1. {தீயோரின் தவிர்க்க முடியாத முடிவு} [PS] [QS][SS] அதற்குச் சூகாவியனான பில்தாது[SE][SS] சொன்ன பதில்:[SE][QE]
2. [QS][SS] எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள[SE][SS] சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்?[SE][SS] சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.[SE][QE]
3. [QS][SS] மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?[SE][SS] மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?[SE][QE]
4. [QS][SS] சீற்றத்தில் உம்மையே நீர்[SE][SS] கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு[SE][SS] உலகம் கைவிடப்பட வேண்டுமா?[SE][SS] பாறையும் தன் இடம்விட்டு[SE][SS] நகர்த்தப்படவேண்டுமா?[SE][QE]
5. [QS][SS] தீயவரின் ஒளி அணைந்துபோம்;[SE][SS] அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம். [* யோபு 21:17.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்;[SE][SS] அவர்கள்மீது ஒளிரும் விளக்கு[SE][SS] அணைந்துபோம். [* யோபு 21:17.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்;[SE][SS] அவர்களின் திட்டமே[SE][SS] அவர்களைக் கவிழ்க்கும்.[SE][QE]
8. [QS][SS] அவர்களின் கால்களே[SE][SS] அவர்களை வலைக்குள் தள்ளும்;[SE][SS] அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.[SE][QE]
9. [QS][SS] கண்ணி அவர்களின் குதிகாலைச்[SE][SS] சிக்கிப்பிடிக்கும்;[SE][SS] சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.[SE][QE]
10. [QS][SS] மண்மீது அவர்களுக்குச் சுருக்கும்,[SE][SS] பாதையில் அவர்களுக்குப் பொறியும்[SE][SS] மறைந்துள்ளன.[SE][QE]
11. [QS][SS] எப்பக்கமும் திகில்[SE][SS] அவர்களை நடுங்க வைக்கும்;[SE][SS] கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.[SE][QE]
12. [QS][SS] பட்டினி அவர்களின் வலிமையை[SE][SS] விழுங்கிடும்; தீங்கு அவர்களின்[SE][SS] வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.[SE][QE]
13. [QS][SS] நோய் அவர்களின் தோலைத் தின்னும்;[SE][SS] சாவின் தலைப்பேறு[SE][SS] அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.[SE][QE]
14. [QS][SS] அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று[SE][SS] பிடுங்கப்படுவர்; அச்சம்தரும்[SE][SS] அரசன்முன் கொணரப்படுவர்.[SE][QE]
15. [QS][SS] அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது;[SE][SS] அவர்களின் உறைவிடங்களில்[SE][SS] கந்தகம் தூவப்படுகின்றது.[SE][QE]
16. [QS][SS] கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;[SE][SS] மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.[SE][QE]
17. [QS][SS] அவர்களின் நினைவே அவனியில்[SE][SS] இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே[SE][SS] அவனுக்குப் பெயரே இல்லாது போம்.[SE][QE]
18. [QS][SS] ஒளியிலிருந்து இருளுக்குள்[SE][SS] அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே[SE][SS] அவர்கள் துரத்தப்படுவர்.[SE][QE]
19. [QS][SS] அவர்களின் இனத்தாரிடையே[SE][SS] அவர்களுக்கு வழிமரபும்[SE][SS] வழித்தோன்றலுமில்லை;[SE][SS] அவர்கள் வாழ்ந்த இடத்தில்[SE][SS] அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.[SE][QE]
20. [QS][SS] அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது[SE][SS] மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.[SE][QE]
21. [QS][SS] கொடியவரின் குடியிருப்பெல்லாம்[SE][SS] இத்தகையதே; இறைவனை[SE][SS] அறியாதவரின் நிலையும் இதுவே.[SE][PE]