தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எஸ்றா

பதிவுகள்

எஸ்றா அதிகாரம் 1

1 பாரசீக அரசனான சீருசின் முதல் ஆண்டில் எரெமியாசு வழியாக ஆண்டவர் சொல்லியிருந்தது நிறைவேறும்படி, பாரசீக அரசன் சீருசின் மனத்தை ஆண்டவர் தூண்டிவிட்டார். அதனால், அவன் தன் நாடெங்கும் ஓர் ஆணை பிறப்பித்து அதை எழுத்து மூலமும் வெளியிட்டான். 2 பாரசீக அரசனான சீருஸ் சொல்லுவதாவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணிலுள்ள எல்லா அரசுகளையும் எனக்கு அடிமைப்படுத்தியுள்ளார்; மேலும், யூதேயாவிலுள்ள யெருசலேமில் தமக்கு ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் எனக்குக் கட்டளையிட்டுள்ளார். 3 உங்கள் நடுவே அவருடைய மக்கள் யாரேனும் உண்டா? அவர்களோடு அவர்களின் கடவுள் இருப்பாராக! அவர்கள் யூதாவிலுள்ள யெருசலேமுக்குப் போய் இஸ்ராயேலரின் கடவுளான ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக. யெருசலேமில் எழுந்தருளியிருக்கும் கடவுளே உண்மைக் கடவுள். 4 அக்குலத்தார் எங்கெங்கு வாழ்ந்துவரினும் அவர்கள் யெருசலேமிலுள்ள தங்கள் கடவுளுடைய ஆலயத்திற்குக் காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதோடு, பொன்னும் வெள்ளியும், ஏனைய பொருட்களும், ஆடுமாடுகளும் அவர்களுக்குக் கொடுத்து உதவுவார்களாக" என்பதே அக்கட்டளை. 5 அப்போது யெருசலேமிலிருந்த ஆண்டவரின் ஆலயத்தைத்த திரும்பவும் கட்டி எழுப்புவதற்காக யூதா, பென்யமீன் குலத்தலைவர்களும் குருக்களும் லேவியரும் கடவுளின் ஆவியால் ஏவப்பட்டிருந்த அனைவரும் முன் வந்தனர். 6 சுற்றிலுமுள்ள ஊர்களில் வாழ்ந்து வந்த அனைவரும் காணிக்கையாகக் கொடுத்திருந்தவற்றைத் தவிர, பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் மற்றப் பொருட்களையும் மிருகங்களையும் தட்டுமுட்டுகளையும் அவர்களுக்குக் கொடுத்து உதவினர். 7 மேலும் நபுக்கோதனசார் யெருசலேமிலிருந்து எடுத்து வந்து தன் கடவுளின் கோவிலில் வைத்திருந்த ஆண்டவரின் ஆலயப் பாத்திரங்களைச் சீருஸ் திருப்பிக் கொடுத்து விட்டான். 8 அவற்றைப் பாரசீக அரசனான சீருஸ், கஸ்பாரின் மகன் மித்திரீ தாத்திசின் மூலம் யூதாவின் தலைவனான சஸ்பசாரிடம் கொடுத்தான். 9 அவையாவன: பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது, பொற் கிண்ணங்கள் முப்பது; 10 வேறு வகை வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம், 11 பொன் வெள்ளிப் பாத்திரங்கள் ஐயாயிரத்து நானூறு. இவற்றை எல்லாம் சஸ்பசாரும், பபிலோன் அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமுக்குத் திரும்பின யூதர்களும் கொண்டு வந்திருந்தனர்.
1. பாரசீக அரசனான சீருசின் முதல் ஆண்டில் எரெமியாசு வழியாக ஆண்டவர் சொல்லியிருந்தது நிறைவேறும்படி, பாரசீக அரசன் சீருசின் மனத்தை ஆண்டவர் தூண்டிவிட்டார். அதனால், அவன் தன் நாடெங்கும் ஓர் ஆணை பிறப்பித்து அதை எழுத்து மூலமும் வெளியிட்டான். 2. பாரசீக அரசனான சீருஸ் சொல்லுவதாவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணிலுள்ள எல்லா அரசுகளையும் எனக்கு அடிமைப்படுத்தியுள்ளார்; மேலும், யூதேயாவிலுள்ள யெருசலேமில் தமக்கு ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் எனக்குக் கட்டளையிட்டுள்ளார். 3. உங்கள் நடுவே அவருடைய மக்கள் யாரேனும் உண்டா? அவர்களோடு அவர்களின் கடவுள் இருப்பாராக! அவர்கள் யூதாவிலுள்ள யெருசலேமுக்குப் போய் இஸ்ராயேலரின் கடவுளான ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக. யெருசலேமில் எழுந்தருளியிருக்கும் கடவுளே உண்மைக் கடவுள். 4. அக்குலத்தார் எங்கெங்கு வாழ்ந்துவரினும் அவர்கள் யெருசலேமிலுள்ள தங்கள் கடவுளுடைய ஆலயத்திற்குக் காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதோடு, பொன்னும் வெள்ளியும், ஏனைய பொருட்களும், ஆடுமாடுகளும் அவர்களுக்குக் கொடுத்து உதவுவார்களாக" என்பதே அக்கட்டளை. 5. அப்போது யெருசலேமிலிருந்த ஆண்டவரின் ஆலயத்தைத்த திரும்பவும் கட்டி எழுப்புவதற்காக யூதா, பென்யமீன் குலத்தலைவர்களும் குருக்களும் லேவியரும் கடவுளின் ஆவியால் ஏவப்பட்டிருந்த அனைவரும் முன் வந்தனர். 6. சுற்றிலுமுள்ள ஊர்களில் வாழ்ந்து வந்த அனைவரும் காணிக்கையாகக் கொடுத்திருந்தவற்றைத் தவிர, பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் மற்றப் பொருட்களையும் மிருகங்களையும் தட்டுமுட்டுகளையும் அவர்களுக்குக் கொடுத்து உதவினர். 7. மேலும் நபுக்கோதனசார் யெருசலேமிலிருந்து எடுத்து வந்து தன் கடவுளின் கோவிலில் வைத்திருந்த ஆண்டவரின் ஆலயப் பாத்திரங்களைச் சீருஸ் திருப்பிக் கொடுத்து விட்டான். 8. அவற்றைப் பாரசீக அரசனான சீருஸ், கஸ்பாரின் மகன் மித்திரீ தாத்திசின் மூலம் யூதாவின் தலைவனான சஸ்பசாரிடம் கொடுத்தான். 9. அவையாவன: பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது, பொற் கிண்ணங்கள் முப்பது; 10. வேறு வகை வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம், 11. பொன் வெள்ளிப் பாத்திரங்கள் ஐயாயிரத்து நானூறு. இவற்றை எல்லாம் சஸ்பசாரும், பபிலோன் அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமுக்குத் திரும்பின யூதர்களும் கொண்டு வந்திருந்தனர்.
  • எஸ்றா அதிகாரம் 1  
  • எஸ்றா அதிகாரம் 2  
  • எஸ்றா அதிகாரம் 3  
  • எஸ்றா அதிகாரம் 4  
  • எஸ்றா அதிகாரம் 5  
  • எஸ்றா அதிகாரம் 6  
  • எஸ்றா அதிகாரம் 7  
  • எஸ்றா அதிகாரம் 8  
  • எஸ்றா அதிகாரம் 9  
  • எஸ்றா அதிகாரம் 10  
×

Alert

×

Tamil Letters Keypad References