தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யோபு

பதிவுகள்

யோபு அதிகாரம் 32

எலிகூ பேசுதல் 1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள். 2 ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான். 3 அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள். 4 எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள். 5 ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது. 6 எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்: “நான் வயதில் இளையவன், நீங்களோ முதியவர்கள்; அதினால் நான் அறிந்ததைத் துணிந்து சொல்லப் பயந்திருந்தேன். 7 ‘முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன். 8 மனிதரில் இருக்கும் ஆவியாகிய எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது. 9 முதியோர் மட்டுமே ஞானிகளல்ல; வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல. 10 “ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்; எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன். 11 நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து, உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து, உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன். 12 நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன். ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை; அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை. 13 ‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல, இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம். 14 யோபு என்னோடு வாதாடவில்லை, நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன். 15 “அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்; அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. 16 இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில், நான் பொறுத்திருக்க வேண்டுமோ? 17 இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். 18 பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு, எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது; 19 என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது. 20 நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும். 21 நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன். 22 நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.
எலிகூ பேசுதல் 1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள். .::. 2 ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான். .::. 3 அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள். .::. 4 எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள். .::. 5 ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது. .::. 6 எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்: “நான் வயதில் இளையவன், நீங்களோ முதியவர்கள்; அதினால் நான் அறிந்ததைத் துணிந்து சொல்லப் பயந்திருந்தேன். .::. 7 ‘முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன். .::. 8 மனிதரில் இருக்கும் ஆவியாகிய எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது. .::. 9 முதியோர் மட்டுமே ஞானிகளல்ல; வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல. .::. 10 “ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்; எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன். .::. 11 நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து, உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து, உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன். .::. 12 நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன். ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை; அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை. .::. 13 ‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல, இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம். .::. 14 யோபு என்னோடு வாதாடவில்லை, நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன். .::. 15 “அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்; அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. .::. 16 இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில், நான் பொறுத்திருக்க வேண்டுமோ? .::. 17 இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். .::. 18 பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு, எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது; .::. 19 என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது. .::. 20 நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும். .::. 21 நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன். .::. 22 நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
×

Alert

×

Tamil Letters Keypad References