தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோனா
1. (2) யோனாஸ் அந்த மீன் வயிற்றிலிருந்து கொண்டு தம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டிக் கொண்டார்:
2. (3) என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர்.
3. (4) நடுக்கடலின் ஆழத்தில் நீர் என்னைத் தள்ளினீர், வெள்ளம் என்னைச் சூழ்ந்து கொண்டது; உம்முடைய அலைகள், திரைகள் அனைத்தும் என் மேல் புரண்டு கடந்து போயின.
4. (5) அப்பொழுது நான், ' உமது திருமுன்னிருந்து புறம்பே எறியப்பட்டேன்; இனி எவ்வாறு உம் பரிசுத்த கோயிலை மறுபடியும் பார்ப்பேன்?' என்று முறையிட்டேன்.
5. (6) மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை நெருக்கிற்று, கடலாழத்தில் நீர் சூழ, நான் இருந்தேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.
6. (7) மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது; ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர்.
7. (8) என் ஆன்மா எனக்குள் சோர்ந்து போகும் போது ஆண்டவரை நான் நினைவுகூர்ந்தேன்; என் மன்றாட்டு உம் வரைக்கும் உம்முடைய பரிசுத்த கோயிலுக்குள் வந்தது.
8. (9) ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர்.
9. (10) நானோ புகழ்ப்பாடலுடன் உமக்குப் பலியிடுவேன், நான் நேர்ந்து கொண்டதை உமக்குச் செலுத்துவேன்; மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது!"
10. (11) ஆண்டவர் அந்த மீனுக்குக்குக் கட்டளையிட, அது யோனாசைக் கடற்கரையில் கக்கி விட்டது.
மொத்தம் 4 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 4
1 2 3 4
1 (2) யோனாஸ் அந்த மீன் வயிற்றிலிருந்து கொண்டு தம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டிக் கொண்டார்: 2 (3) என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர். 3 (4) நடுக்கடலின் ஆழத்தில் நீர் என்னைத் தள்ளினீர், வெள்ளம் என்னைச் சூழ்ந்து கொண்டது; உம்முடைய அலைகள், திரைகள் அனைத்தும் என் மேல் புரண்டு கடந்து போயின. 4 (5) அப்பொழுது நான், ' உமது திருமுன்னிருந்து புறம்பே எறியப்பட்டேன்; இனி எவ்வாறு உம் பரிசுத்த கோயிலை மறுபடியும் பார்ப்பேன்?' என்று முறையிட்டேன். 5 (6) மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை நெருக்கிற்று, கடலாழத்தில் நீர் சூழ, நான் இருந்தேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது. 6 (7) மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது; ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர். 7 (8) என் ஆன்மா எனக்குள் சோர்ந்து போகும் போது ஆண்டவரை நான் நினைவுகூர்ந்தேன்; என் மன்றாட்டு உம் வரைக்கும் உம்முடைய பரிசுத்த கோயிலுக்குள் வந்தது. 8 (9) ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர். 9 (10) நானோ புகழ்ப்பாடலுடன் உமக்குப் பலியிடுவேன், நான் நேர்ந்து கொண்டதை உமக்குச் செலுத்துவேன்; மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது!" 10 (11) ஆண்டவர் அந்த மீனுக்குக்குக் கட்டளையிட, அது யோனாசைக் கடற்கரையில் கக்கி விட்டது.
மொத்தம் 4 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 4
1 2 3 4
×

Alert

×

Tamil Letters Keypad References