தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
மீகா
1. [PS] யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே: [* 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.[QE]. ] [PE]
2. {சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம்} [PS] [QS][SS] மக்களினங்களே,[SE][SS] நீங்கள் அனைவரும் கேளுங்கள்;[SE][SS] நிலவுலகே, அதில் உள்ளவையே,[SE][SS] செவிகொடுங்கள்.[SE][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] தம் திருக்கோவிலிருந்து[SE][SS] உங்களுக்கு எதிராகச்[SE][SS] சான்றுபகரப் போகிறார்.[SE][QE]
3. [QS][SS] இதோ! ஆண்டவர்[SE][SS] தாம் தங்குமிடத்திலிருந்து[SE][SS] புறப்பட்டு வருகின்றார்;[SE][SS] அவர் இறங்கிவந்து[SE][SS] நிலவுலகின் மலையுச்சிகள்[SE][SS] மிதிபட நடப்பார்.[SE][QE]
4. [QS][SS] நெருப்பின்முன் வைக்கப்பட்ட[SE][SS] மெழுகுபோலவும்,[SE][SS] பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும்[SE][SS] வெள்ளம்போலவும்,[SE][SS] அவர் காலடியில்[SE][SS] மலைகள் உருகிப்போகும்;[SE][SS] பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.[SE][QE]
5. [QS][SS] யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும்[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தாரின்[SE][SS] பாவங்களை முன்னிட்டுமே[SE][SS] இவை எல்லாம் நேரிடும்.[SE][SS] யாக்கோபின் குற்றத்திற்குக்[SE][SS] காரணம் யாது?[SE][SS] சமாரியா அன்றோ![SE][SS] யூதாவின் தொழுகைமேடுகளுக்குக்[SE][SS] காரணம் யாது?[SE][SS] எருசலேம் அன்றோ![SE][QE]
6. [QS][SS] ஆதலால், சமாரியாவைப்[SE][SS] பாழடைந்த மண்மேடாகவும்[SE][SS] திராட்சை நடும் தோட்டமாகவும்[SE][SS] செய்திடுவேன்;[SE][SS] அதன் கற்களைப்[SE][SS] பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,[SE][SS] அதன் அடித்தளங்கள்[SE][SS] வெளியிலே தெரியும்படி செய்வேன்.[SE][QE]
7. [QS][SS] அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம்[SE][SS] துகள் துகளாக நொறுக்கப்படும்;[SE][SS] அதன் பணயங்கள் எல்லாம்[SE][SS] நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்;[SE][SS] அதன் சிலைகளை எல்லாம்[SE][SS] உடைத்து கற்குவியல் ஆக்குவேன்;[SE][SS] ஏனெனில், விலைமகளுக்குரிய[SE][SS] பணயமாக அவை சேர்க்கப்பட்டன;[SE][SS] விலைமகளுக்குரிய பணயமாகவே[SE][SS] அவை போய்விடும்.[SE][QE]
8. [QS][SS] இதை முன்னிட்டே[SE][SS] நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்;[SE][SS] வெறுங்காலோடு[SE][SS] ஆடையின்றித் திரிவேன்;[SE][SS] குள்ளநரிகளைப்போல்[SE][SS] ஊளையிடுவேன்;[SE][SS] நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.[SE][QE]
9. [QS][SS] ஏனெனில், சமாரியாவின்[SE][SS] புண் ஆறாது;[SE][SS] யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது;[SE][SS] என் மக்களின் வாயிலாம்[SE][SS] எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.[SE][PE][QE]
10. {எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான்} [PS] [QS][SS] காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்;[SE][SS] கதறியழவும் வேண்டாம்;[SE][SS] பெத்லயப்ராவில் புழுதியில்[SE][SS] விழுந்து புரளுங்கள்.[SE][QE]
11. [QS][SS] சாபீரில் குடியிருப்போரே,[SE][SS] ஆடையின்றி மானக்கேடுற்று[SE][SS] அகன்று போங்கள்;[SE][SS] சானானில் குடியிருப்போரும்[SE][SS] வெளியே வருவதில்லை;[SE][SS] பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும்.[SE][SS] அங்கு உங்களுக்கு[SE][SS] அடைக்கலம் கிடைக்காது.[SE][QE]
12. [QS][SS] மாரோத்தில் குடியிருப்போர்[SE][SS] நன்மை வரும் என[SE][SS] ஆவலோடு காத்திருக்கின்றனர்;[SE][SS] ஏனெனில், தீமை[SE][SS] ஆண்டவரிடம் இருந்து இறங்கி[SE][SS] எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.[SE][QE]
13. [QS][SS] இலாக்கீசில் குடியிருப்போரே,[SE][SS] விரைந்தோடும் குதிரைகளைத்[SE][SS] தேரிலே பூட்டுங்கள்;[SE][SS] மகள் சீயோனின் பாவத்திற்கு[SE][SS] ஊற்று நீங்களே;[SE][SS] இஸ்ரயேலின் குற்றங்கள்[SE][SS] முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.[SE][QE]
14. [QS][SS] ஆதலால், மோரசேத்துகாத்துக்கு[SE][SS] நீ சீதனம் கொடுப்பாய்;[SE][SS] அக்சீபின் வீடுகள்[SE][SS] இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.[SE][QE]
15. [QS][SS] மாரேசாவில் குடியிருப்போரே,[SE][SS] கொள்ளைக்காரன் ஒருவன்[SE][SS] உங்கள்மேல்[SE][SS] திரும்பவும் வரும்படி செய்வேன்;[SE][SS] இஸ்ரயேலின் மேன்மை[SE][SS] அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.[SE][QE]
16. [QS][SS] உங்கள் அருமைப்[SE][SS] பிள்ளைகளுக்காகத்[SE][SS] துக்கங் கொண்டாட[SE][SS] உங்கள் தலையை[SE][SS] மொட்டையடித்துக்கொள்ளுங்கள்;[SE][SS] கழுகைப்போல் முற்றிலும்[SE][SS] மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு[SE][SS] நாடுகடத்தப்படுவார்கள்.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 7
1 2 3 4 5 6 7
1 யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே: [* 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.. ] சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம் 2 மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்; நிலவுலகே, அதில் உள்ளவையே, செவிகொடுங்கள். தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து உங்களுக்கு எதிராகச் சான்றுபகரப் போகிறார். 3 இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்; அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார். 4 நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்; பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். 5 யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ! 6 ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்; அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்படி செய்வேன். 7 அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்; அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்; ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன; விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும். 8 இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்; வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்; குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்; நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன். 9 ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது; யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது; என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து எட்டியுள்ளது. எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான் 10 காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்; கதறியழவும் வேண்டாம்; பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள். 11 சாபீரில் குடியிருப்போரே, ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்; சானானில் குடியிருப்போரும் வெளியே வருவதில்லை; பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும். அங்கு உங்களுக்கு அடைக்கலம் கிடைக்காது. 12 மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்; ஏனெனில், தீமை ஆண்டவரிடம் இருந்து இறங்கி எருசலேமின் வாயில்மேல் விழுந்தது. 13 இலாக்கீசில் குடியிருப்போரே, விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்; மகள் சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே; இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது உங்களிடம்தான். 14 ஆதலால், மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும். 15 மாரேசாவில் குடியிருப்போரே, கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல் திரும்பவும் வரும்படி செய்வேன்; இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும். 16 உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள்; கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள்.
மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 7
1 2 3 4 5 6 7
×

Alert

×

Tamil Letters Keypad References