தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
மீகா

பதிவுகள்

மீகா அதிகாரம் 1

1 யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே: [* 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.. ] சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம் 2 மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்; நிலவுலகே, அதில் உள்ளவையே, செவிகொடுங்கள். தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து உங்களுக்கு எதிராகச் சான்றுபகரப் போகிறார். 3 இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்; அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார். 4 நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்; பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். 5 யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ! 6 ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்; அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்படி செய்வேன். 7 அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்; அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்; ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன; விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும். 8 இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்; வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்; குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்; நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன். 9 ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது; யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது; என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து எட்டியுள்ளது. எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான் 10 காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்; கதறியழவும் வேண்டாம்; பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள். 11 சாபீரில் குடியிருப்போரே, ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்; சானானில் குடியிருப்போரும் வெளியே வருவதில்லை; பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும். அங்கு உங்களுக்கு அடைக்கலம் கிடைக்காது. 12 மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்; ஏனெனில், தீமை ஆண்டவரிடம் இருந்து இறங்கி எருசலேமின் வாயில்மேல் விழுந்தது. 13 இலாக்கீசில் குடியிருப்போரே, விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்; மகள் சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே; இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது உங்களிடம்தான். 14 ஆதலால், மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும். 15 மாரேசாவில் குடியிருப்போரே, கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல் திரும்பவும் வரும்படி செய்வேன்; இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும். 16 உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள்; கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள்.
1 யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே: [* 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.. ] .::. சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம் 2 மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்; நிலவுலகே, அதில் உள்ளவையே, செவிகொடுங்கள். தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து உங்களுக்கு எதிராகச் சான்றுபகரப் போகிறார். .::. 3 இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்; அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார். .::. 4 நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்; பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். .::. 5 யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ! .::. 6 ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்; அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்படி செய்வேன். .::. 7 அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்; அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்; ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன; விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும். .::. 8 இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்; வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்; குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்; நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன். .::. 9 ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது; யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது; என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து எட்டியுள்ளது. .::. எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான் 10 காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்; கதறியழவும் வேண்டாம்; பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள். .::. 11 சாபீரில் குடியிருப்போரே, ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்; சானானில் குடியிருப்போரும் வெளியே வருவதில்லை; பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும். அங்கு உங்களுக்கு அடைக்கலம் கிடைக்காது. .::. 12 மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்; ஏனெனில், தீமை ஆண்டவரிடம் இருந்து இறங்கி எருசலேமின் வாயில்மேல் விழுந்தது. .::. 13 இலாக்கீசில் குடியிருப்போரே, விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்; மகள் சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே; இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது உங்களிடம்தான். .::. 14 ஆதலால், மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும். .::. 15 மாரேசாவில் குடியிருப்போரே, கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல் திரும்பவும் வரும்படி செய்வேன்; இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும். .::. 16 உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள்; கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள்.
  • மீகா அதிகாரம் 1  
  • மீகா அதிகாரம் 2  
  • மீகா அதிகாரம் 3  
  • மீகா அதிகாரம் 4  
  • மீகா அதிகாரம் 5  
  • மீகா அதிகாரம் 6  
  • மீகா அதிகாரம் 7  
×

Alert

×

Tamil Letters Keypad References