1. {எலிகூ பேசுதல்} [PS] யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள்.
2. ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான்.
3. அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள்.
4. எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள்.
5. ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது. [PE][PS]
6. எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்: [QBR] “நான் வயதில் இளையவன், [QBR2] நீங்களோ முதியவர்கள்; [QBR] அதினால் நான் அறிந்ததைத் துணிந்து [QBR2] சொல்லப் பயந்திருந்தேன். [QBR]
7. ‘முதியோர் பேசட்டும், [QBR2] வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன். [QBR]
8. மனிதரில் இருக்கும் ஆவியாகிய [QBR2] எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது. [QBR]
9. முதியோர் மட்டுமே ஞானிகளல்ல; [QBR2] வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல.
10. “ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்; [QBR2] எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன். [QBR]
11. நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து, [QBR2] உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து, [QBR] உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன். [QBR2]
12. நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன். [QBR] ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை; [QBR2] அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை. [QBR]
13. ‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல, [QBR2] இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம். [QBR]
14. யோபு என்னோடு வாதாடவில்லை, [QBR2] நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
15. “அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்; [QBR2] அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. [QBR]
16. இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில், [QBR2] நான் பொறுத்திருக்க வேண்டுமோ? [QBR]
17. இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; [QBR2] நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். [QBR]
18. பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு, [QBR2] எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது; [QBR]
19. என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், [QBR2] வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது. [QBR]
20. நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; [QBR2] என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும். [QBR]
21. நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, [QBR2] எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன். [QBR]
22. நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், [QBR2] என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக. [PE]