்வரும் நீடூழி வாழுமாறு அவர்களுக்காக மன்றாட வேண்டும். 11 இக்கடளையை நாமே பிறப்பித்தோம். எவனும் இக்கட்டளையை மீறினால், அவன் வீட்டிலிருந்து ஓர் உத்திரத்தை எடுத்து நாட்டி, அதில் அவன் அறையப்பட வேண்டும்; அவனது வீடு பறிமுதல் செய்யப்பட வேண்டும். 12 மேலும், இக்கட்டளையை மாற்றவோ, யெருசலேமிலுள்ள ஆலயத்தை அழிக்கவோ, அரசர்களிலேனும் மக்களிலேனும் யாராவது முயன்றால், கடவுள் தம் திருப்பெயர் விளங்கும்படி அவ்விடத்திலேயே அவர்கள் எல்லாரையும் அழிப்பாராக! தாரியுஸ் ஆகிய நாமே இக்கட்டளையைக் கொடுத்தோம். இது கவனமாய் அனுசரிக்கப்பட வேண்டும்." 13 நதிக்கு அக்கரையில், ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தத்தானாயியும் ஸ்தார்புஜனாயியும் அவர்களின் கூட்டத்தாரும் அரசன் தாரியுசின் கட்டளையைக் கவனத்துடன் நிறைவேற்றி வந்தனர். 14 யூதர்களின் மூப்பர்கள், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தனர்; இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோ மகன் சக்கரியாசும் உரைத்திருந்தபடி கட்டட வேலை முன்னேறியது. அவர்கள் இஸ்ராயேலின் கடவுளின் கட்டளைப்படியும், பாரசீக அரசர்களான சீருஸ், தாரியுஸ், அர்தக்சேர்செஸ் ஆகியோரின் கட்டளைப்படியும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். 15 அரசன் தாரியுசுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டு, ஆதார் மாதம் மூன்றாம் நாள் ஆலய வேலை முடிவுற்றது. 16 அப்பொழுது இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த ஏனையோரும் கடவுளின் கோவில் அபிஷுகத் திருவிழாவை அக்களிப்புடன் கொண்டாடினர். 17 கோயில் அபிஷுகத்திற்காக நூறு இளங்காளைகளும் இருநூறு செம்மறிக்கடாக்களும் நானூறு செம்மறிக் குட்டிகளும், இஸ்ராயேல் கோத்திரங்களின் கணக்குப்படி, இஸ்ராயேல் மக்கள் அனைவரின் பாவத்துக்காகப் பன்னிரு வெள்ளாட்டுக் கிடாக்களும் ஒப்புக்கொடுத்தனர். 18 மோயீசனின் நூலில் எழுதியுள்ளவாறு, அவர்கள் யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயத்தில் திருப்பணி புரியக் குருக்களையும் லேவியர்களையும், தத்தம் பிரிவின் முறைப்படி நியமித்தனர். 19 மேலும், அடிமைத்தனத்திதிலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்கள் முதன் மாதம் பதினான்காம் நாள், பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடினர். 20 குருக்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டவர்களாய்த் தங்களைத் தூய்மைப் படுத்தியிருந்தனர். குருக்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லாருக்காகவும் தங்கள் உடன் குருக்களுக்காகவும் தங்களுக்காகவும் பாஸ்காவைப் பலியிட்டனர். 21 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்களும், இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரைப் பின்பற்றுவதற்காகப் புறவினத்தாரின் தீட்டினின்று விடுபட்டு இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்துகொண்ட அனைவரும் பாஸ்காகை உண்டனர். 22 புளியாத அப்பத் திருவிழாவை ஏழு நாளளவும் மகிழ்வோடு கொண்டாடினர். இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஆலய வேலைக்கு உதவி செய்வதற்காக அசீரிய மன்னனின் இதயத்தை மாற்றியிருந்ததை நினைந்து நினைந்து, ஆண்டவரில் அவர்கள் அக்களித்தனர்.
1 தாரியுஸ் அரசன் கட்டளையிடவே, பபிலோனிலுள்ள நூல் நிலையத்தைத் துருவிப் பார்க்கத் தொடங்கினர். .::. 2 மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான் என்ற அரண்மனையில் ஒரு நூல் அகப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது" .::. 3 சீருஸ் அரசர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டில், அரசர் சீருஸ் பிறப்பித்த ஆணையாவது: யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயம், பலிகள் செலுத்தப் பெறுவதற்குத் தகுந்த ஓர் இடத்திலே கட்டப்பட வேண்டும். அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாய் இருக்க வேண்டும். எனவே, அதற்கேற்றபடி அடிப்படை உறுதியாயிருக்க வேண்டும். .::. 4 அது மூன்று வரிசை பொளியப்படாத கற்களாலும், மூன்று வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்பட வேண்டும். அதற்கு வேண்டிய செலவு அரசரின் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். .::. 5 மேலும், யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோனுக்குக் கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிப்பாத்திரங்கள் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்." .::. 6 எனவே, தாரியுஸ் கட்டளைக் கடிதம் ஒன்று எழுதினான்: "நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழும் தத்தானாயியும் ஸ்தார்புஜனாயிமாகிய நீங்களும், நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வரும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்த அபற்சக்கேயராகிய யாவரும் யூதர்களை விட்டு அகன்று போக வேண்டும். .::. 7 யூதர்களின் ஆளுநரும் அவர்களின் மூப்பர்களும் இக் கடவுளின் ஆலயத்தை அது முன்பு இருந்த இடத்திலேயே கட்டும்படியாக விட்டு விடுங்கள். .::. 8 மேலும், கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்கு யூதர்களின் மூப்பர்கள் செய்ய வேண்டியதைக்குறித்து, நாம் இடும் கட்டளையாவது: வேலை தடை படாமலிருக்கும் பொருட்டு, நதிக்கு அக்கரையில் உள்ள நாட்டினின்று அரசனுக்கு வரும் கப்பத்திலிருந்து அம்மனிதர்களுக்கு வேண்டியதையெல்லாம் தவறாது கொடுக்க வேண்டும். .::. 9 மேலும், தேவைக்குத் தகுந்தபடி விண்ணகக் கடவுளுக்குத் தகனப் பலிகளைச் செலுத்துவதற்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், வெள்ளாட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றை யெருசலேமிலுள்ள குருக்களின் சொற்படியே நாள்தோறும் தவறாது கொடுக்க வேண்டும். .::. 10 குருக்கள் விண்ணகக் கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தி, அரசரும் அவருடைய புதல்வரும் நீடூழி வாழுமாறு அவர்களுக்காக மன்றாட வேண்டும். .::. 11 இக்கடளையை நாமே பிறப்பித்தோம். எவனும் இக்கட்டளையை மீறினால், அவன் வீட்டிலிருந்து ஓர் உத்திரத்தை எடுத்து நாட்டி, அதில் அவன் அறையப்பட வேண்டும்; அவனது வீடு பறிமுதல் செய்யப்பட வேண்டும். .::. 12 மேலும், இக்கட்டளையை மாற்றவோ, யெருசலேமிலுள்ள ஆலயத்தை அழிக்கவோ, அரசர்களிலேனும் மக்களிலேனும் யாராவது முயன்றால், கடவுள் தம் திருப்பெயர் விளங்கும்படி அவ்விடத்திலேயே அவர்கள் எல்லாரையும் அழிப்பாராக! தாரியுஸ் ஆகிய நாமே இக்கட்டளையைக் கொடுத்தோம். இது கவனமாய் அனுசரிக்கப்பட வேண்டும்." .::. 13 நதிக்கு அக்கரையில், ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தத்தானாயியும் ஸ்தார்புஜனாயியும் அவர்களின் கூட்டத்தாரும் அரசன் தாரியுசின் கட்டளையைக் கவனத்துடன் நிறைவேற்றி வந்தனர். .::. 14 யூதர்களின் மூப்பர்கள், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தனர்; இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோ மகன் சக்கரியாசும் உரைத்திருந்தபடி கட்டட வேலை முன்னேறியது. அவர்கள் இஸ்ராயேலின் கடவுளின் கட்டளைப்படியும், பாரசீக அரசர்களான சீருஸ், தாரியுஸ், அர்தக்சேர்செஸ் ஆகியோரின் கட்டளைப்படியும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். .::. 15 அரசன் தாரியுசுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டு, ஆதார் மாதம் மூன்றாம் நாள் ஆலய வேலை முடிவுற்றது. .::. 16 அப்பொழுது இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த ஏனையோரும் கடவுளின் கோவில் அபிஷுகத் திருவிழாவை அக்களிப்புடன் கொண்டாடினர். .::. 17 கோயில் அபிஷுகத்திற்காக நூறு இளங்காளைகளும் இருநூறு செம்மறிக்கடாக்களும் நானூறு செம்மறிக் குட்டிகளும், இஸ்ராயேல் கோத்திரங்களின் கணக்குப்படி, இஸ்ராயேல் மக்கள் அனைவரின் பாவத்துக்காகப் பன்னிரு வெள்ளாட்டுக் கிடாக்களும் ஒப்புக்கொடுத்தனர். .::. 18 மோயீசனின் நூலில் எழுதியுள்ளவாறு, அவர்கள் யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயத்தில் திருப்பணி புரியக் குருக்களையும் லேவியர்களையும், தத்தம் பிரிவின் முறைப்படி நியமித்தனர். .::. 19 மேலும், அடிமைத்தனத்திதிலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்கள் முதன் மாதம் பதினான்காம் நாள், பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடினர். .::. 20 குருக்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டவர்களாய்த் தங்களைத் தூய்மைப் படுத்தியிருந்தனர். குருக்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லாருக்காகவும் தங்கள் உடன் குருக்களுக்காகவும் தங்களுக்காகவும் பாஸ்காவைப் பலியிட்டனர். .::. 21 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்களும், இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரைப் பின்பற்றுவதற்காகப் புறவினத்தாரின் தீட்டினின்று விடுபட்டு இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்துகொண்ட அனைவரும் பாஸ்காகை உண்டனர். .::. 22 புளியாத அப்பத் திருவிழாவை ஏழு நாளளவும் மகிழ்வோடு கொண்டாடினர். இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஆலய வேலைக்கு உதவி செய்வதற்காக அசீரிய மன்னனின் இதயத்தை மாற்றியிருந்ததை நினைந்து நினைந்து, ஆண்டவரில் அவர்கள் அக்களித்தனர்.
  • எஸ்றா அதிகாரம் 1  
  • எஸ்றா அதிகாரம் 2  
  • எஸ்றா அதிகாரம் 3  
  • எஸ்றா அதிகாரம் 4  
  • எஸ்றா அதிகாரம் 5  
  • எஸ்றா அதிகாரம் 6  
  • எஸ்றா அதிகாரம் 7  
  • எஸ்றா அதிகாரம் 8  
  • எஸ்றா அதிகாரம் 9  
  • எஸ்றா அதிகாரம் 10  
×

Alert

×

Tamil Letters Keypad References