தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எஸ்றா

பதிவுகள்

எஸ்றா அதிகாரம் 5

1 ஆயினும், இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோவின் மகன் சக்கரியாசும் யூதாவிலும் யெருசலேமிலுமிருந்த யூதர்களிடம் இஸ்ராயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர். 2 அப்போது ஜெரோபாபேலின் மகன் சலாத்தியேலும், யோசதேக்கின் மகன் யோசுவாவும் யெருசலேமில் கடவுளின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத் தொடங்கினர். இறைவாக்கினரும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். 3 அக்காலத்தில் நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் வந்து, "இவ்வாலயத்தைக் கட்டவும், இதன் சுவர்களை எழுப்பவும், உங்களுக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்?" என்று கேட்டனர். 4 அதற்கு நாங்கள் இவ்வாலயத்தை எழுப்பக் காரணமாயிருந்தோரின் பெயர்களை அவர்களுக்குக் கூறினோம். 5 கடவுளின் அருள் யூதமக்களின் மூப்பரோடு இருந்ததால், அவர்களை வேலை செய்யாதவாறு தடுக்க ஒருவராலும் முடியவில்லை. ஆயினும் இக்காரியம் தாரியுசுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் யூதர்கள் தங்கள் நியாயங்களை அவரிடத்திலேயே சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 6 நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த அற்பசாக்கேயரும் அரசன் தாரியுசுக்கு எழுதி அனுப்பிய கடிதம் வருமாறு: 7 தாரியுஸ் அரசருக்கு வணக்கம்! அரசர் அறிய வேண்டியதாவது: 8 நாங்கள் யூதேயா நாட்டிலுள்ள பெரும் கடவுளின் ஆலயத்திற்குப் போனோம். அது பொளியப்படாத கற்களால் கட்டப்பட்டு வருகிறது. அவற்றின் மேல் உத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேலை நுணுநுணுக்கமாகவும் விரைவாகவும் நடந்து கொண்டிருக்கிறது. 9 நாங்கள் அவர்களுடைய மூப்பர்களை நோக்கி, 'இவ்வாலயத்தைக் கட்டவும், இச்சுவர்களை எழுப்பவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்?' என்று கேட்டோம். 10 மேலும், தங்களுக்கு அறிவிக்கும் எண்ணத்துடன், அவர்களுடைய பெயர்களையும் கேட்டோம். அவர்களுள் பெரியோராய்த் திகழ்வோரின் பெயர்களையும் எழுதிக் கொண்டோம். 11 அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது: 'நாங்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள். பல ஆண்டுகளுக்கு முன், இஸ்ராயேலின் மாமன்னர் ஒருவரால் கட்டப்பட்ட ஆலயத்தைத் திரும்பவும் கட்டிக் கொண்டிருக்கிறோம். 12 எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குக் கோபம் மூட்டினதால், அவர் அவர்களைப் பபிலோனிய அரசனும் கல்தேயனுமான நபுக்கோதனசாருடைய கைகளில் ஒப்புவித்தார். அவர் இவ்வாலயத்தை அழித்து மக்களைப் பபிலோனுக்குச் சிறைப்படுத்திச் சென்றார். 13 ஆனால் பபிலோனிய அரசர் சீருஸ் தம் ஆட்சியின் முதல் ஆண்டில் இவ்வாலயத்தைக் கட்டி எழுப்பும்படி ஓர் ஆணை பிறப்பித்தார். 14 மேலும் யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோன் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை அரசர் சீருசே பபிலோன் கோவிலிலிருந்து எடுத்துக் கொடுத்தார். சாஸ்பசாரை இந்நாட்டின் ஆளுநராக அவரே நியமித்து, அவரின் கைகளில் அவற்றை ஒப்படைத்தார். 15 அரசர் அவரைப் பார்த்து: நீ இப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் யெருசலேமிலுள்ள ஆலயத்தில் வை. கடவுளின் ஆலயம் அது முன்பு இருந்த இடத்திலேயே எழுப்பப்படட்டும்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார். 16 எனவே அந்தச் சாஸ்பசார் யெருசலேமிற்கு வந்து கடவுளுடைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அன்று முதல் இன்று வரை அது கட்டப்பட்டு வந்தாலும், அது இன்னும் முடிவடையவில்லை' என்றார்கள். 17 ஆகவே, இப்போது அரசர் விரும்பினால், பபிலோனிலுள்ள அரசரது நூல்நிலையத்தில் தேடிப்பார்த்து, யெருசலேமில் கடவுளின் ஆலயம் எழுப்பப் படும்படியாகச் சீரூஸ் அரசர் ஆணை விடுத்தது உண்மைதானா என்று பார்க்கவும், இதுபற்றி அரசரின் விருப்பம் என்ன என்று எங்களுக்குத் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்."
1 ஆயினும், இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோவின் மகன் சக்கரியாசும் யூதாவிலும் யெருசலேமிலுமிருந்த யூதர்களிடம் இஸ்ராயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர். .::. 2 அப்போது ஜெரோபாபேலின் மகன் சலாத்தியேலும், யோசதேக்கின் மகன் யோசுவாவும் யெருசலேமில் கடவுளின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத் தொடங்கினர். இறைவாக்கினரும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். .::. 3 அக்காலத்தில் நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் வந்து, "இவ்வாலயத்தைக் கட்டவும், இதன் சுவர்களை எழுப்பவும், உங்களுக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்?" என்று கேட்டனர். .::. 4 அதற்கு நாங்கள் இவ்வாலயத்தை எழுப்பக் காரணமாயிருந்தோரின் பெயர்களை அவர்களுக்குக் கூறினோம். .::. 5 கடவுளின் அருள் யூதமக்களின் மூப்பரோடு இருந்ததால், அவர்களை வேலை செய்யாதவாறு தடுக்க ஒருவராலும் முடியவில்லை. ஆயினும் இக்காரியம் தாரியுசுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் யூதர்கள் தங்கள் நியாயங்களை அவரிடத்திலேயே சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. .::. 6 நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த அற்பசாக்கேயரும் அரசன் தாரியுசுக்கு எழுதி அனுப்பிய கடிதம் வருமாறு: .::. 7 தாரியுஸ் அரசருக்கு வணக்கம்! அரசர் அறிய வேண்டியதாவது: .::. 8 நாங்கள் யூதேயா நாட்டிலுள்ள பெரும் கடவுளின் ஆலயத்திற்குப் போனோம். அது பொளியப்படாத கற்களால் கட்டப்பட்டு வருகிறது. அவற்றின் மேல் உத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேலை நுணுநுணுக்கமாகவும் விரைவாகவும் நடந்து கொண்டிருக்கிறது. .::. 9 நாங்கள் அவர்களுடைய மூப்பர்களை நோக்கி, 'இவ்வாலயத்தைக் கட்டவும், இச்சுவர்களை எழுப்பவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்?' என்று கேட்டோம். .::. 10 மேலும், தங்களுக்கு அறிவிக்கும் எண்ணத்துடன், அவர்களுடைய பெயர்களையும் கேட்டோம். அவர்களுள் பெரியோராய்த் திகழ்வோரின் பெயர்களையும் எழுதிக் கொண்டோம். .::. 11 அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது: 'நாங்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள். பல ஆண்டுகளுக்கு முன், இஸ்ராயேலின் மாமன்னர் ஒருவரால் கட்டப்பட்ட ஆலயத்தைத் திரும்பவும் கட்டிக் கொண்டிருக்கிறோம். .::. 12 எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குக் கோபம் மூட்டினதால், அவர் அவர்களைப் பபிலோனிய அரசனும் கல்தேயனுமான நபுக்கோதனசாருடைய கைகளில் ஒப்புவித்தார். அவர் இவ்வாலயத்தை அழித்து மக்களைப் பபிலோனுக்குச் சிறைப்படுத்திச் சென்றார். .::. 13 ஆனால் பபிலோனிய அரசர் சீருஸ் தம் ஆட்சியின் முதல் ஆண்டில் இவ்வாலயத்தைக் கட்டி எழுப்பும்படி ஓர் ஆணை பிறப்பித்தார். .::. 14 மேலும் யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோன் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை அரசர் சீருசே பபிலோன் கோவிலிலிருந்து எடுத்துக் கொடுத்தார். சாஸ்பசாரை இந்நாட்டின் ஆளுநராக அவரே நியமித்து, அவரின் கைகளில் அவற்றை ஒப்படைத்தார். .::. 15 அரசர் அவரைப் பார்த்து: நீ இப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் யெருசலேமிலுள்ள ஆலயத்தில் வை. கடவுளின் ஆலயம் அது முன்பு இருந்த இடத்திலேயே எழுப்பப்படட்டும்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார். .::. 16 எனவே அந்தச் சாஸ்பசார் யெருசலேமிற்கு வந்து கடவுளுடைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அன்று முதல் இன்று வரை அது கட்டப்பட்டு வந்தாலும், அது இன்னும் முடிவடையவில்லை' என்றார்கள். .::. 17 ஆகவே, இப்போது அரசர் விரும்பினால், பபிலோனிலுள்ள அரசரது நூல்நிலையத்தில் தேடிப்பார்த்து, யெருசலேமில் கடவுளின் ஆலயம் எழுப்பப் படும்படியாகச் சீரூஸ் அரசர் ஆணை விடுத்தது உண்மைதானா என்று பார்க்கவும், இதுபற்றி அரசரின் விருப்பம் என்ன என்று எங்களுக்குத் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்."
  • எஸ்றா அதிகாரம் 1  
  • எஸ்றா அதிகாரம் 2  
  • எஸ்றா அதிகாரம் 3  
  • எஸ்றா அதிகாரம் 4  
  • எஸ்றா அதிகாரம் 5  
  • எஸ்றா அதிகாரம் 6  
  • எஸ்றா அதிகாரம் 7  
  • எஸ்றா அதிகாரம் 8  
  • எஸ்றா அதிகாரம் 9  
  • எஸ்றா அதிகாரம் 10  
×

Alert

×

Tamil Letters Keypad References