தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா

பதிவுகள்

ஏசாயா அதிகாரம் 60

எருசலேமின் வருங்கால மேன்மை 1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! 2 இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! 3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். 4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். 5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். 6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர். 7 கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்; நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்; எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்; இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன். 8 மேகங்கள் போலும் பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும் விரைந்து செல்லும் இவர்கள் யார்? 9 தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்; இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார். 10 அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்; அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்; ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்; நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன். 11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்; இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்; பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும். * திவெ 21:25- 26. 12 உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்; அவை முற்றிலும் பாழடைந்து போகும். 13 லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்; என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத் தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்; என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன். 14 உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்; உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து வீழ்வர்; ‘ஆண்டவரின் நகர்’ என்றும், ‘இஸ்ரயேலின் தூயவரது சியோன்’ என்றும் உன்னை அவர்கள் அழைப்பர். * திவெ 3: 9. 15 நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்; உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை; நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்; தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன். 16 நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்; மன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்; ஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும் யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும் நீ அறிந்து கொள்வாய். 17 வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டு வருவேன்; உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன். 18 உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது; உன் மதில்களை ‘விடுதலை’ என்றும் உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும் அழைப்பாய். 19 கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை! [* திவெ 21:23; 22:5.. ] 20 உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம். 21 உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்; அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்; நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்; என் கைவேலைப்பாடும் அவர்களே. 22 அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்; அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்; நானே ஆண்டவர்; ஏற்ற காலத்தில் இதை நான் விரைவாய்ச் செய்து முடிப்பேன்.
எருசலேமின் வருங்கால மேன்மை 1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! .::. 2 இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! .::. 3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். .::. 4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். .::. 5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். .::. 6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர். .::. 7 கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்; நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்; எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்; இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன். .::. 8 மேகங்கள் போலும் பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும் விரைந்து செல்லும் இவர்கள் யார்? .::. 9 தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்; இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார். .::. 10 அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்; அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்; ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்; நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன். .::. 11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்; இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்; பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும். * திவெ 21:25- 26. .::. 12 உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்; அவை முற்றிலும் பாழடைந்து போகும். .::. 13 லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்; என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத் தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்; என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன். .::. 14 உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்; உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து வீழ்வர்; ‘ஆண்டவரின் நகர்’ என்றும், ‘இஸ்ரயேலின் தூயவரது சியோன்’ என்றும் உன்னை அவர்கள் அழைப்பர். * திவெ 3: 9. .::. 15 நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்; உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை; நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்; தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன். .::. 16 நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்; மன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்; ஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும் யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும் நீ அறிந்து கொள்வாய். .::. 17 வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டு வருவேன்; உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன். .::. 18 உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது; உன் மதில்களை ‘விடுதலை’ என்றும் உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும் அழைப்பாய். .::. 19 கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை! [* திவெ 21:23; 22:5.. ] .::. 20 உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம். .::. 21 உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்; அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்; நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்; என் கைவேலைப்பாடும் அவர்களே. .::. 22 அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்; அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்; நானே ஆண்டவர்; ஏற்ற காலத்தில் இதை நான் விரைவாய்ச் செய்து முடிப்பேன்.
  • ஏசாயா அதிகாரம் 1  
  • ஏசாயா அதிகாரம் 2  
  • ஏசாயா அதிகாரம் 3  
  • ஏசாயா அதிகாரம் 4  
  • ஏசாயா அதிகாரம் 5  
  • ஏசாயா அதிகாரம் 6  
  • ஏசாயா அதிகாரம் 7  
  • ஏசாயா அதிகாரம் 8  
  • ஏசாயா அதிகாரம் 9  
  • ஏசாயா அதிகாரம் 10  
  • ஏசாயா அதிகாரம் 11  
  • ஏசாயா அதிகாரம் 12  
  • ஏசாயா அதிகாரம் 13  
  • ஏசாயா அதிகாரம் 14  
  • ஏசாயா அதிகாரம் 15  
  • ஏசாயா அதிகாரம் 16  
  • ஏசாயா அதிகாரம் 17  
  • ஏசாயா அதிகாரம் 18  
  • ஏசாயா அதிகாரம் 19  
  • ஏசாயா அதிகாரம் 20  
  • ஏசாயா அதிகாரம் 21  
  • ஏசாயா அதிகாரம் 22  
  • ஏசாயா அதிகாரம் 23  
  • ஏசாயா அதிகாரம் 24  
  • ஏசாயா அதிகாரம் 25  
  • ஏசாயா அதிகாரம் 26  
  • ஏசாயா அதிகாரம் 27  
  • ஏசாயா அதிகாரம் 28  
  • ஏசாயா அதிகாரம் 29  
  • ஏசாயா அதிகாரம் 30  
  • ஏசாயா அதிகாரம் 31  
  • ஏசாயா அதிகாரம் 32  
  • ஏசாயா அதிகாரம் 33  
  • ஏசாயா அதிகாரம் 34  
  • ஏசாயா அதிகாரம் 35  
  • ஏசாயா அதிகாரம் 36  
  • ஏசாயா அதிகாரம் 37  
  • ஏசாயா அதிகாரம் 38  
  • ஏசாயா அதிகாரம் 39  
  • ஏசாயா அதிகாரம் 40  
  • ஏசாயா அதிகாரம் 41  
  • ஏசாயா அதிகாரம் 42  
  • ஏசாயா அதிகாரம் 43  
  • ஏசாயா அதிகாரம் 44  
  • ஏசாயா அதிகாரம் 45  
  • ஏசாயா அதிகாரம் 46  
  • ஏசாயா அதிகாரம் 47  
  • ஏசாயா அதிகாரம் 48  
  • ஏசாயா அதிகாரம் 49  
  • ஏசாயா அதிகாரம் 50  
  • ஏசாயா அதிகாரம் 51  
  • ஏசாயா அதிகாரம் 52  
  • ஏசாயா அதிகாரம் 53  
  • ஏசாயா அதிகாரம் 54  
  • ஏசாயா அதிகாரம் 55  
  • ஏசாயா அதிகாரம் 56  
  • ஏசாயா அதிகாரம் 57  
  • ஏசாயா அதிகாரம் 58  
  • ஏசாயா அதிகாரம் 59  
  • ஏசாயா அதிகாரம் 60  
  • ஏசாயா அதிகாரம் 61  
  • ஏசாயா அதிகாரம் 62  
  • ஏசாயா அதிகாரம் 63  
  • ஏசாயா அதிகாரம் 64  
  • ஏசாயா அதிகாரம் 65  
  • ஏசாயா அதிகாரம் 66  
×

Alert

×

Tamil Letters Keypad References