யோசுவா 15 : 1 (TOV)
யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
யோசுவா 15 : 2 (TOV)
தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,
யோசுவா 15 : 3 (TOV)
தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
யோசுவா 15 : 4 (TOV)
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல் மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.
யோசுவா 15 : 5 (TOV)
கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனைதுவக்கி,
யோசுவா 15 : 6 (TOV)
பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
யோசுவா 15 : 7 (TOV)
அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
யோசுவா 15 : 8 (TOV)
அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
யோசுவா 15 : 9 (TOV)
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
யோசுவா 15 : 10 (TOV)
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
யோசுவா 15 : 11 (TOV)
அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
யோசுவா 15 : 12 (TOV)
மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
யோசுவா 15 : 13 (TOV)
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.
யோசுவா 15 : 14 (TOV)
அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
யோசுவா 15 : 15 (TOV)
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
யோசுவா 15 : 16 (TOV)
கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
யோசுவா 15 : 17 (TOV)
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
யோசுவா 15 : 18 (TOV)
அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
யோசுவா 15 : 19 (TOV)
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
யோசுவா 15 : 20 (TOV)
யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:
யோசுவா 15 : 21 (TOV)
கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
யோசுவா 15 : 22 (TOV)
கீனா. திமோனா, ஆதாதா,
யோசுவா 15 : 23 (TOV)
கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
யோசுவா 15 : 24 (TOV)
சீப், தேலெம், பெயாலோத்,
யோசுவா 15 : 25 (TOV)
ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
யோசுவா 15 : 26 (TOV)
ஆமாம், சேமா, மொலாதா,
யோசுவா 15 : 27 (TOV)
ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,
யோசுவா 15 : 28 (TOV)
ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
யோசுவா 15 : 29 (TOV)
பாலா, ஈயிம், ஆத்சேம்,
யோசுவா 15 : 30 (TOV)
எல்தோலாத், கெசீல், ஒர்மா,
யோசுவா 15 : 31 (TOV)
சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
யோசுவா 15 : 32 (TOV)
லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
யோசுவா 15 : 33 (TOV)
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
யோசுவா 15 : 34 (TOV)
சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
யோசுவா 15 : 35 (TOV)
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
யோசுவா 15 : 36 (TOV)
சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.
யோசுவா 15 : 37 (TOV)
சேனான், அதாஷா, மிக்தால்காத்,
யோசுவா 15 : 38 (TOV)
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
யோசுவா 15 : 39 (TOV)
லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
யோசுவா 15 : 40 (TOV)
காபோன், லகமாம், கித்லீஷ்,
யோசுவா 15 : 41 (TOV)
கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
யோசுவா 15 : 42 (TOV)
லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
யோசுவா 15 : 43 (TOV)
இப்தா, அஸ்னா, நெத்சீப்,
யோசுவா 15 : 44 (TOV)
கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
யோசுவா 15 : 45 (TOV)
எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
யோசுவா 15 : 46 (TOV)
எக்ரோன் துவக்கிச் சமுத்திரம் மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
யோசுவா 15 : 47 (TOV)
அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
யோசுவா 15 : 48 (TOV)
மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
யோசுவா 15 : 49 (TOV)
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
யோசுவா 15 : 50 (TOV)
ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
யோசுவா 15 : 51 (TOV)
கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
யோசுவா 15 : 52 (TOV)
அராப், தூமா, எஷியான்,
யோசுவா 15 : 53 (TOV)
யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
யோசுவா 15 : 54 (TOV)
உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
யோசுவா 15 : 55 (TOV)
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
யோசுவா 15 : 56 (TOV)
யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
யோசுவா 15 : 57 (TOV)
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.
யோசுவா 15 : 58 (TOV)
அல்கூல், பெத்சூர், கெதோர்,
யோசுவா 15 : 59 (TOV)
மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
யோசுவா 15 : 60 (TOV)
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
யோசுவா 15 : 61 (TOV)
வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
யோசுவா 15 : 62 (TOV)
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
யோசுவா 15 : 63 (TOV)
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63

BG:

Opacity:

Color:


Size:


Font: