1. யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லைசீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது.
|
3. தெற்குநோக்கி அக்கிரபிம் மேட்டைத்தாண்டி, சீன் பாலைநிலத்தைக் கடந்து, தெற்கே காதேசு பர்னேயாவை நோக்கி மேலே ஏறுகிறது. எஸ்ரோனைக் கடந்து அத்தார்வரை ஏறி கர்க்காவை நோக்கித் திரும்புகிறது;
|
5. கிழக்கு எல்லை யோர்தானின் முகத்துவாரம் வரை உள்ள சாக்கடல்; வட எல்லை யோர்தானின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி
|
6. பேத்தொகிலா வரை மேலேறி, வடக்கே பெத்தராபா வரை செல்கிறது. இவ்வெல்லை தொடர்ந்து ரூபனின் மகன் போகனின் கல்வரை செல்கிறது.
|
7. இவ்வெல்லை ஆக்கோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீர்வரை சென்று பள்ளத்தாக்கிற்குத் தெற்கே அதும்மிம் மேட்டுக்கு எதிரே உள்ள கில்காலுக்குப் பக்கமாக வடக்கே ஓடி, ஏன்செமசு நீர்நிலைகளைத் தொட்டு ஏன்ரோகேல்வரை செல்கிறது.
|
8. மேலும் இவ்வெல்லை இன்னோம் மகன் பள்ளத்தாக்கின் வட எல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் வழியே சென்று எபூசியரின் தென் அரணாகிய எருசலேம் வழியாக மேற்கே இரபாயிம் பள்ளத்தாக்கின் வடஎல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் எதிரே உள்ள மலை உச்சிவரை செல்கிறது.
|
9. மேலும் இவ்வெல்லை மலை உச்சியிலிருந்து நெப்தோவாகு நீரூற்றுவரை எபிரோன் மலை நகர்களுக்கு வெளியே செல்கிறது. பிறகு இவ்வெல்லை பாலாவுக்கு, அதாவது கிரியத்து எயாரிமுக்குச் செல்கிறது.
|
10. மேலும் இவ்வெல்லை பாலாவின் மேற்கே சேயிர் மலையை நோக்கிச் சுற்றுகிறது. எயாரிம் மலையின் வடக்குச் சரிவான கெசலோன் பக்கம் செல்கிறது. பெத்சமேசில் இறங்கி திம்னா பக்கம் செல்கிறது.
|
11. பிறகு இவ்வெல்லை எக்ரோனின் வடக்கிலுள்ள மலைச்சரிவில் சென்று சிக்ரோனைச் சுற்றுகிறது. பிறகு பாலா மலையைக் கடந்து யாப்னவேலுக்குச் சென்று கடலில் முடிவடைகிறது.
|
13. யோசுவாவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, எபுன்னேயின் மகன் காலேபுக்கு யோசுவா யூதாவின் நடுவில் எபிரோன் என்ற கிரியத்து அர்பா நிலப்பகுதியை அளித்தார், அர்பா என்பவன் ஆனாக்கின் தந்தை.
|
15. அங்கிருந்து அவர் தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றார். கிரியத்சேபர் என்பது தெபீரின் முன்னாளைய பெயர்.
|
16. "கிரியத்து சேபேரைத் தாக்கி அதைக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாகக் கொடுப்பேன், "என்று காலேபு அறிவித்தார்.
|
17. காலேபின் சகோதரர் கெனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். காலேபு தம் மகள் அக்சாவை அவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
|
18. அவள் வந்தபோது அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார். எனவே அவள் கழுதை மேலிருந்து இறங்கியபொழுது காலேபு அவளிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
|
19. அவள், "எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும்" என்றாள். அவர் அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.
|
21. தென்கோடியில் ஏதோம் எல்லையில் யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்களின் பின்வருமாறு; கப்சாவேல், ஏதேர், யாகூர்;
|
32. இலபவோத்து, சில்கிம், அயின், ரிம்மோன்; ஆகிய இவை அனைத்தும் இருபத்தொன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
|
36. சாராயிம், அதித்தாயிம், கேதரா, கெதரோத்தாயிம்; ஆகிய இவை பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
|
47. அஸ்தோது, அதன் நகர்களும் சிற்றூர்களும்; எகிப்தின் ஆறுவரை பரவியுள்ள காசாவும் அதன் நகரங்களும் சிற்றூர்களும் பெருங்கடலே அதன் எல்லை.
|
60. கிரியத்து எயாரிம் என்ற கிரியத்துபாகால், இரபா ஆகிய இவை இரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
|
63. எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதா மக்கள் வெளியேற்ற இயலவில்லை. எபூசியர் யூதா மக்களுடன் இன்றும் வாழ்கின்றனர்.
|