தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. [PS] யோபு அதற்கு உரைத்த மறுமொழி:
2. [QS][SS] இன்றுகூட என் முறைப்பாடு[SE][SS] கசப்பாயுள்ளது;[SE][SS] நான் வேதனைக் குரல் எழுப்பியும்,[SE][SS] என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது. [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென[SE][SS] நான் அறிய யாராவது உதவுவாரானால்,[SE][SS] நான் அவர் இருக்கையை அணுகுவேன்.[SE][QE]
4. [QS][SS] என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;[SE][SS] என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.[SE][QE]
5. [QS][SS] அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என[SE][SS] அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு[SE][SS] என்ன சொல்வார் என்பதையும்[SE][SS] நான் புரிந்து கொள்வேன்.[SE][QE]
6. [QS][SS] மாபெரும் வல்லமையுடன்[SE][SS] அவர் என்னோடு வழக்காடுவாரா?[SE][SS] இல்லை; அவர் கண்டிப்பாக[SE][SS] எனக்குச் செவி கொடுப்பார்.[SE][QE]
7. [QS][SS] அங்கே நேர்மையானவன்[SE][SS] அவரோடு வழக்காடலாம்;[SE][SS] நானும் என் நடுவரால்[SE][SS] முழுமையாக விடுவிக்கப்படுவேன்.[SE][QE]
8. [QS][SS] கிழக்கே நான் சென்றாலும்[SE][SS] அவர் அங்கில்லை;[SE][SS] மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.[SE][QE]
9. [QS][SS] இடப்புறம் தேடினும்[SE][SS] செயல்படுகிற அவரைக் காணேன்;[SE][SS] வலப்புறம் திரும்பினும்[SE][SS] நான் அவரைப் பார்த்தேனில்லை.[SE][QE]
10. [QS][SS] ஆயினும் நான் போகும் வழியை[SE][SS] அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால்,[SE][SS] நான் பொன்போல் துலங்கிடுவேன்.[SE][QE]
11. [QS][SS] அவர் அடிச்சுவடுகளை[SE][SS] என் கால்கள் பின்பற்றின;[SE][SS] அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.[SE][QE]
12. [QS][SS] அவர் நா உரைத்த ஆணையினின்று[SE][SS] நான் விலகவில்லை;[SE][SS] அவர்தம் வாய்மொழிகளை[SE][SS] அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.[SE][QE]
13. [QS][SS] ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால்,[SE][SS] யாரால் மாற்ற முடியும்? ஏனெனில்,[SE][SS] எதை அவர் விரும்புகிறாரோ[SE][SS] அதை அவர் செய்கிறார்.[SE][QE]
14. [QS][SS] ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை[SE][SS] அவர் நிறைவேற்றுவார்;[SE][SS] இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.[SE][QE]
15. [QS][SS] ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;[SE][SS] அவரைப்பற்றி நினைக்கையில்[SE][SS] திகிலடைகின்றேன்.[SE][QE]
16. [QS][SS] இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;[SE][SS] எல்லாம் வல்லவர் என்னைக்[SE][SS] கலங்கச் செய்தார்.[SE][QE]
17. [QS][SS] ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;[SE][SS] காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 42
1 யோபு அதற்கு உரைத்த மறுமொழி: 2 இன்றுகூட என் முறைப்பாடு கசப்பாயுள்ளது; நான் வேதனைக் குரல் எழுப்பியும், என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது. [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.. ] 3 அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென நான் அறிய யாராவது உதவுவாரானால், நான் அவர் இருக்கையை அணுகுவேன். 4 என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்; என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன். 5 அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு என்ன சொல்வார் என்பதையும் நான் புரிந்து கொள்வேன். 6 மாபெரும் வல்லமையுடன் அவர் என்னோடு வழக்காடுவாரா? இல்லை; அவர் கண்டிப்பாக எனக்குச் செவி கொடுப்பார். 7 அங்கே நேர்மையானவன் அவரோடு வழக்காடலாம்; நானும் என் நடுவரால் முழுமையாக விடுவிக்கப்படுவேன். 8 கிழக்கே நான் சென்றாலும் அவர் அங்கில்லை; மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன். 9 இடப்புறம் தேடினும் செயல்படுகிற அவரைக் காணேன்; வலப்புறம் திரும்பினும் நான் அவரைப் பார்த்தேனில்லை. 10 ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன். 11 அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின; அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை. 12 அவர் நா உரைத்த ஆணையினின்று நான் விலகவில்லை; அவர்தம் வாய்மொழிகளை அரும்பொருளின் மேலாகப் போற்றினேன். 13 ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால், யாரால் மாற்ற முடியும்? ஏனெனில், எதை அவர் விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார். 14 ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை அவர் நிறைவேற்றுவார்; இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன. 15 ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்; அவரைப்பற்றி நினைக்கையில் திகிலடைகின்றேன். 16 இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்; எல்லாம் வல்லவர் என்னைக் கலங்கச் செய்தார். 17 ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது; காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References