1 பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி:2 நீ முதல் மாதத்தின் முதல் நாளன்று உடன்படிக்கைக் கூடாரத்தை நிறுவனம் செய்து,3 அதில் பெட்டகத்தை வைத்து அதைத் திரையினால் மறைத்து,4 மேசையையும் கொண்டு வந்து அதன் மீது கட்டளையிடப்பட்டவற்றை முறைப்படி வைத்து, குத்துவிளக்கையும் அதன் அகல்களையும் ஏற்றி,5 பொன் தூபப் பீடத்தைச் சாட்சியப் பெட்டகத்திற்கு முன் நிறுத்திவைப்பாய். கூடார வாயிலிலே திரையையும் தொங்க விடுவாய்.6 பின், இதற்கு முன்பாகத் தகனப் பலிப்பீடத்தை நிறுவி,7 பீடத்துக்கும் கூடாரத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, அதில் நிறையத் தண்ணீர் வார்ப்பாய்.8 மேலும், பிராகாரத்துக்கும் அதன் வாயிலுக்கும் முன் தொங்கு திரைகளைச் சுற்றிலும் அமைப்பாய்.9 பின் அபிசேகத் தைலத்தை எடுத்துப் பூசிக் கூடாரத்தையும் அதன் பாத்திரங்களையும் பரிசுத்தப்படுத்துவாய்.10 தகனப் பலிப் பீடத்தையும் அதன் எல்லாப் பாத்திரங்களையும்,11 தொட்டியையும் அதன் பாதத்தையும், அவைகளெல்லாம் மிகவும் பரிசுத்தமான பொருட்களாகும்படி அபிசேகத் தைலத்தால் பூசுவாய்.12 அதன்பின் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் உடன்படிக்கைக் கூடார வாயிலுக்கு அழைத்து அவர்களைத் தண்ணீரிலே குளிப்பாட்டி131415(13) அவர்கள் நமக்கு ஊழியம் செய்யும் படிக்கும், அவர்களின் ( அபிசேகப் ) பூசுதல் நித்திய குருத்துவத்திற்குச் செல்லும்படிக்கும், அவர்களுக்குத் திருவுடைகளை அணிவிப்பாய் என்றருளினார்.16(14) ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் மோயீசன் செய்தார்.17(15) ஆகையால், இரண்டாம் ஆண்டின் முதல் மாதம் முதல் நாளன்று ஆசாரக் கூடாரம் நிறுவனம் செய்தாயிற்று.18(16) மோயீசனே அதை நிறுவினார். பலகைகளையும் பாதங்களையும் தண்டுகளையும் வைத்துத் தூண்களையும் நிறுத்தி,19(17) ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி கூடாரத்தின் மீது திரையையும் விரித்து, அதன் மேலே மூடியையும் பரப்பினார்.20(18) சாட்சியப் ( பலகைகளைப் ) பெட்டகத்தினுள் வைத்து, அதன் கீழே தண்டுகளையும், அதன் மேலே இரக்கத்தின் அரியணையையும் அமைத்தார்.21(19) பெட்டகத்தைக் கூடாரத்தினுள்ளே கொண்டுவந்த பின், ஆண்டவருடைய கட்டளையை நிறைவேற்றும்படி, அதன்முன் திரையைக் கட்டித் தொங்கவிட்டார்.22(20) சாட்சியக் கூடாரத்திற்கு வடப்புறத்தில் திரைக்கு வெளியே மேசையை வைத்து,23(21) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, காணிக்கை அப்பங்களையும் ( அவர் முன்னிலையில் ) ஒழுங்காய் வைத்தார்.24(22) உடன்படிக்கைக் கூடாரத்திலே தென்புறமாக மேசைக்கு எதிரே குத்துவிளக்கையும் வைத்து,25(23) ஆண்டவருடைய கட்டளைப்படி அகல்களையும் வரிசைப்படி அமைத்து ஏற்றினார்.26(24) உடன்படிக்கைக் கூடாரத்தினுள் திரைக்கு எதிராகத் தங்கப் பீடத்தையும் நிறுவி,27(25) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே அதன் மீது நறுமணத் தூபத்தையும் காட்டினார்.28(26) சாட்சியக் கூடாரத்தின் வாயிலிலே தொங்கு திரையைத் தூக்கி வைத்தார்.29(27) அன்றியும், ஆண்டவர் கட்டளையிட்டபடி, சாட்சிய மண்டபத்திலே தகனப் பலிப்பீடத்தை நிறுவி, அதன்மேல் தகனப் பலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தினார்.30(28) பின் சாட்சியக் கூடாரத்துக்கும் ( அந்தப் பீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, அதிலே நிறையத் தண்ணீர் வார்த்தார்.31(29) அவ்விடத்திலே மோயீசனும், ஆரோனும் அவன் புதல்வர்களும் கைகால்களைக் கழுவுவார்கள்.32(30) அவர்கள் கூடாரத்துக்குள்ளே புகும்போதும், பலிப்பீடத்தண்டை வரும் போதும், ( அவ்வாறே, கழுவிக் கொள்ள வேண்டுமென்று ) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.33(31) பின் ( மோயீசன் ) உடன்படிக்கைக் கூடாரத்தையும் பீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, அதன் வாயிலிலே தொங்கு திரையைத் தொங்க விட்டார்.34(32) இவையெல்லாம் முடிந்த போது ஒரு மேகம் சாட்சியக் கூடாரத்தை மூடினதுமன்றி, ஆண்டவருடைய மாட்சியும் அதனை நிரப்பிற்று.35(33) மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஆண்டவருடைய மாட்சி மின்னி எரிந்ததினாலே, மோயீசன், உடன்படிக்கைக் கூடாரத்திற்குள்ளே நுழைய இயலாதிருந்தார். ஏனென்றால், அம்மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்தது.36(34) திருவுறைவிடத்திலிருந்து மேகம் எழும்பும்போது இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போவார்கள்.37(35) மேகம் எழும்பாமல் மேலே தங்கியிருக்கும் போதோ, அவர்கள் பயணம் செய்யாமல் அவ்விடத்திலேயே இருப்பார்கள்.38(36) ஏனென்றால், இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் தங்கள் இல்லிடங்களிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, பகலிலே ஆண்டவருடைய மேகமும் இரவிலே நெருப்புச் சுடரும் உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தன.