நெகேமியா 7 : 1 (TOV)
அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,
நெகேமியா 7 : 2 (TOV)
நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
நெகேமியா 7 : 3 (TOV)
அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
நெகேமியா 7 : 4 (TOV)
பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது; அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
நெகேமியா 7 : 5 (TOV)
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
நெகேமியா 7 : 6 (TOV)
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
நெகேமியா 7 : 7 (TOV)
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:
நெகேமியா 7 : 8 (TOV)
பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 9 (TOV)
செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 10 (TOV)
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 11 (TOV)
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 12 (TOV)
ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
நெகேமியா 7 : 13 (TOV)
சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.
நெகேமியா 7 : 14 (TOV)
சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
நெகேமியா 7 : 15 (TOV)
பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 16 (TOV)
பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 17 (TOV)
அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 18 (TOV)
அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.
நெகேமியா 7 : 19 (TOV)
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.
நெகேமியா 7 : 20 (TOV)
ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.
நெகேமியா 7 : 21 (TOV)
எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.
நெகேமியா 7 : 22 (TOV)
ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 23 (TOV)
பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.
நெகேமியா 7 : 24 (TOV)
ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
நெகேமியா 7 : 25 (TOV)
கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.
நெகேமியா 7 : 26 (TOV)
பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 27 (TOV)
ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 28 (TOV)
பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 29 (TOV)
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
நெகேமியா 7 : 30 (TOV)
ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
நெகேமியா 7 : 31 (TOV)
மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 32 (TOV)
பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.
நெகேமியா 7 : 33 (TOV)
வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 34 (TOV)
மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
நெகேமியா 7 : 35 (TOV)
ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
நெகேமியா 7 : 36 (TOV)
எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
நெகேமியா 7 : 37 (TOV)
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.
நெகேமியா 7 : 38 (TOV)
செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.
நெகேமியா 7 : 39 (TOV)
ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
நெகேமியா 7 : 40 (TOV)
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 41 (TOV)
பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
நெகேமியா 7 : 42 (TOV)
ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.
நெகேமியா 7 : 43 (TOV)
லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.
நெகேமியா 7 : 44 (TOV)
பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 45 (TOV)
வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.
நெகேமியா 7 : 46 (TOV)
நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
நெகேமியா 7 : 47 (TOV)
கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
நெகேமியா 7 : 48 (TOV)
லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,
நெகேமியா 7 : 49 (TOV)
ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,
நெகேமியா 7 : 50 (TOV)
ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,
நெகேமியா 7 : 51 (TOV)
காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,
நெகேமியா 7 : 52 (TOV)
பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,
நெகேமியா 7 : 53 (TOV)
பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
நெகேமியா 7 : 54 (TOV)
பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
நெகேமியா 7 : 55 (TOV)
பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
நெகேமியா 7 : 56 (TOV)
நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,
நெகேமியா 7 : 57 (TOV)
சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,
நெகேமியா 7 : 58 (TOV)
யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
நெகேமியா 7 : 59 (TOV)
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
நெகேமியா 7 : 60 (TOV)
நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
நெகேமியா 7 : 61 (TOV)
தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
நெகேமியா 7 : 62 (TOV)
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
நெகேமியா 7 : 63 (TOV)
ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரர்.
நெகேமியா 7 : 64 (TOV)
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
நெகேமியா 7 : 65 (TOV)
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
நெகேமியா 7 : 66 (TOV)
சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
நெகேமியா 7 : 67 (TOV)
அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
நெகேமியா 7 : 68 (TOV)
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
நெகேமியா 7 : 69 (TOV)
ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
நெகேமியா 7 : 70 (TOV)
வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.
நெகேமியா 7 : 71 (TOV)
வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
நெகேமியா 7 : 72 (TOV)
மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
நெகேமியா 7 : 73 (TOV)
ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73

BG:

Opacity:

Color:


Size:


Font: