தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சகரியா

பதிவுகள்

சகரியா அதிகாரம் 2

அளவுநூலைக் குறித்த காட்சி 1 நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். * எஸ்ரா 4:24-5:1; 6: 14. 2 ‘எங்கே போகிறீர்?’ என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், ‘எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்’ என்றார். 3 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். 4 வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: ‘எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்! 5 ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்,’ என்கிறார் ஆண்டவர். நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவர அழைப்பு 6 “எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்; உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர். 7 பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள். 8 என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்’ என்கிறார்.” * திவெ 6:2-8.. 9 ‘இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்; தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்; அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள். 10 மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்” என்கிறார் ஆண்டவர். 11 அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். 12 ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்.” 13 மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்; ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.
அளவுநூலைக் குறித்த காட்சி 1 நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். * எஸ்ரா 4:24-5:1; 6: 14. .::. 2 ‘எங்கே போகிறீர்?’ என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், ‘எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்’ என்றார். .::. 3 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். .::. 4 வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: ‘எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்! .::. 5 ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்,’ என்கிறார் ஆண்டவர். .::. நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவர அழைப்பு 6 “எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்; உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர். .::. 7 பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள். .::. 8 என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்’ என்கிறார்.” * திவெ 6:2-8.. .::. 9 ‘இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்; தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்; அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள். .::. 10 மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்” என்கிறார் ஆண்டவர். .::. 11 அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். .::. 12 ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்.” .::. 13 மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்; ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.
  • சகரியா அதிகாரம் 1  
  • சகரியா அதிகாரம் 2  
  • சகரியா அதிகாரம் 3  
  • சகரியா அதிகாரம் 4  
  • சகரியா அதிகாரம் 5  
  • சகரியா அதிகாரம் 6  
  • சகரியா அதிகாரம் 7  
  • சகரியா அதிகாரம் 8  
  • சகரியா அதிகாரம் 9  
  • சகரியா அதிகாரம் 10  
  • சகரியா அதிகாரம் 11  
  • சகரியா அதிகாரம் 12  
  • சகரியா அதிகாரம் 13  
  • சகரியா அதிகாரம் 14  
×

Alert

×

Tamil Letters Keypad References