தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சகரியா

பதிவுகள்

சகரியா அதிகாரம் 3

1 பின்னர் அவர் தலைமைக்குருவாகிய யோசுவாவைக் காட்டினார்; இவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றிருந்தார்; இவர் மேல் குற்றஞ்சாட்ட வந்திருந்த சாத்தான் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். 2 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! யெருசலேமைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியல்லவா இவர்?" என்று சொன்னார். 3 யோசுவாவோ அழுக்குப் படிந்த ஆடைகளையுடுத்தவராய்த் தூதர் முன் நின்று கொண்டிருந்தார். 4 தூதரோ தம் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, "அழுக்குப் படிந்த ஆடைகளை இவரிடமிருந்து அகற்றுங்கள்" என்றார்; பின் அவரிடம், "இதோ, உன்னிடமிருந்து உன் அக்கிரமத்தை அகற்றிவிட்டேன்; சிறந்த ஆடையை உனக்கு உடுத்தினேன்" என்றார். 5 மேலும், "தலைப்பாகையொன்றை அவர் தலையில் சூட்டுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அவருக்குத் தலைப்பாகை சூட்டிச் சிறந்த ஆடைகளை உடுத்தினர்; ஆண்டவரின் தூதரோ அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார். 6 பின்பு, ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்குச் செய்த அறிக்கை அதுவே: 7 சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நம்முடைய நெறிகளில் வழுவாமல் ஒழுகி நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், நம் இல்லத்தில் நீ ஆளுவாய்; நம் பிராகாரங்களுக்கும் பொறுப்பாய் இருப்பாய்; இங்கே நிற்கும் தூதர்களோடு சேர்ந்து கொள்ள உனக்கு உரிமை தருவோம். 8 தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும், உன் முன்னால் அமர்ந்திருக்கும் உன் நண்பர்களும் கேளுங்கள்; அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ, நாம் நம் ஊழியனைக் கொண்டு வருவோம்: 'தளிர்' என்பது அவர் பெயர். 9 இதோ, யோசுவாவின் முன்பு நாம் நாட்டுகின்ற கல் இதுவே; இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் ஒளிர்கின்றன; நாமே அதில் எழுத்துகளைப் பொறிப்போம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மேலும் ஒரே நாளில் இந்த நாட்டின் அக்கிரமத்தை அகற்றுவோம். 10 அந்நாளில், ஒவ்வொருவனும் தன் அயலானைத்தன் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பான், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
1 பின்னர் அவர் தலைமைக்குருவாகிய யோசுவாவைக் காட்டினார்; இவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றிருந்தார்; இவர் மேல் குற்றஞ்சாட்ட வந்திருந்த சாத்தான் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். .::. 2 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! யெருசலேமைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியல்லவா இவர்?" என்று சொன்னார். .::. 3 யோசுவாவோ அழுக்குப் படிந்த ஆடைகளையுடுத்தவராய்த் தூதர் முன் நின்று கொண்டிருந்தார். .::. 4 தூதரோ தம் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, "அழுக்குப் படிந்த ஆடைகளை இவரிடமிருந்து அகற்றுங்கள்" என்றார்; பின் அவரிடம், "இதோ, உன்னிடமிருந்து உன் அக்கிரமத்தை அகற்றிவிட்டேன்; சிறந்த ஆடையை உனக்கு உடுத்தினேன்" என்றார். .::. 5 மேலும், "தலைப்பாகையொன்றை அவர் தலையில் சூட்டுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அவருக்குத் தலைப்பாகை சூட்டிச் சிறந்த ஆடைகளை உடுத்தினர்; ஆண்டவரின் தூதரோ அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார். .::. 6 பின்பு, ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்குச் செய்த அறிக்கை அதுவே: .::. 7 சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நம்முடைய நெறிகளில் வழுவாமல் ஒழுகி நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், நம் இல்லத்தில் நீ ஆளுவாய்; நம் பிராகாரங்களுக்கும் பொறுப்பாய் இருப்பாய்; இங்கே நிற்கும் தூதர்களோடு சேர்ந்து கொள்ள உனக்கு உரிமை தருவோம். .::. 8 தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும், உன் முன்னால் அமர்ந்திருக்கும் உன் நண்பர்களும் கேளுங்கள்; அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ, நாம் நம் ஊழியனைக் கொண்டு வருவோம்: 'தளிர்' என்பது அவர் பெயர். .::. 9 இதோ, யோசுவாவின் முன்பு நாம் நாட்டுகின்ற கல் இதுவே; இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் ஒளிர்கின்றன; நாமே அதில் எழுத்துகளைப் பொறிப்போம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மேலும் ஒரே நாளில் இந்த நாட்டின் அக்கிரமத்தை அகற்றுவோம். .::. 10 அந்நாளில், ஒவ்வொருவனும் தன் அயலானைத்தன் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பான், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
  • சகரியா அதிகாரம் 1  
  • சகரியா அதிகாரம் 2  
  • சகரியா அதிகாரம் 3  
  • சகரியா அதிகாரம் 4  
  • சகரியா அதிகாரம் 5  
  • சகரியா அதிகாரம் 6  
  • சகரியா அதிகாரம் 7  
  • சகரியா அதிகாரம் 8  
  • சகரியா அதிகாரம் 9  
  • சகரியா அதிகாரம் 10  
  • சகரியா அதிகாரம் 11  
  • சகரியா அதிகாரம் 12  
  • சகரியா அதிகாரம் 13  
  • சகரியா அதிகாரம் 14  
×

Alert

×

Tamil Letters Keypad References