தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா

ஏசாயா அதிகாரம் 21

பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி 1 கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது. * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 2 கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது: நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்; நாசக்காரன் நாசம் செய்கின்றான். ‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு; மேதியாவே! முற்றுகையிடு’ அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும்
முடிவு வரச் செய்வேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
3 ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக்கொண்டன; கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்; திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 4 என் மனம் பேதலிக்கிறது; திகில் என்னை ஆட்கொண்டது; நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது. * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 5 பந்தி தயார் செய்கிறார்கள்; கம்பளத்தை விரிக்கிறார்கள்; உண்கிறார்கள், குடிக்கிறார்கள்; தலைவர்களே, எழுங்கள்; கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 6 ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே: “நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 7 இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.” * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 8 அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்: “என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்; இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 9 இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, ‘பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது; அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.” * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 10 போரடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏதோம் பற்றிய செய்தி 11 தூமாவைப் பற்றிய திருவாக்கு: சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்? சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?” என்று ஒருவர் கேட்க, * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 12 “காலை வருகிறது, அவ்வாறே இரவும்; கேட்பதென்றால் கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று சாமக்காவலன் கூறினான். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. அரேபியாவைக் குறித்த செய்தி 13 அரேபியாவைக் குறித்த திருவாக்கு: தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்; * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 14 தேமா நாட்டில் குடியிருப்போரே! தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்; அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 15 ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்; உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும் போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 16 என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும். * எரே 46:2-26; எசே 29:1-32:32.. 17 கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
1. {பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி} கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது. [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 2. கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது: நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்; நாசக்காரன் நாசம் செய்கின்றான். ‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு; மேதியாவே! முற்றுகையிடு’ அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் முடிவு வரச் செய்வேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 3. ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக்கொண்டன; கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்; திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 4. என் மனம் பேதலிக்கிறது; திகில் என்னை ஆட்கொண்டது; நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது. [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 5. பந்தி தயார் செய்கிறார்கள்; கம்பளத்தை விரிக்கிறார்கள்; உண்கிறார்கள், குடிக்கிறார்கள்; தலைவர்களே, எழுங்கள்; கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 6. ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே: “நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 7. இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.” [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 8. அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்: “என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்; இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 9. இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, ‘பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது; அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.” [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 10. போரடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 11. {ஏதோம் பற்றிய செய்தி} தூமாவைப் பற்றிய திருவாக்கு: சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்? சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?” என்று ஒருவர் கேட்க, [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 12. “காலை வருகிறது, அவ்வாறே இரவும்; கேட்பதென்றால் கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று சாமக்காவலன் கூறினான். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 13. {அரேபியாவைக் குறித்த செய்தி} அரேபியாவைக் குறித்த திருவாக்கு: தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்; [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 14. தேமா நாட்டில் குடியிருப்போரே! தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்; அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 15. ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்; உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும் போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 16. என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] 17. கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ]
  • ஏசாயா அதிகாரம் 1  
  • ஏசாயா அதிகாரம் 2  
  • ஏசாயா அதிகாரம் 3  
  • ஏசாயா அதிகாரம் 4  
  • ஏசாயா அதிகாரம் 5  
  • ஏசாயா அதிகாரம் 6  
  • ஏசாயா அதிகாரம் 7  
  • ஏசாயா அதிகாரம் 8  
  • ஏசாயா அதிகாரம் 9  
  • ஏசாயா அதிகாரம் 10  
  • ஏசாயா அதிகாரம் 11  
  • ஏசாயா அதிகாரம் 12  
  • ஏசாயா அதிகாரம் 13  
  • ஏசாயா அதிகாரம் 14  
  • ஏசாயா அதிகாரம் 15  
  • ஏசாயா அதிகாரம் 16  
  • ஏசாயா அதிகாரம் 17  
  • ஏசாயா அதிகாரம் 18  
  • ஏசாயா அதிகாரம் 19  
  • ஏசாயா அதிகாரம் 20  
  • ஏசாயா அதிகாரம் 21  
  • ஏசாயா அதிகாரம் 22  
  • ஏசாயா அதிகாரம் 23  
  • ஏசாயா அதிகாரம் 24  
  • ஏசாயா அதிகாரம் 25  
  • ஏசாயா அதிகாரம் 26  
  • ஏசாயா அதிகாரம் 27  
  • ஏசாயா அதிகாரம் 28  
  • ஏசாயா அதிகாரம் 29  
  • ஏசாயா அதிகாரம் 30  
  • ஏசாயா அதிகாரம் 31  
  • ஏசாயா அதிகாரம் 32  
  • ஏசாயா அதிகாரம் 33  
  • ஏசாயா அதிகாரம் 34  
  • ஏசாயா அதிகாரம் 35  
  • ஏசாயா அதிகாரம் 36  
  • ஏசாயா அதிகாரம் 37  
  • ஏசாயா அதிகாரம் 38  
  • ஏசாயா அதிகாரம் 39  
  • ஏசாயா அதிகாரம் 40  
  • ஏசாயா அதிகாரம் 41  
  • ஏசாயா அதிகாரம் 42  
  • ஏசாயா அதிகாரம் 43  
  • ஏசாயா அதிகாரம் 44  
  • ஏசாயா அதிகாரம் 45  
  • ஏசாயா அதிகாரம் 46  
  • ஏசாயா அதிகாரம் 47  
  • ஏசாயா அதிகாரம் 48  
  • ஏசாயா அதிகாரம் 49  
  • ஏசாயா அதிகாரம் 50  
  • ஏசாயா அதிகாரம் 51  
  • ஏசாயா அதிகாரம் 52  
  • ஏசாயா அதிகாரம் 53  
  • ஏசாயா அதிகாரம் 54  
  • ஏசாயா அதிகாரம் 55  
  • ஏசாயா அதிகாரம் 56  
  • ஏசாயா அதிகாரம் 57  
  • ஏசாயா அதிகாரம் 58  
  • ஏசாயா அதிகாரம் 59  
  • ஏசாயா அதிகாரம் 60  
  • ஏசாயா அதிகாரம் 61  
  • ஏசாயா அதிகாரம் 62  
  • ஏசாயா அதிகாரம் 63  
  • ஏசாயா அதிகாரம் 64  
  • ஏசாயா அதிகாரம் 65  
  • ஏசாயா அதிகாரம் 66  
×

Alert

×

Tamil Letters Keypad References