தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 19

படைப்பில் கடவுளின் மாட்சி
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. 3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி
உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். [* உரோ 10:18.. ]
5 மணவறையிலிருந்து புறப்படும் மணமகளைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு அது தன் பாதையில் ஓடுகின்றது. 6 அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனைவரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. ஆண்டவரின் திருச்சட்டம் 7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது
ஞானம் அளிக்கின்றது.
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. 9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.
10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. 11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு. 12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். 13 மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். 14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.
படைப்பில் கடவுளின் மாட்சி
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. .::. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. .::. 3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. .::. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி
உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். [* உரோ 10:18.. ]
.::. 5 மணவறையிலிருந்து புறப்படும் மணமகளைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு அது தன் பாதையில் ஓடுகின்றது. .::. 6 அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனைவரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. .::. ஆண்டவரின் திருச்சட்டம் 7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது
ஞானம் அளிக்கின்றது.
.::. 8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. .::. 9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.
.::. 10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. .::. 11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு. .::. 12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். .::. 13 மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். .::. 14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References