தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யாத்திராகமம்

யாத்திராகமம் அதிகாரம் 31

1 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 இதோ நாம் யூதா கோத்திரத்தில் ஊர் என்பவனுடைய புதல்வனான உறியின் மகன் பெசெலேயலைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறோம். 3 அவனுக்கு ஞானமும் புத்தியும் அறிவும் உண்டாக இறை ஆவியினாலே அவனை நிரப்பி, 4 பொன், வெள்ளி, வெண்கலத்திலும், 5 பளிங்குக் கல்லிலும், இரத்தினங்களிலும், பலவகை மரங்களிலும் செய்யக்கூடிய எல்லா வேலையையும் திட்டமிட்டுச் செய்வதற்கு வேண்டிய நுட்பத்தைத் தந்தருளினோம். 6 தான் கோத்திரத்தில் உதித்த அக்கிசமேக்கின் புதல்வன் ஒலியாவை நாம் அவனுக்குத் துணையாகத் தெரிந்தெடுத்ததுமன்றி, நாம் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் செய்யும்படி திறமையுள்ளவர்களின் இதயத்திலும் ஞானத்தைத் தந்தருளினோம். 7 உடன்படிக்கைக் கூடாரம், சாட்சியப் பெட்டகம், இதன்மேல் இருக்கும் இரக்கத்தின் அரியணை, இவை முதலிய ஆசாரக் கூடாரத்தின் 8 எல்லாத் தட்டுமுட்டுக்களும் மேசையும் அதன் பாத்திரங்களும், மிகப் பரிசுத்தக் குத்து விளக்கும், அதன் கருவிகளும், 9 வாசனைப் பொருளின் பீடமும், தகனப் பலிப் பீடமும், இவைகளைச் சேர்ந்த எல்லாப் பணிமுட்டுக்களும் தொட்டியும் அதன் பாதமும், 10 குருவாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் திருக் கோலமாய் அணிந்து தங்கள் குருத்துவத் தொழில் செய்வதற்கான உடைகளும், அபிசேகத் தைலம், 11 பரிசுத்த இடத்திற்குரிய வாசனைத் திரவிய தூபம் ஆக நாம் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் அமைப்பார்கள் என்றருளினார். 12 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 13 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் நம்முடைய ஓய்வுநாளை அனுசரிப்பதில் கருத்தாய் இருங்கள். ஏனென்றால், உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற ஆண்டவர் நாம் என்று நீங்கள் அறியும்படி அது உங்கள் தலைமுறை தோறும் நமக்கும் உங்களுக்குமுள்ள அடையாளமாம். 14 நம்முடைய ஒய்வுநாளை அனுசரியுங்கள். ஏனென்றால், அது உங்களுக்குப் பரிசுத்தமானது. அதை மீறி நடப்பவன் கொலை செய்யப்படுவான். அன்று வேலை செய்பவன் தன் இனத்தாரினின்று விலக்குண்டு போவான். 15 ஆறு நாளும் வேலை செய்வீர்கள். ஏழாம் நாளோ ஆண்டவருக்குப் பரிசுத்தமான ஓய்வு நாளாகிய சாபத் நாள். அந்நாளிலே வேலை செய்யவன் எவனும் கொலை செய்யப்படுவான். 16 இஸ்ராயேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை ஆசாரத்தோடு கொண்டாடக் கடவார்கள். அது என்றென்றைக்கும், 17 நமக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உடன்படிக்கையும் அடையாளமுமாய் இருக்கும். ஏனென்றால், ஆண்டவர் விண்ணையும் மண்ணையும் ஆறுநாளில் படைத்து ஏழாம் நாளில் வேலையை நிறுத்தி ஓய்ந்திருந்தார் எனச்சொல்வாய் என்றார். 18 இப்படி, சீனாய் மலையில் ஆண்டவர் மோயீசனோடு பேசி முடித்தபின், தெய்வக் கையால் எழுதப்பட்ட சாட்சியக் கற்பலகைகளாகிய இரண்டு பலகைகளையும் அவரிடம் கொடுத்தார்.
1. மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2. இதோ நாம் யூதா கோத்திரத்தில் ஊர் என்பவனுடைய புதல்வனான உறியின் மகன் பெசெலேயலைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறோம். 3. அவனுக்கு ஞானமும் புத்தியும் அறிவும் உண்டாக இறை ஆவியினாலே அவனை நிரப்பி, 4. பொன், வெள்ளி, வெண்கலத்திலும், 5. பளிங்குக் கல்லிலும், இரத்தினங்களிலும், பலவகை மரங்களிலும் செய்யக்கூடிய எல்லா வேலையையும் திட்டமிட்டுச் செய்வதற்கு வேண்டிய நுட்பத்தைத் தந்தருளினோம். 6. தான் கோத்திரத்தில் உதித்த அக்கிசமேக்கின் புதல்வன் ஒலியாவை நாம் அவனுக்குத் துணையாகத் தெரிந்தெடுத்ததுமன்றி, நாம் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் செய்யும்படி திறமையுள்ளவர்களின் இதயத்திலும் ஞானத்தைத் தந்தருளினோம். 7. உடன்படிக்கைக் கூடாரம், சாட்சியப் பெட்டகம், இதன்மேல் இருக்கும் இரக்கத்தின் அரியணை, இவை முதலிய ஆசாரக் கூடாரத்தின் 8. எல்லாத் தட்டுமுட்டுக்களும் மேசையும் அதன் பாத்திரங்களும், மிகப் பரிசுத்தக் குத்து விளக்கும், அதன் கருவிகளும், 9. வாசனைப் பொருளின் பீடமும், தகனப் பலிப் பீடமும், இவைகளைச் சேர்ந்த எல்லாப் பணிமுட்டுக்களும் தொட்டியும் அதன் பாதமும், 10. குருவாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் திருக் கோலமாய் அணிந்து தங்கள் குருத்துவத் தொழில் செய்வதற்கான உடைகளும், அபிசேகத் தைலம், 11. பரிசுத்த இடத்திற்குரிய வாசனைத் திரவிய தூபம் ஆக நாம் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் அமைப்பார்கள் என்றருளினார். 12. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 13. நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் நம்முடைய ஓய்வுநாளை அனுசரிப்பதில் கருத்தாய் இருங்கள். ஏனென்றால், உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற ஆண்டவர் நாம் என்று நீங்கள் அறியும்படி அது உங்கள் தலைமுறை தோறும் நமக்கும் உங்களுக்குமுள்ள அடையாளமாம். 14. நம்முடைய ஒய்வுநாளை அனுசரியுங்கள். ஏனென்றால், அது உங்களுக்குப் பரிசுத்தமானது. அதை மீறி நடப்பவன் கொலை செய்யப்படுவான். அன்று வேலை செய்பவன் தன் இனத்தாரினின்று விலக்குண்டு போவான். 15. ஆறு நாளும் வேலை செய்வீர்கள். ஏழாம் நாளோ ஆண்டவருக்குப் பரிசுத்தமான ஓய்வு நாளாகிய சாபத் நாள். அந்நாளிலே வேலை செய்யவன் எவனும் கொலை செய்யப்படுவான். 16. இஸ்ராயேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை ஆசாரத்தோடு கொண்டாடக் கடவார்கள். அது என்றென்றைக்கும், 17. நமக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உடன்படிக்கையும் அடையாளமுமாய் இருக்கும். ஏனென்றால், ஆண்டவர் விண்ணையும் மண்ணையும் ஆறுநாளில் படைத்து ஏழாம் நாளில் வேலையை நிறுத்தி ஓய்ந்திருந்தார் எனச்சொல்வாய் என்றார். 18. இப்படி, சீனாய் மலையில் ஆண்டவர் மோயீசனோடு பேசி முடித்தபின், தெய்வக் கையால் எழுதப்பட்ட சாட்சியக் கற்பலகைகளாகிய இரண்டு பலகைகளையும் அவரிடம் கொடுத்தார்.
  • யாத்திராகமம் அதிகாரம் 1  
  • யாத்திராகமம் அதிகாரம் 2  
  • யாத்திராகமம் அதிகாரம் 3  
  • யாத்திராகமம் அதிகாரம் 4  
  • யாத்திராகமம் அதிகாரம் 5  
  • யாத்திராகமம் அதிகாரம் 6  
  • யாத்திராகமம் அதிகாரம் 7  
  • யாத்திராகமம் அதிகாரம் 8  
  • யாத்திராகமம் அதிகாரம் 9  
  • யாத்திராகமம் அதிகாரம் 10  
  • யாத்திராகமம் அதிகாரம் 11  
  • யாத்திராகமம் அதிகாரம் 12  
  • யாத்திராகமம் அதிகாரம் 13  
  • யாத்திராகமம் அதிகாரம் 14  
  • யாத்திராகமம் அதிகாரம் 15  
  • யாத்திராகமம் அதிகாரம் 16  
  • யாத்திராகமம் அதிகாரம் 17  
  • யாத்திராகமம் அதிகாரம் 18  
  • யாத்திராகமம் அதிகாரம் 19  
  • யாத்திராகமம் அதிகாரம் 20  
  • யாத்திராகமம் அதிகாரம் 21  
  • யாத்திராகமம் அதிகாரம் 22  
  • யாத்திராகமம் அதிகாரம் 23  
  • யாத்திராகமம் அதிகாரம் 24  
  • யாத்திராகமம் அதிகாரம் 25  
  • யாத்திராகமம் அதிகாரம் 26  
  • யாத்திராகமம் அதிகாரம் 27  
  • யாத்திராகமம் அதிகாரம் 28  
  • யாத்திராகமம் அதிகாரம் 29  
  • யாத்திராகமம் அதிகாரம் 30  
  • யாத்திராகமம் அதிகாரம் 31  
  • யாத்திராகமம் அதிகாரம் 32  
  • யாத்திராகமம் அதிகாரம் 33  
  • யாத்திராகமம் அதிகாரம் 34  
  • யாத்திராகமம் அதிகாரம் 35  
  • யாத்திராகமம் அதிகாரம் 36  
  • யாத்திராகமம் அதிகாரம் 37  
  • யாத்திராகமம் அதிகாரம் 38  
  • யாத்திராகமம் அதிகாரம் 39  
  • யாத்திராகமம் அதிகாரம் 40  
×

Alert

×

Tamil Letters Keypad References