1. {#1யோபு பேசுதல் } [PS]அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது: [PE]
2. [QS]“இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது; [QE][QS2]நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன. [QE]
3. [QS]அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ, [QE][QS2]அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ, [QE]
4. [QS]நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்; [QE][QS2]என் வாயை விவாதங்களால் நிரப்புவேன். [QE]
5. [QS]அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து, [QE][QS2]அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன். [QE]
6. [QS]அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ? [QE][QS2]இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார். [QE]
7. [QS]நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்; [QE][QS2]நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன். [QE][PBR]
8. [QS]“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; [QE][QS2]மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை. [QE]
9. [QS]அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; [QE][QS2]அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை. [QE]
10. [QS]ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; [QE][QS2]அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன். [QE]
11. [QS]என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின; [QE][QS2]நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன். [QE]
12. [QS]அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை; [QE][QS2]என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன். [QE][PBR]
13. [QS]“ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்? [QE][QS2]தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார். [QE]
14. [QS]எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்; [QE][QS2]இப்படிப்பட்ட அநேக திட்டங்களை அவர் இன்னும் வைத்திருக்கிறார். [QE]
15. [QS]அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்; [QE][QS2]இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன். [QE]
16. [QS]இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்; [QE][QS2]எல்லாம் வல்லவர் என்னைத் திகிலடையப் பண்ணினார். [QE]
17. [QS]அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை; [QE][QS2]என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை. [QE][PBR]