தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
1. யோசபாத் யெருசலேமிலுள்ள தன் வீட்டுக்குச் சமாதானமாய்த் திரும்பி வந்தான்.
2. அப்பொழுது அனானியின் மகன் ஏகு என்ற திருக்காட்சியாளர் அவனுக்கு எதிரே வந்து, "நீரோ தீயவனுக்குத் துணையாய் நின்று ஆண்டவரைப் பகைக்கிறவனோடு நட்புக் கொண்டீர். அதன் பொருட்டு ஆண்டவரின் கோபம் உம்மேல் வரவேண்டியதாயிருந்தது.
3. ஆயினும் நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்: அதாவது, சிலைத்தோப்புகளை யூதா நாட்டிலிருந்து அகற்றி, உம் முன்னோரின் கடவுளைப் பின்பற்றி வந்துள்ளீர்" என்றார்.
4. யோசபாத் யெருசலேமில் குடிபுகுந்த பிறகு தன் குடிமக்களைக் காணப் புறப்பட்டுப் பெர்சாபே முதல், எப்பிராயீம் மலை நாடு வரை வாழ்ந்து வந்த மக்களிடம் சென்று, அவர்களைத் தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரின் வழிபாட்டுக்குத் திருப்பினான்.
5. மேலும் யூதா நாடெங்குமுள்ள அரணுள்ள நகர் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை ஏற்படுத்தினான்.
6. அவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் கடமைகளைக் கவனமாய் நிறைவேற்றுங்கள். நீங்கள் மனிதரின் கட்டளையால் அன்று, ஆண்டவரின் திருப்பெயரை முன்னிட்டே நீதி வழங்க வேண்டும். ஏனெனில் நீதி வழங்க, இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.
7. ஆண்டவருக்கு அஞ்சி நடங்கள். எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம் அநீதியுமில்லை, ஓரவஞ்சனையும் இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது" என்றான்.
8. மேலும், யோசபாத் சில லேவியர்களையும் குருக்களையும் இஸ்ராயேல் குலத்தலைவர்களையும் ஏற்படுத்தி, ஆண்டவருக்கடுத்த காரியங்களிலும், மற்ற வழக்குகளிலும் மக்களுக்கு அவர்கள் நீதி வழங்கக் கட்டளையிட்டான்.
9. அவர்களை பார்த்து, "நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேர்மையோடும் நடங்கள்.
10. தத்தம் ஊர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர் இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், சடங்கு முறைகள் முதலியவற்றிற்கு அடுத்த வழக்குகளை உங்களிடம் கொண்டு வரும் போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சீற்றம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் வராதபடியும் அவர்களுக்குப் புத்தி புகட்டுங்கள். இவ்வாறு செய்தால், நீங்கள் குற்றமற்றவராய் இருப்பீர்கள்.
11. ஆண்டவருக்கடுத்த எல்லா வழக்குகளிலும் தலைமைக் குரு அமரியாசும், அரசனுக்கடுத்த எல்லாக் காரியங்களிலும் யூதா குலத்தலைவனும் இஸ்ராயேலின் மகனுமான ஜபதியாசும் தலைவர்களாய் இருப்பார்கள். உங்கள் நடுவே இருக்கிற லேவியர்களும் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். நீங்கள் மனத் திடனோடு உங்கள் கடமைகளை ஆற்றுவதில் கவனமாய் இருங்கள். இவ்வாறு செய்வீர்களாகில் ஆண்டவர் உங்களுக்குத் துணையாய் இருப்பார்" என்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 36
2 நாளாகமம் 19:6
1 யோசபாத் யெருசலேமிலுள்ள தன் வீட்டுக்குச் சமாதானமாய்த் திரும்பி வந்தான். 2 அப்பொழுது அனானியின் மகன் ஏகு என்ற திருக்காட்சியாளர் அவனுக்கு எதிரே வந்து, "நீரோ தீயவனுக்குத் துணையாய் நின்று ஆண்டவரைப் பகைக்கிறவனோடு நட்புக் கொண்டீர். அதன் பொருட்டு ஆண்டவரின் கோபம் உம்மேல் வரவேண்டியதாயிருந்தது. 3 ஆயினும் நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்: அதாவது, சிலைத்தோப்புகளை யூதா நாட்டிலிருந்து அகற்றி, உம் முன்னோரின் கடவுளைப் பின்பற்றி வந்துள்ளீர்" என்றார். 4 யோசபாத் யெருசலேமில் குடிபுகுந்த பிறகு தன் குடிமக்களைக் காணப் புறப்பட்டுப் பெர்சாபே முதல், எப்பிராயீம் மலை நாடு வரை வாழ்ந்து வந்த மக்களிடம் சென்று, அவர்களைத் தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரின் வழிபாட்டுக்குத் திருப்பினான். 5 மேலும் யூதா நாடெங்குமுள்ள அரணுள்ள நகர் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை ஏற்படுத்தினான். 6 அவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் கடமைகளைக் கவனமாய் நிறைவேற்றுங்கள். நீங்கள் மனிதரின் கட்டளையால் அன்று, ஆண்டவரின் திருப்பெயரை முன்னிட்டே நீதி வழங்க வேண்டும். ஏனெனில் நீதி வழங்க, இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். 7 ஆண்டவருக்கு அஞ்சி நடங்கள். எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம் அநீதியுமில்லை, ஓரவஞ்சனையும் இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது" என்றான். 8 மேலும், யோசபாத் சில லேவியர்களையும் குருக்களையும் இஸ்ராயேல் குலத்தலைவர்களையும் ஏற்படுத்தி, ஆண்டவருக்கடுத்த காரியங்களிலும், மற்ற வழக்குகளிலும் மக்களுக்கு அவர்கள் நீதி வழங்கக் கட்டளையிட்டான். 9 அவர்களை பார்த்து, "நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேர்மையோடும் நடங்கள். 10 தத்தம் ஊர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர் இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், சடங்கு முறைகள் முதலியவற்றிற்கு அடுத்த வழக்குகளை உங்களிடம் கொண்டு வரும் போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சீற்றம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் வராதபடியும் அவர்களுக்குப் புத்தி புகட்டுங்கள். இவ்வாறு செய்தால், நீங்கள் குற்றமற்றவராய் இருப்பீர்கள். 11 ஆண்டவருக்கடுத்த எல்லா வழக்குகளிலும் தலைமைக் குரு அமரியாசும், அரசனுக்கடுத்த எல்லாக் காரியங்களிலும் யூதா குலத்தலைவனும் இஸ்ராயேலின் மகனுமான ஜபதியாசும் தலைவர்களாய் இருப்பார்கள். உங்கள் நடுவே இருக்கிற லேவியர்களும் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். நீங்கள் மனத் திடனோடு உங்கள் கடமைகளை ஆற்றுவதில் கவனமாய் இருங்கள். இவ்வாறு செய்வீர்களாகில் ஆண்டவர் உங்களுக்குத் துணையாய் இருப்பார்" என்றான்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 36
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References