1. [QS]வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், [QE][QS2]அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, [QE][QS2]அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார். [QE]
2. [QS]பூரண அழகுள்ள சீயோனிலிருந்து [QE][QS2]இறைவன் பிரகாசிக்கிறார். [QE]
3. [QS]நம்முடைய இறைவன் வருகிறார், [QE][QS2]அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; [QE][QS]அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; [QE][QS2]அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது. [QE]
4. [QS]அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, [QE][QS2]மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்: [QE]
5. [QS]“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, [QE][QS2]பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.” [QE]
6. [QS]வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; [QE][QS2]அவர் நியாதிபதியாகிய இறைவன். [QE][PBR]
7. [QS]“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; [QE][QS2]இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: [QE][QS2]நான் இறைவன், நானே உங்கள் இறைவன். [QE]
8. [QS]எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, [QE][QS2]அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. [QE]
9. [QS]உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, [QE][QS2]உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. [QE]
10. [QS]ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் [QE][QS2]ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். [QE]
11. [QS]மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; [QE][QS2]வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். [QE]
12. [QS]நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; [QE][QS2]ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். [QE]
13. [QS]நான் காளைகளின் இறைச்சியை உண்டு, [QE][QS2]ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ? [QE][PBR]
14. [QS]“நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; [QE][QS2]மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். [QE]
15. [QS]துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், [QE][QS2]நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.” [QE]
16. [PS]கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: [PE][QS]“என் சட்டங்களைக் கூறுவதற்கும், [QE][QS2]என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும் [QE][QS2]உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? [QE]
17. [QS]என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, [QE][QS2]என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள். [QE]
18. [QS]நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; [QE][QS2]விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள். [QE]
19. [QS]நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; [QE][QS2]உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள். [QE]
20. [QS]நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; [QE][QS2]இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள். [QE]
21. [QS]இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; [QE][QS2]நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள். [QE][QS]ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு, [QE][QS2]உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன். [QE][PBR]
22. [QS]“இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; [QE][QS2]இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; [QE][QS2]ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள். [QE]
23. [QS]நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; [QE][QS2]இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.” [QE]