1. {படைப்பில் கடவுளின் மாட்சி[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] வானங்கள் இறைவனின்[SE][SS] மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;[SE][SS] வான்வெளி அவர்தம் கைகளின்[SE][SS] வேலைப்பாட்டை விவரிக்கின்றது.[SE][QE]
2. [QS][SS] ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு[SE][SS] அச்செய்தியை அறிவிக்கின்றது;[SE][SS] ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு[SE][SS] அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.[SE][QE]
3. [QS][SS] அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;[SE][SS] அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.[SE][QE]
4. [QS][SS] ஆயினும், அவற்றின் அறிக்கை[SE][SS] உலகெங்கும் சென்றடைகின்றது; [BR] அவை கூறும் செய்தி[SE][SS] உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,[SE][SS] இறைவன் அங்கே கதிரவனுக்கு[SE][SS] ஒரு கூடாரம் அமைத்துள்ளார். [* உரோ 10:18.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] மணவறையிலிருந்து புறப்படும்[SE][SS] மணமகளைப் போல அது வருகின்றது;[SE][SS] பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு[SE][SS] அது தன் பாதையில் ஓடுகின்றது.[SE][QE]
6. [QS][SS] அது வானத்தின் ஒரு முனையிலிருந்து[SE][SS] புறப்படுகின்றது; அதன் பாதை[SE][SS] மறுமுனைவரையிலும் செல்கின்றது;[SE][SS] அதன் வெப்பத்திற்கு[SE][SS] மறைவானது ஒன்றுமில்லை.[SE][PE][QE]
7. {ஆண்டவரின் திருச்சட்டம்} [PS] [QS][SS] ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;[SE][SS] அது புத்துயிர் அளிக்கின்றது.[SE][SS] ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;[SE][SS] எளியவருக்கு அது [BR] ஞானம் அளிக்கின்றது.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;[SE][SS] அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.[SE][SS] ஆண்டவரின் கட்டளைகள்[SE][SS] ஒளிமயமானவை;[SE][SS] அவை கண்களை ஒளிர்விக்கின்றன.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;[SE][SS] அது எந்நாளும் நிலைத்திருக்கும்.[SE][SS] ஆண்டவரின் நீதிநெறிகள்[SE][SS] உண்மையானவை; [BR] அவை முற்றிலும் நீதியானவை.[SE][QE]
10. [QS][SS] அவை பொன்னினும்,[SE][SS] பசும் பொன்னினும் மேலாக[SE][SS] விலைமிக்கவை; தேனினும்,[SE][SS] தேனடையினின்று சிந்தும்[SE][SS] தெளி தேனினும் இனிமையானவை.[SE][QE]
11. [QS][SS] அவற்றால் அடியேன்[SE][SS] எச்சரிக்கப்படுகின்றேன்;[SE][SS] அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு[SE][SS] மிகுந்த பரிசுண்டு.[SE][QE]
12. [QS][SS] தம் தவறுகளை[SE][SS] உணர்ந்து கொள்பவர் யார்தாம்?[SE][SS] என் அறியாப் பிழைக்காக[SE][SS] என்னை மன்னியும்.[SE][QE]
13. [QS][SS] மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து[SE][SS] உம் அடியானைக் காத்தருளும்.[SE][SS] அவர்கள் என்னை[SE][SS] ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;[SE][SS] அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;[SE][SS] பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.[SE][QE]
14. [QS][SS] என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே![SE][SS] என் வாயின் சொற்கள்[SE][SS] உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;[SE][SS] என் உள்ளத்தின் எண்ணங்கள்[SE][SS] உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.[SE][PE]