தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. இவை இவ்வாறு நிகழ்ந்தபின் ஆண்டவருடைய திரு வாக்கு ஆபிராமுக்குக் காட்சியில் உண்டாகி, அஞ்சாதே, ஆபிராம், நாம் உன் அடைக்கலமும், மிகவும் சிறந்த உன் பரிசுமாய் இருக்கிறோம் என்றது.
2. அதைக் கேட்டு, ஆபிராம்: ஆண்டவராகிய கடவுளே, அடியேனுக்கு நீர் என்ன தருவீர்? நான் பிள்ளையின்றிப் போவேனே! என் வீட்டு மேற்பார்வையாளனின் மகனான இந்தத் தமாஸ் ஊரானாகிய எலியேசேர் தான் இருக்கிறான் என்றான்.
3. மீண்டும் ஆபிராம்: நீர் எனக்கு மகப்பேறு அருளினீரில்லை. ஆதலால், இதோ, என் வீட்டில் பிறந்த ஊழியனே எனக்கு வாரிசாய் இருப்பான் என்றான்.
4. (என்றதும்) ஆண்டவருடைய திருவாக்கு அவனுக்கு உடனே உண்டாகி: இவன் உன் வாரிசு ஆகான். உனக்கு பிறக்கும் புதல்வன் தான் உனக்கு வாரிசு ஆவான் என்று சொன்னது.
5. பின் ஆண்டவர் அவனை வெளியே அழைத்துக் கொண்டு போய்: நீ வானத்தை அண்ணாந்து பார். கூடுமாயின் விண்மீன்கள் எத்தனையென்று எண்ணிப் பார். உன் சந்ததி அவ்வளவு இருக்கும் என்றார். ஆபிராம் கடவுளை விசுவாசித்தான்.
6. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. மீண்டும் அவர் அவனை நோக்கி:
7. இந்நாட்டை உனக்குக் கொடுக்கும்படியாகவும், அதனை நீ உரிமையாக்கிக் கொள்ளும்படியாகவும் அல்லவா ஆண்டவராகிய நாம் ஊர் என்னும் கல்தேயர் நகரிலிருந்து உன்னை வெளிக் கொணர்ந்தோம் என்றார்.
8. அதற்கு அவன்: ஆண்டவராகிய கடவுளே, நான் இதனை உரிமையாக்கிக் கொள்வேனென்று எப்படி அறிவேன் என்று கேட்டான்.
9. ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக: மூன்று வயதுக் கிடாரி ஒன்றும், மூன்று வயதுள்ள வெள்ளாடு ஒன்றும், மூன்று வயது ஆட்டக் கிடாய் ஒன்றும் காட்டுப் புறா ஒன்றும், மாடப் புறா ஒன்றும் நம்மிடம் கொண்டு வா என்றார்.
10. அவற்றையெல்லாம் அவன் கொண்டுவந்து, அவற்றை நடுவே வெட்டித் துண்டங்களை ஒன்றிற்கொன்று எதிராக வைத்தான். பறவைகளையோ அவன் துண்டிக்கவில்லை.
11. வானத்துப் பறவைகள் அந்த உடல்களின் மேல் வந்திறங்கின. அவற்றை ஆபிராம் துரத்திக் கொண்டிருந்தான்.
12. பின் சூரியன் மறையும் வேளையில் ஆபிராமுக்கு அயர்ந்த தூக்கம் உண்டானது. பெரும் திகிலும் காரிருளும் அவனைச் சூழ்ந்து கொண்டன.
13. அந்நேரத்தில் ஆண்டவர்: உன் சந்ததியார் தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியராய்த் திரிந்து, அடிமைகளாக்கப்பட்டு, நானூறு ஆண்டளவும் துன்பமடைவார்கள் என்று முன்பே அறியக்கடவாய்.
14. ஆயினும், அவர்களை அடிமைப்படுத்திய மக்களுக்கு நாம் தீர்ப்பு வழங்குவோம். அதன் பின் உன் சந்ததியார் உரிமை பெற்றவராய் மிகுந்த பொருளுடனே புறப்படுவர்.
15. நீயோ, மிகவும் முதிர்ந்த வயதிலே அடக்கம் பண்ணப்பட்டுச் சமாதானத்தோடு உன் முன்னோருடன் சேர்வாய்.
16. ஆனால், நாலாம் தலைமுறையில் (உன் சந்ததியார்) இவ்விடத்திற்குத் திரும்பவும் வருவார்கள். ஏனென்றால், அமோறையருடைய பாவ அக்கிரமங்களின் அளவு இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
17. சூரியன் மறைந்து காரிருள் உண்டான பின், புகைகின்ற ஒரு சூளையும், மேற் சொல்லப்பட்ட துண்டங்களின் நடுவே உலாவி நின்ற நெருப்பு மயமான ஒரு விளக்கும் காணப்பட்டன.
18. அந்நாளிலே ஆண்டவர் ஆபிராமோடு உடன்படிக்கை செய்து: எகிப்தின் நதிமுதல் யூஃப்ரத்தீஸ் மாநதி வரையிலுமுள்ள இந்த நாட்டை உன் சந்ததியாருக்குத் தருவோம்.
19. சீனையர், செனெசேயர், செத்மோனையர்,
20. ஏத்தையர், பெரேசையர், இராப்பாயீமர்,
21. அமோறையர், கானானையர், ஜெந்சையர், ஜெபுசையர் முதலியோரையும் (அவர்களுக்குக் கீழ்ப்படுத்துவோம்) என்றருளினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 15 of Total Chapters 50
ஆதியாகமம் 15:47

×

Alert

×

tamil Letters Keypad References