தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {யோபின் முன்னைய இன்பநிலை} [PS] [QS][SS] யோபு இன்னும் தொடர்ந்து[SE][SS] பேசிய உரை:[SE][QE]
2. [QS][SS] காண்பேனா முன்னைய திங்கள்களை;[SE][SS] கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை![SE][QE]
3. [QS][SS] அப்போது அவர் விளக்கு[SE][SS] என் தலைமீது ஒளிவீசிற்று;[SE][SS] அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.[SE][QE]
4. [QS][SS] அப்போது என் இளமையின் நாள்களில்[SE][SS] நான் இருந்தேன்; கடவுளின் கருணை[SE][SS] என் குடிசை மீது இருந்தது.[SE][QE]
5. [QS][SS] அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;[SE][SS] என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.[SE][QE]
6. [QS][SS] அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;[SE][SS] பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.[SE][QE]
7. [QS][SS] நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,[SE][SS] பொது மன்றத்தில்[SE][SS] என் இருக்கையில் அமர்கையிலும்,[SE][QE]
8. [QS][SS] என்னைக் கண்டதும்[SE][SS] இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;[SE][SS] முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.[SE][QE]
9. [QS][SS] உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;[SE][SS] கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.[SE][QE]
10. [QS][SS] தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;[SE][SS] அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.[SE][QE]
11. [QS][SS] என்னைக் கேட்ட செவி,[SE][SS] என்னை வாழ்த்தியது;[SE][SS] என்னைப் பார்த்த கண்[SE][SS] எனக்குச் சான்று பகர்ந்தது.[SE][QE]
12. [QS][SS] ஏனெனில், கதறிய ஏழைகளை[SE][SS] நான் காப்பாற்றினேன்;[SE][SS] தந்தை இல்லார்க்கு உதவினேன்.[SE][QE]
13. [QS][SS] அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;[SE][SS] கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக்[SE][SS] களிப்பால் பாடச் செய்தேன்.[SE][QE]
14. [QS][SS] அறத்தை அணிந்தேன்;[SE][SS] அது என் ஆடையாயிற்று.[SE][SS] நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.[SE][QE]
15. [QS][SS] பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;[SE][SS] காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.[SE][QE]
16. [QS][SS] ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;[SE][SS] அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக[SE][SS] வாதிட்டேன்.[SE][QE]
17. [QS][SS] கொடியவரின் பற்களை உடைத்தேன்;[SE][SS] அவரின் பற்களுக்கு இரையானவரை[SE][SS] விடுவித்தேன்.[SE][QE]
18. [QS][SS] நான் எண்ணினேன்;[SE][SS] ‘மணல் மணியைப்போல்[SE][SS] நிறைந்த நாள் உடையவனாய்[SE][SS] என் இல்லத்தில் சாவேன்.[SE][QE]
19. [QS][SS] என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;[SE][SS] இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.[SE][QE]
20. [QS][SS] என் புகழ் என்றும் ஓங்கும்;[SE][SS] என் வில் வளைதிறன் கொண்டது.’[SE][QE]
21. [QS][SS] எனக்குச் செவிகொடுக்க[SE][SS] மக்கள் காத்திருந்தனர்;[SE][SS] என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.[SE][QE]
22. [QS][SS] என் சொல்லுக்கு மறுசொல்[SE][SS] அவர்கள் கூறவில்லை;[SE][SS] என் மொழிகள் அவர்களில் தங்கின.[SE][QE]
23. [QS][SS] மழைக்கென அவர்கள்[SE][SS] எனக்காய்க் காத்திருந்தனர்;[SE][SS] மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.[SE][QE]
24. [QS][SS] நம்பிக்கை இழந்தோரை[SE][SS] என் புன்முறவல் தேற்றியது;[SE][SS] என் முகப்பொலிவு உரமூட்டியது.[SE][QE]
25. [QS][SS] நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;[SE][SS] தலைவனாய்த் திகழ்ந்தேன்;[SE][SS] வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;[SE][SS] அழுகின்றவர்க்கு[SE][SS] ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.[SE][PE][QE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 42
யோபின் முன்னைய இன்பநிலை 1 யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை: 2 காண்பேனா முன்னைய திங்கள்களை; கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை! 3 அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று; அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன். 4 அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்; கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது. 5 அன்று வல்லவர் என்னோடு இருந்தார்; என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர். 6 அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன; பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது. 7 நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும், 8 என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்; முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர். 9 உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்; கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர். 10 தலைவர்தம் குரல் அடங்கிப்போம்; அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும். 11 என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது; என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது. 12 ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்; தந்தை இல்லார்க்கு உதவினேன். 13 அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்; கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன். 14 அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று. 15 பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்; காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன். 16 ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்; அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன். 17 கொடியவரின் பற்களை உடைத்தேன்; அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன். 18 நான் எண்ணினேன்; ‘மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன். 19 என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்; இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும். 20 என் புகழ் என்றும் ஓங்கும்; என் வில் வளைதிறன் கொண்டது.’ 21 எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்; என் அறிவுரைக்காக அமைதி காத்தனர். 22 என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை; என் மொழிகள் அவர்களில் தங்கின. 23 மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்; மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர். 24 நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது; என் முகப்பொலிவு உரமூட்டியது. 25 நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References