தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 50

1 வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார். 2 பூரண அழகுள்ள சீயோனிலிருந்து இறைவன் பிரகாசிக்கிறார். 3 நம்முடைய இறைவன் வருகிறார், அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது. 4 அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்: 5 “பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.” 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; அவர் நியாதிபதியாகிய இறைவன். 7 “என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: நான் இறைவன், நானே உங்கள் இறைவன். 8 எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. 9 உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. 10 ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். 11 மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். 12 நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். 13 நான் காளைகளின் இறைச்சியை உண்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ? 14 “நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். 15 துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.” 16 கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: “என் சட்டங்களைக் கூறுவதற்கும், என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? 17 என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள். 18 நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள். 19 நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள். 20 நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள். 21 இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள். ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு, உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன். 22 “இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள். 23 நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.”
1 வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார். .::. 2 பூரண அழகுள்ள சீயோனிலிருந்து இறைவன் பிரகாசிக்கிறார். .::. 3 நம்முடைய இறைவன் வருகிறார், அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது. .::. 4 அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்: .::. 5 “பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.” .::. 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; அவர் நியாதிபதியாகிய இறைவன். .::. 7 “என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: நான் இறைவன், நானே உங்கள் இறைவன். .::. 8 எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. .::. 9 உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. .::. 10 ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். .::. 11 மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். .::. 12 நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். .::. 13 நான் காளைகளின் இறைச்சியை உண்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ? .::. 14 “நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். .::. 15 துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.” .::. 16 கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: “என் சட்டங்களைக் கூறுவதற்கும், என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? .::. 17 என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள். .::. 18 நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள். .::. 19 நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள். .::. 20 நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள். .::. 21 இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள். ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு, உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன். .::. 22 “இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள். .::. 23 நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.”
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References