தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யோபு

பதிவுகள்

யோபு அதிகாரம் 23

யோபு பேசுதல் 1 அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது: 2 “இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது; நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன. 3 அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ, அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ, 4 நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்; என் வாயை விவாதங்களால் நிரப்புவேன். 5 அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து, அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன். 6 அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ? இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார். 7 நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்; நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன். 8 “ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை. 9 அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை. 10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன். 11 என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின; நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன். 12 அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை; என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன். 13 “ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்? தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார். 14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்; இப்படிப்பட்ட அநேக திட்டங்களை அவர் இன்னும் வைத்திருக்கிறார். 15 அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்; இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன். 16 இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்; எல்லாம் வல்லவர் என்னைத் திகிலடையப் பண்ணினார். 17 அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை; என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை.
யோபு பேசுதல் 1 அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது: .::. 2 “இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது; நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன. .::. 3 அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ, அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ, .::. 4 நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்; என் வாயை விவாதங்களால் நிரப்புவேன். .::. 5 அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து, அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன். .::. 6 அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ? இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார். .::. 7 நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்; நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன். .::. 8 “ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை. .::. 9 அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை. .::. 10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன். .::. 11 என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின; நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன். .::. 12 அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை; என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன். .::. 13 “ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்? தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார். .::. 14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்; இப்படிப்பட்ட அநேக திட்டங்களை அவர் இன்னும் வைத்திருக்கிறார். .::. 15 அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்; இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன். .::. 16 இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்; எல்லாம் வல்லவர் என்னைத் திகிலடையப் பண்ணினார். .::. 17 அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை; என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
×

Alert

×

Tamil Letters Keypad References