தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {அனைத்தையும் கடந்தவர் கடவுள்} [PS] எலிகூ தொடர்ந்து கூறினான்:
2. [QS][SS] ‘நான் இறைவன்முன் நேர்மை[SE][SS] யானவன்’ என நீர் சொல்வது[SE][SS] சரியென நினைக்கின்றீரா?[SE][QE]
3. [QS][SS] ‘நான் பாவம் செய்யாததனால்[SE][SS] எனக்கு என்ன ஆதாயம்?[SE][SS] எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர்.[SE][QE]
4. [QS][SS] உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து[SE][SS] நான் பதில் அளிக்கின்றேன்;[SE][QE]
5. [QS][SS] வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ![SE][SS] உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்![SE][QE]
6. [QS][SS] நீர் பாவம் செய்தால்,[SE][SS] அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்?[SE][SS] நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால்[SE][SS] அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?[SE][QE]
7. [QS][SS] நீர் நேர்மையாய் இருப்பதால்[SE][SS] இவருக்கு நீர் அளிப்பதென்ன?[SE][SS] அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன? [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
8. [QS][SS] உம் கொடுமை உம்மைப்போன்ற[SE][SS] மனிதரைக் துன்புறுத்துகின்றது;[SE][SS] உம் நேர்மையும் மானிடர்க்கே[SE][SS] நன்மை பயக்கின்றது. [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
9. [QS][SS] கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்;[SE][SS] வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர். [* யோபு 22:2-3.[QE] ] [SE][QE]
10. [QS][SS] ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை;[SE][SS] ‘எங்கே என்னைப் படைத்த கடவுள்?[SE][SS] இரவில் பாடச் செய்பவர் எங்கே?[SE][QE]
11. [QS][SS] நானிலத்தின் விலங்குகளைவிட[SE][SS] நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும்[SE][SS] வானத்துப் புள்ளினங்களை விட[SE][SS] நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?”[SE][QE]
12. [QS][SS] அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்;[SE][SS] பொல்லார் செருக்கின் பொருட்டு[SE][SS] அவர் பதில் ஒன்றும் சொல்லார்.[SE][QE]
13. [QS][SS] வீண் வேண்டலை[SE][SS] இறைவன் கண்டிப்பாய்க் கேளார்;[SE][SS] எல்லாம் வல்லவர் அதைக்[SE][SS] கவனிக்கவும் மாட்டார்.[SE][QE]
14. [QS][SS] இப்படியிருக்க,[SE][SS] ‘நான் அவரைப் பார்க்கவில்லை;[SE][SS] தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது.[SE][SS] நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;’[SE][SS] என்று நீர் கூறும்போது,[SE][SS] எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?[SE][QE]
15. [QS][SS] இப்பொழுதோ,[SE][SS] ‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை;[SE][SS] மனிதனின் மடமையை அவ்வளவாய்[SE][SS] அவர் நோக்குவதில்லை’ என எண்ணி,[SE][QE]
16. [QS][SS] யோபு வெற்றுரை விளம்புகின்றார்;[SE][SS] அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 35 / 42
யோபு 35:34
அனைத்தையும் கடந்தவர் கடவுள் 1 எலிகூ தொடர்ந்து கூறினான்: 2 ‘நான் இறைவன்முன் நேர்மை யானவன்’ என நீர் சொல்வது சரியென நினைக்கின்றீரா? 3 ‘நான் பாவம் செய்யாததனால் எனக்கு என்ன ஆதாயம்? எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர். 4 உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து நான் பதில் அளிக்கின்றேன்; 5 வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ! உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்! 6 நீர் பாவம் செய்தால், அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்? நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால் அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்? 7 நீர் நேர்மையாய் இருப்பதால் இவருக்கு நீர் அளிப்பதென்ன? அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன? [* யோபு 22:2-3. ] 8 உம் கொடுமை உம்மைப்போன்ற மனிதரைக் துன்புறுத்துகின்றது; உம் நேர்மையும் மானிடர்க்கே நன்மை பயக்கின்றது. [* யோபு 22:2-3. ] 9 கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்; வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர். [* யோபு 22:2-3. ] 10 ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை; ‘எங்கே என்னைப் படைத்த கடவுள்? இரவில் பாடச் செய்பவர் எங்கே? 11 நானிலத்தின் விலங்குகளைவிட நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும் வானத்துப் புள்ளினங்களை விட நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?” 12 அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்; பொல்லார் செருக்கின் பொருட்டு அவர் பதில் ஒன்றும் சொல்லார். 13 வீண் வேண்டலை இறைவன் கண்டிப்பாய்க் கேளார்; எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கவும் மாட்டார். 14 இப்படியிருக்க, ‘நான் அவரைப் பார்க்கவில்லை; தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது. நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;’ என்று நீர் கூறும்போது, எப்படி உமக்குச்செவிகொடுப்பார்? 15 இப்பொழுதோ, ‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை; மனிதனின் மடமையை அவ்வளவாய் அவர் நோக்குவதில்லை’ என எண்ணி, 16 யோபு வெற்றுரை விளம்புகின்றார்; அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 35 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References