1. மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
|
2. நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
|
3. அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். PS
|
4. {சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் பட்டியல்} PS பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
|
5. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
|
6. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
|
7. எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
|
43. லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
|
45. வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
|
46. ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
|
57. சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
|
59. செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
|
60. ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
|
61. தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
|
63. ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
|
64. இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
|
65. ஊரீம் தும்மீம் * யாத். 28:30 ஐ பார்க்க, இவைகள் மூலமாக தேவ சித்தம் அறிய பயன்படுத்தினார்கள். என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
|
67. அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
|
70. வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
|
71. வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் † 8,500 கிலோ. கிராம் பொன், 170 கிலோ. பொன். 1,200 கிலோ வெள்ளி கொடுத்தார்கள்.
|
72. மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், ‡ 170 கிலோ பொன், 1, 100 கிலோ வெள்ளி. 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
|
73. ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள். PE
|