தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
மீகா
1. {இஸ்ரயேல் மீது ஆண்டவரின் வழக்கு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:[SE][SS] நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில்[SE][SS] உன் வழக்கைச் சொல்;[SE][SS] குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.[SE][QE]
2. [QS][SS] மலைகளே, மண்ணுலகின்[SE][SS] நிலையான அடித்தளங்களே,[SE][SS] ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்;[SE][SS] ஆண்டவருக்குத் தம் மக்களோடு[SE][SS] வழக்கு ஒன்று உண்டு;[SE][SS] இஸ்ரயேலோடு அவர்[SE][SS] வாதாடப் போகின்றார்.[SE][QE]
3. [QS][SS] என் மக்களே,[SE][SS] நான் உங்களுக்கு என்ன செய்தேன்?[SE][SS] எதில் நான் உங்களைத்[SE][SS] துயரடையச் செய்தேன்?[SE][SS] எனக்கு மறுமொழி கூறுங்கள்.[SE][QE]
4. [QS][SS] நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து[SE][SS] அழைத்து வந்தேன்;[SE][SS] அடிமைத்தன வீட்டிலிருந்து[SE][SS] மீட்டு வந்தேன்;[SE][SS] உங்களுக்கு முன்பாக[SE][SS] மோசேயையும், ஆரோனையும்,[SE][SS] மிரியாமையும் அனுப்பிவைத்தேன். [* விப 4:10-16; 12:50-51; 15:20. ] [SE][QE]
5. [QS][SS] என் மக்களே, மோவாபு அரசன்[SE][SS] பாலாக்கு வகுத்த திட்டத்தை[SE][SS] நினைத்துப் பாருங்கள்;[SE][SS] பெயோரின் மகன் பிலயாம்[SE][SS] அவனுக்குக் கூறிய மறுமொழியையும்,[SE][SS] சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே[SE][SS] நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்;[SE][SS] அப்போது ஆண்டவரின்[SE][SS] மீட்புச் செயல்களை[SE][SS] அறிந்து கொள்வீர்கள். [* எண் 22:2-25:25; யோசு 3:1-4:19. ] [SE][PE][QE]
6. {ஆண்டவர் விரும்புவது} [PS] [QS][SS] ஆண்டவரின் திருமுன் வரும்போது[SE][SS] உன்னதரான கடவுளாகிய அவருக்கு[SE][SS] எதைக் கொண்டுவந்து[SE][SS] பணிந்து நிற்பேன்?[SE][SS] எரிபலிகளோடும்[SE][SS] ஒரு வயதுக் கன்றுகளோடும்[SE][SS] அவர் முன்னிலையில் வரவேண்டுமா?[SE][QE]
7. [QS][SS] ஆயிரக்கணக்கான[SE][SS] ஆட்டுக்கிடாய்கள் மேலும்[SE][SS] பல்லாயிரக்கணக்கான[SE][SS] ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும்[SE][SS] எண்ணெய் மேலும்[SE][SS] ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?[SE][SS] என் குற்றத்தை அகற்ற[SE][SS] என் தலைப்பிள்ளையையும்,[SE][SS] என் பாவத்தைப் போக்க[SE][SS] நான் பெற்ற குழந்தையையும்[SE][SS] பலி கொடுக்க வேண்டுமா?[SE][QE]
8. [QS][SS] ஓ மானிடா, நல்லது எது என[SE][SS] அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே![SE][SS] நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,[SE][SS] இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்[SE][SS] உன் கடவுளுக்கு முன்பாக[SE][SS] தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர[SE][SS] வேறு எதை ஆண்டவர்[SE][SS] உன்னிடம் கேட்கின்றார்?[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரின் குரல்[SE][SS] நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது;[SE][SS] உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே[SE][SS] உண்மையான ஞானம்.[SE][SS] நகரில் கூடியிருப்போரே![SE][SS] நான் கூறுவதைக் கேளுங்கள்;[SE][QE]
10. [QS][SS] “கொடியோரின் வீட்டில்[SE][SS] தீய வழியால் சேர்க்கப்பட்ட[SE][SS] களஞ்சியங்களையும்[SE][SS] சபிக்கப்பட்ட மரக்காலையும்[SE][SS] நான் மறப்பேனோ?[SE][QE]
11. [QS][SS] கள்ளத் தராசையும்[SE][SS] கள்ள எடைக் கற்களையும் கொண்ட[SE][SS] பையை வைத்திருப்போரை[SE][SS] நேர்மையாளர் எனக் கொள்வேனோ?[SE][QE]
12. [QS][SS] உங்களிடையே உள்ள செல்வர்கள்[SE][SS] கொடுமை நிறைந்தவர்கள்;[SE][SS] அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்;[SE][SS] அவர்கள் வாயிலிருந்து[SE][SS] வஞ்சனையான பேச்சே[SE][SS] வெளிப்படுகின்றது.[SE][QE]
13. [QS][SS] ஆதலால், நான் உங்களை[SE][SS] உங்கள் பாவங்களுக்காகத்[SE][SS] தண்டிக்கத்தொடங்கியுள்ளேன்;[SE][SS] நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.[SE][QE]
14. [QS][SS] நீங்கள் உணவருந்தினாலும்[SE][SS] நிறைவடைய மாட்டீர்கள்;[SE][SS] பசி உங்கள் வயிற்றைக்[SE][SS] கிள்ளிக்கொண்டிருக்கும்;[SE][SS] நீங்கள் எதையும்[SE][SS] பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள்,[SE][SS] இழப்பீர்கள்;[SE][SS] அப்படியே நீங்கள் எதையாவது[SE][SS] பாதுகாப்பாக வைத்தாலும்[SE][SS] அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.[SE][QE]
15. [QS][SS] நீங்கள் விதைப்பீர்கள்;[SE][SS] ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்;[SE][SS] ஒலிவக் கொட்டைகளை[SE][SS] ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள்,[SE][SS] ஆனால், உங்களுக்கு எண்ணெய்[SE][SS] தடவிக்கொள்ளமாட்டீர்கள்;[SE][SS] திராட்சைப் பழம் பிழிவீர்கள்;[SE][SS] ஆனால், திராட்சை இரசத்தைச்[SE][SS] சுவைக்கமாட்டீர்கள்.[SE][QE]
16. [QS][SS] ஏனெனில், நீங்கள்[SE][SS] ஒம்ரியின் கட்டளைகளைக்[SE][SS] கடைப்பிடித்தீர்கள்;[SE][SS] ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள்[SE][SS] அனைத்தையும் பின்பற்றினீர்கள்,[SE][SS] அவர்களின் திட்டங்களைப்[SE][SS] பின்பற்றி நடந்தீர்கள்;[SE][SS] ஆதலால், நான் உங்களை[SE][SS] அழிவுக்குக் கையளிப்பேன்;[SE][SS] உங்களிடையே குடியிருப்போர்[SE][SS] இகழ்ச்சிக்கு உள்ளாவர்;[SE][SS] மக்களினங்களின்[SE][SS] நிந்தைக்கு ஆளாவீர்கள். [* 1 அர 16:23-34; 21:25-26.[QE]. ] [SE][PE]

பதிவுகள்

மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 7
1 2 3 4 5 6 7
இஸ்ரயேல் மீது ஆண்டவரின் வழக்கு 1 ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும். 2 மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார். 3 என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள். 4 நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பிவைத்தேன். * விப 4:10-16; 12:50-51; 15: 20. 5 என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்; பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்; அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள். * எண் 22:2-25:25; யோசு 3:1-4: 19. ஆண்டவர் விரும்புவது 6 ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா? 7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா? 8 ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்? 9 ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்; 10 “கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும் சபிக்கப்பட்ட மரக்காலையும் நான் மறப்பேனோ? 11 கள்ளத் தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் கொள்வேனோ? 12 உங்களிடையே உள்ள செல்வர்கள் கொடுமை நிறைந்தவர்கள்; அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்; அவர்கள் வாயிலிருந்து வஞ்சனையான பேச்சே வெளிப்படுகின்றது. 13 ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கத்தொடங்கியுள்ளேன்; நீங்கள் பாழாய்ப் போவீர்கள். 14 நீங்கள் உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்; பசி உங்கள் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும்; நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள், இழப்பீர்கள்; அப்படியே நீங்கள் எதையாவது பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு இரையாக்குவேன். 15 நீங்கள் விதைப்பீர்கள்; ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்; ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள், ஆனால், உங்களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்; திராட்சைப் பழம் பிழிவீர்கள்; ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள். 16 ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்; ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள், அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி நடந்தீர்கள்; ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்; உங்களிடையே குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்; மக்களினங்களின் நிந்தைக்கு ஆளாவீர்கள். [* 1 அர 16:23-34; 21:25-26.. ]
மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 7
1 2 3 4 5 6 7
×

Alert

×

Tamil Letters Keypad References