ஏசாயா

ஏசாயா அதிகாரம் 25

ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பா 1 ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்; உன் பெயரைப் போற்றுவேன்; நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்; நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர். 2 ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்; அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்; அயல் நாட்டினரின் கோட்டை அது; இனி நகராய் இராது; என்றுமே கட்டி எழுப்பப்படாது. 3 ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்; முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர். 4 ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்; வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே; புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்; ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும், 5 வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்; முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது. ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்து 6 படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். 7 மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். 8 என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். * 1 கொரி 15:54; திவெ 7:17; 21: 4. 9 அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” மோவாபுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு 10 ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்; எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான். [* எசா 15:1-16:14; எரே 48:1-47; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.. ] 11 நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்; ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச் செய்வார். 12 வானளாவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்; அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.
1. {ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பா} ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்; உன் பெயரைப் போற்றுவேன்; நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்; நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர். 2. ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்; அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்; அயல் நாட்டினரின் கோட்டை அது; இனி நகராய் இராது; என்றுமே கட்டி எழுப்பப்படாது. 3. ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்; முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர். 4. ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்; வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே; புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்; ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும், 5. வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்; முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது. 6. {ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்து} படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். 7. மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். 8. என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். [* 1 கொரி 15:54; திவெ 7:17; 21:4. ] 9. அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” 10. {மோவாபுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்; எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான். [* எசா 15:1-16:14; எரே 48:1-47; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.. ] 11. நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்; ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச் செய்வார். 12. வானளாவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்; அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.
  • ஏசாயா அதிகாரம் 1  
  • ஏசாயா அதிகாரம் 2  
  • ஏசாயா அதிகாரம் 3  
  • ஏசாயா அதிகாரம் 4  
  • ஏசாயா அதிகாரம் 5  
  • ஏசாயா அதிகாரம் 6  
  • ஏசாயா அதிகாரம் 7  
  • ஏசாயா அதிகாரம் 8  
  • ஏசாயா அதிகாரம் 9  
  • ஏசாயா அதிகாரம் 10  
  • ஏசாயா அதிகாரம் 11  
  • ஏசாயா அதிகாரம் 12  
  • ஏசாயா அதிகாரம் 13  
  • ஏசாயா அதிகாரம் 14  
  • ஏசாயா அதிகாரம் 15  
  • ஏசாயா அதிகாரம் 16  
  • ஏசாயா அதிகாரம் 17  
  • ஏசாயா அதிகாரம் 18  
  • ஏசாயா அதிகாரம் 19  
  • ஏசாயா அதிகாரம் 20  
  • ஏசாயா அதிகாரம் 21  
  • ஏசாயா அதிகாரம் 22  
  • ஏசாயா அதிகாரம் 23  
  • ஏசாயா அதிகாரம் 24  
  • ஏசாயா அதிகாரம் 25  
  • ஏசாயா அதிகாரம் 26  
  • ஏசாயா அதிகாரம் 27  
  • ஏசாயா அதிகாரம் 28  
  • ஏசாயா அதிகாரம் 29  
  • ஏசாயா அதிகாரம் 30  
  • ஏசாயா அதிகாரம் 31  
  • ஏசாயா அதிகாரம் 32  
  • ஏசாயா அதிகாரம் 33  
  • ஏசாயா அதிகாரம் 34  
  • ஏசாயா அதிகாரம் 35  
  • ஏசாயா அதிகாரம் 36  
  • ஏசாயா அதிகாரம் 37  
  • ஏசாயா அதிகாரம் 38  
  • ஏசாயா அதிகாரம் 39  
  • ஏசாயா அதிகாரம் 40  
  • ஏசாயா அதிகாரம் 41  
  • ஏசாயா அதிகாரம் 42  
  • ஏசாயா அதிகாரம் 43  
  • ஏசாயா அதிகாரம் 44  
  • ஏசாயா அதிகாரம் 45  
  • ஏசாயா அதிகாரம் 46  
  • ஏசாயா அதிகாரம் 47  
  • ஏசாயா அதிகாரம் 48  
  • ஏசாயா அதிகாரம் 49  
  • ஏசாயா அதிகாரம் 50  
  • ஏசாயா அதிகாரம் 51  
  • ஏசாயா அதிகாரம் 52  
  • ஏசாயா அதிகாரம் 53  
  • ஏசாயா அதிகாரம் 54  
  • ஏசாயா அதிகாரம் 55  
  • ஏசாயா அதிகாரம் 56  
  • ஏசாயா அதிகாரம் 57  
  • ஏசாயா அதிகாரம் 58  
  • ஏசாயா அதிகாரம் 59  
  • ஏசாயா அதிகாரம் 60  
  • ஏசாயா அதிகாரம் 61  
  • ஏசாயா அதிகாரம் 62  
  • ஏசாயா அதிகாரம் 63  
  • ஏசாயா அதிகாரம் 64  
  • ஏசாயா அதிகாரம் 65  
  • ஏசாயா அதிகாரம் 66  
×

Alert

×

Tamil Letters Keypad References