தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
மீகா

பதிவுகள்

மீகா அதிகாரம் 5

1 அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான். ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார் 2 நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். [* மத் 2:6; யோவா 7: 42 ] 3 ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். 4 அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; 5 அவரே அமைதியை அருள்வார்.விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும் (5b) அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம். 6 அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்; அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள். [* தொநூ 10:8-11.. ] 7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காகக் காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள். 8 மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள். 9 உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள். 10 அந்நாளில், “நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்; உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்” என்கிறார் ஆண்டவர். 11 “உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்; உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன். 12 உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்; குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர். 13 நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்; உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய். 14 நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்; உன் நகரங்களை அழித்தொழிப்பேன். 15 எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்.”
1 அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான். .::. ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார் 2 நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். [* மத் 2:6; யோவா 7: 42 ] .::. 3 ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். .::. 4 அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; .::. 5 அவரே அமைதியை அருள்வார்.விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும் (5b) அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம். .::. 6 அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்; அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள். [* தொநூ 10:8-11.. ] .::. 7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காகக் காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள். .::. 8 மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள். .::. 9 உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள். .::. 10 அந்நாளில், “நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்; உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்” என்கிறார் ஆண்டவர். .::. 11 “உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்; உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன். .::. 12 உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்; குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர். .::. 13 நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்; உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய். .::. 14 நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்; உன் நகரங்களை அழித்தொழிப்பேன். .::. 15 எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்.”
  • மீகா அதிகாரம் 1  
  • மீகா அதிகாரம் 2  
  • மீகா அதிகாரம் 3  
  • மீகா அதிகாரம் 4  
  • மீகா அதிகாரம் 5  
  • மீகா அதிகாரம் 6  
  • மீகா அதிகாரம் 7  
×

Alert

×

Tamil Letters Keypad References