தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சகரியா

பதிவுகள்

சகரியா அதிகாரம் 3

தலைமைக் குருக்களைக் குறித்துக் கண்ட காட்சி 1 பின்பு அவர் தலைமைக் குருவாகிய யோசுவாவை எனக்குக் காட்டினார். அவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். அவர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவரது வலப்பக்கத்தில் சாத்தானும் நின்று கொண்டிருந்தான். * எஸ்ரா 5:2; திவெ 12: 10. 2 அப்பொழுது ஆண்டவரின் தூதர் சாத்தானை நோக்கி, “சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக! எருசலேமைத் தெரிந்தெடுத்த ஆண்டவர் உன்னை அதட்டுவாராக! அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளியல்லவா இவர்?” என்றார். * யூதா 9. 3 யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய் தூதர்முன் நின்று கொண்டிருந்தார். தூதர் தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, 4 “அழுக்கு உடைகளை இவரிடமிருந்து களைந்துவிடுங்கள்” என்றார். பின்பு அவரிடம், “உன்னிடமிருந்து உன் தீச்செயல்களை அகற்றி விட்டேன்; நீ உடுத்திக் கொள்வதற்குப் பட்டாடைகளை அளிப்பேன்” என்றார். 5 மேலும், “தூய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் தூய்மையான தலைப்பாகையை அணிவித்துப் பட்டாடைகளை உடுத்தினர். ஆண்டவரின் தூதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். 6 ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்கு விடுத்த உறுதிமொழி இதுவே: 7 “நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் இல்லத்தை ஆள்வாய்; என் திருமுற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவாய்; இங்கே நிற்கும் தூதர்கள் இடையே சென்று வரும் உரிமையை உனக்குத் தருவேன்” என்று படைகளின் ஆண்டவர் கூறுகிறார். 8 தலைமைக் குரு யோசுவாவே! நீயும் உன் முன்னே அமர்ந்திருக்கும் உன் தோழரும் கேளுங்கள். அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்; இதோ நான் தளிர் எனப்படும் என் ஊழியன் தோன்றுமாறு செய்வேன்; * எரே 23:5; 33:25; செக் 6: 12. 9 யோசுவாவின் முன்னிலையில் நான் வைத்த கல்லைப்பார்; இந்த ஒரே கல்லில் ஏழு பட்டைகள்; அதில் நான் எழுத்துகளைப் பொறித்திடுவேன், என்கிறார் படைகளின் ஆண்டவர். 10 ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன். படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத் தம் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் தங்கி இளைப்பாற அழைப்பார். * மீக் 4:4..
தலைமைக் குருக்களைக் குறித்துக் கண்ட காட்சி 1 பின்பு அவர் தலைமைக் குருவாகிய யோசுவாவை எனக்குக் காட்டினார். அவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். அவர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவரது வலப்பக்கத்தில் சாத்தானும் நின்று கொண்டிருந்தான். * எஸ்ரா 5:2; திவெ 12: 10. .::. 2 அப்பொழுது ஆண்டவரின் தூதர் சாத்தானை நோக்கி, “சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக! எருசலேமைத் தெரிந்தெடுத்த ஆண்டவர் உன்னை அதட்டுவாராக! அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளியல்லவா இவர்?” என்றார். * யூதா 9. .::. 3 யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய் தூதர்முன் நின்று கொண்டிருந்தார். தூதர் தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, .::. 4 “அழுக்கு உடைகளை இவரிடமிருந்து களைந்துவிடுங்கள்” என்றார். பின்பு அவரிடம், “உன்னிடமிருந்து உன் தீச்செயல்களை அகற்றி விட்டேன்; நீ உடுத்திக் கொள்வதற்குப் பட்டாடைகளை அளிப்பேன்” என்றார். .::. 5 மேலும், “தூய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் தூய்மையான தலைப்பாகையை அணிவித்துப் பட்டாடைகளை உடுத்தினர். ஆண்டவரின் தூதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். .::. 6 ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்கு விடுத்த உறுதிமொழி இதுவே: .::. 7 “நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் இல்லத்தை ஆள்வாய்; என் திருமுற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவாய்; இங்கே நிற்கும் தூதர்கள் இடையே சென்று வரும் உரிமையை உனக்குத் தருவேன்” என்று படைகளின் ஆண்டவர் கூறுகிறார். .::. 8 தலைமைக் குரு யோசுவாவே! நீயும் உன் முன்னே அமர்ந்திருக்கும் உன் தோழரும் கேளுங்கள். அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்; இதோ நான் தளிர் எனப்படும் என் ஊழியன் தோன்றுமாறு செய்வேன்; * எரே 23:5; 33:25; செக் 6: 12. .::. 9 யோசுவாவின் முன்னிலையில் நான் வைத்த கல்லைப்பார்; இந்த ஒரே கல்லில் ஏழு பட்டைகள்; அதில் நான் எழுத்துகளைப் பொறித்திடுவேன், என்கிறார் படைகளின் ஆண்டவர். .::. 10 ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன். படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத் தம் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் தங்கி இளைப்பாற அழைப்பார். * மீக் 4:4..
  • சகரியா அதிகாரம் 1  
  • சகரியா அதிகாரம் 2  
  • சகரியா அதிகாரம் 3  
  • சகரியா அதிகாரம் 4  
  • சகரியா அதிகாரம் 5  
  • சகரியா அதிகாரம் 6  
  • சகரியா அதிகாரம் 7  
  • சகரியா அதிகாரம் 8  
  • சகரியா அதிகாரம் 9  
  • சகரியா அதிகாரம் 10  
  • சகரியா அதிகாரம் 11  
  • சகரியா அதிகாரம் 12  
  • சகரியா அதிகாரம் 13  
  • சகரியா அதிகாரம் 14  
×

Alert

×

Tamil Letters Keypad References