தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு

பதிவுகள்

யோபு அதிகாரம் 29

யோபின் முன்னைய இன்பநிலை 1 யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை: 2 காண்பேனா முன்னைய திங்கள்களை; கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை! 3 அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று; அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன். 4 அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்; கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது. 5 அன்று வல்லவர் என்னோடு இருந்தார்; என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர். 6 அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன; பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது. 7 நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும், 8 என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்; முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர். 9 உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்; கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர். 10 தலைவர்தம் குரல் அடங்கிப்போம்; அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும். 11 என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது; என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது. 12 ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்; தந்தை இல்லார்க்கு உதவினேன். 13 அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்; கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன். 14 அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று. 15 பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்; காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன். 16 ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்; அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன். 17 கொடியவரின் பற்களை உடைத்தேன்; அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன். 18 நான் எண்ணினேன்; ‘மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன். 19 என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்; இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும். 20 என் புகழ் என்றும் ஓங்கும்; என் வில் வளைதிறன் கொண்டது.’ 21 எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்; என் அறிவுரைக்காக அமைதி காத்தனர். 22 என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை; என் மொழிகள் அவர்களில் தங்கின. 23 மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்; மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர். 24 நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது; என் முகப்பொலிவு உரமூட்டியது. 25 நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.
யோபின் முன்னைய இன்பநிலை 1 யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை: .::. 2 காண்பேனா முன்னைய திங்கள்களை; கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை! .::. 3 அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று; அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன். .::. 4 அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்; கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது. .::. 5 அன்று வல்லவர் என்னோடு இருந்தார்; என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர். .::. 6 அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன; பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது. .::. 7 நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும், .::. 8 என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்; முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர். .::. 9 உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்; கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர். .::. 10 தலைவர்தம் குரல் அடங்கிப்போம்; அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும். .::. 11 என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது; என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது. .::. 12 ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்; தந்தை இல்லார்க்கு உதவினேன். .::. 13 அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்; கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன். .::. 14 அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று. .::. 15 பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்; காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன். .::. 16 ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்; அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன். .::. 17 கொடியவரின் பற்களை உடைத்தேன்; அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன். .::. 18 நான் எண்ணினேன்; ‘மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன். .::. 19 என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்; இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும். .::. 20 என் புகழ் என்றும் ஓங்கும்; என் வில் வளைதிறன் கொண்டது.’ .::. 21 எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்; என் அறிவுரைக்காக அமைதி காத்தனர். .::. 22 என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை; என் மொழிகள் அவர்களில் தங்கின. .::. 23 மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்; மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர். .::. 24 நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது; என் முகப்பொலிவு உரமூட்டியது. .::. 25 நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
×

Alert

×

Tamil Letters Keypad References