தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோனா

பதிவுகள்

யோனா அதிகாரம் 2

1 (2) யோனாஸ் அந்த மீன் வயிற்றிலிருந்து கொண்டு தம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டிக் கொண்டார்: 2 (3) என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர். 3 (4) நடுக்கடலின் ஆழத்தில் நீர் என்னைத் தள்ளினீர், வெள்ளம் என்னைச் சூழ்ந்து கொண்டது; உம்முடைய அலைகள், திரைகள் அனைத்தும் என் மேல் புரண்டு கடந்து போயின. 4 (5) அப்பொழுது நான், ' உமது திருமுன்னிருந்து புறம்பே எறியப்பட்டேன்; இனி எவ்வாறு உம் பரிசுத்த கோயிலை மறுபடியும் பார்ப்பேன்?' என்று முறையிட்டேன். 5 (6) மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை நெருக்கிற்று, கடலாழத்தில் நீர் சூழ, நான் இருந்தேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது. 6 (7) மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது; ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர். 7 (8) என் ஆன்மா எனக்குள் சோர்ந்து போகும் போது ஆண்டவரை நான் நினைவுகூர்ந்தேன்; என் மன்றாட்டு உம் வரைக்கும் உம்முடைய பரிசுத்த கோயிலுக்குள் வந்தது. 8 (9) ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர். 9 (10) நானோ புகழ்ப்பாடலுடன் உமக்குப் பலியிடுவேன், நான் நேர்ந்து கொண்டதை உமக்குச் செலுத்துவேன்; மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது!" 10 (11) ஆண்டவர் அந்த மீனுக்குக்குக் கட்டளையிட, அது யோனாசைக் கடற்கரையில் கக்கி விட்டது.
1 (2) யோனாஸ் அந்த மீன் வயிற்றிலிருந்து கொண்டு தம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டிக் கொண்டார்: .::. 2 (3) என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர். .::. 3 (4) நடுக்கடலின் ஆழத்தில் நீர் என்னைத் தள்ளினீர், வெள்ளம் என்னைச் சூழ்ந்து கொண்டது; உம்முடைய அலைகள், திரைகள் அனைத்தும் என் மேல் புரண்டு கடந்து போயின. .::. 4 (5) அப்பொழுது நான், ' உமது திருமுன்னிருந்து புறம்பே எறியப்பட்டேன்; இனி எவ்வாறு உம் பரிசுத்த கோயிலை மறுபடியும் பார்ப்பேன்?' என்று முறையிட்டேன். .::. 5 (6) மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை நெருக்கிற்று, கடலாழத்தில் நீர் சூழ, நான் இருந்தேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது. .::. 6 (7) மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது; ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர். .::. 7 (8) என் ஆன்மா எனக்குள் சோர்ந்து போகும் போது ஆண்டவரை நான் நினைவுகூர்ந்தேன்; என் மன்றாட்டு உம் வரைக்கும் உம்முடைய பரிசுத்த கோயிலுக்குள் வந்தது. .::. 8 (9) ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர். .::. 9 (10) நானோ புகழ்ப்பாடலுடன் உமக்குப் பலியிடுவேன், நான் நேர்ந்து கொண்டதை உமக்குச் செலுத்துவேன்; மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது!" .::. 10 (11) ஆண்டவர் அந்த மீனுக்குக்குக் கட்டளையிட, அது யோனாசைக் கடற்கரையில் கக்கி விட்டது.
  • யோனா அதிகாரம் 1  
  • யோனா அதிகாரம் 2  
  • யோனா அதிகாரம் 3  
  • யோனா அதிகாரம் 4  
×

Alert

×

Tamil Letters Keypad References