தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {வலிமைமிகு செயல்களில் தெரியும் கடவுளின் ஞானம்} [PS] அதற்கு யோபு உரைத்த மறுமொழி:
2. [QS][SS] உண்மையிலும் உண்மை;[SE][SS] நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள்.[SE][SS] உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்![SE][QE]
3. [QS][SS] உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு;[SE][SS] உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்;[SE][SS] இத்தகையவற்றை யார்தான் அறியார்?[SE][QE]
4. [QS][SS] கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான்,[SE][SS] என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன்.[SE][SS] குற்றமற்ற நேர்மையாளனாகிய நான்[SE][SS] நகைப்புப் பொருள் ஆனேன்.[SE][QE]
5. [QS][SS] இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள்[SE][SS] என்னை ஏளனம் செய்கின்றீர்கள்;[SE][SS] அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.[SE][QE]
6. [QS][SS] கொள்ளையரின் கூடாரங்கள்[SE][SS] கொழிக்கின்றன![SE][SS] இறைவனைச் சினந்தெழச் செய்வோரும்[SE][SS] கடவுளுக்குச் சவால் விடுப்போரும்[SE][SS] பாதுகாப்பாய் உள்ளனர்![SE][QE]
7. [QS][SS] இருப்பினும், விலங்கிடம் வினவுக;[SE][SS] உமக்கு அது கற்றுக்கொடுக்கும்;[SE][SS] வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.[SE][QE]
8. [QS][SS] அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக;[SE][SS] அவை உமக்குக் கற்பிக்கும்.[SE][SS] ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.[SE][QE]
9. [QS][SS] இவற்றில் ஆண்டவரை அறியாதது எது?[SE][SS] அவரது கைதான் இதைச் செய்தது என[SE][SS] எது அறியாது?[SE][QE]
10. [QS][SS] அவர் கையில்தான்[SE][SS] அனைத்துப் படைப்புகளின் உயிரும்[SE][SS] மனித இனத்தின் மூச்சும் உள்ளன. [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] செவி, சொற்களைப்[SE][SS] பிரித்து உணர்வதில்லையா?[SE][SS] நாக்கு, உணவைச்[SE][SS] சுவைத்து அறிவதில்லையா?[SE][QE]
12. [QS][SS] முதியோரிடம் ஞானமுண்டு;[SE][SS] ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.[SE][QE]
13. [QS][SS] ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன![SE][SS] ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன![SE][QE]
14. [QS][SS] இதோ! அவர் இடித்திடுவதை[SE][SS] எழுப்பிட இயலாது;[SE][SS] அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.[SE][QE]
15. [QS][SS] இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில்,[SE][SS] அனைத்தும் வறண்டுபோம்;[SE][SS] வெளியே அதை வரவிடுவாரெனில்,[SE][SS] நிலத்தையே மூழ்கடிக்கும்.[SE][QE]
16. [QS][SS] வல்லமையும் மதிநுட்பமும்[SE][SS] அவருக்கே உரியன;[SE][SS] ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும்[SE][SS] அவருடையோரே![SE][QE]
17. [QS][SS] அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்;[SE][SS] நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.[SE][QE]
18. [QS][SS] அரசர்களின் அரைக்கச்சையை[SE][SS] அவிழ்க்கின்றார்;[SE][SS] அவர்களின் இடையில்[SE][SS] கந்தையைக் கட்டுகின்றார்;[SE][QE]
19. [QS][SS] குருக்களைத் தம் நிலையிலிருந்து[SE][SS] விழச் செய்கின்றார்;[SE][SS] நிலைபெற்ற வலியோரைக்[SE][SS] கவிழ்த்து வீழ்த்துகின்றார்;[SE][QE]
20. [QS][SS] வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்;[SE][SS] முதியோரின் பகுத்துணர்[SE][SS] மதியைப் பறிக்கின்றார்;[SE][QE]
21. [QS][SS] உயர்குடி மக்கள் மீது[SE][SS] வெறுப்பினைப் பொழிகின்றார்;[SE][SS] வலியோரின் கச்சை[SE][SS] கழன்றுபோகச் செய்கின்றார்;[SE][QE]
22. [QS][SS] புரியாப் புதிர்களை[SE][SS] இருளினின்று இலங்கச் செய்கின்றார்[SE][SS] . காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.[SE][QE]
23. [QS][SS] மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்;[SE][SS] பின்பு அழிக்கின்றார்;[SE][SS] மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்;[SE][SS] பின், குறையச் செய்கின்றார்.[SE][QE]
24. [QS][SS] மண்ணக மக்களின் தலைவர்[SE][SS] தம் அறிவாற்றலை அழிக்கின்றார்.[SE][SS] வழியிலாப் பாழ்வெளியில்[SE][SS] அவர்களை அலையச் செய்கின்றார்.[SE][QE]
25. [QS][SS] இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்;[SE][SS] குடித்தவர்போல் அவர்களைத்[SE][SS] தடுமாற வைக்கின்றார்.[SE][PE][QE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 42
வலிமைமிகு செயல்களில் தெரியும் கடவுளின் ஞானம் 1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி: 2 உண்மையிலும் உண்மை; நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்! 3 உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு; உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்; இத்தகையவற்றை யார்தான் அறியார்? 4 கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான், என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன். குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன். 5 இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்; அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள். 6 கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன! இறைவனைச் சினந்தெழச் செய்வோரும் கடவுளுக்குச் சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்! 7 இருப்பினும், விலங்கிடம் வினவுக; உமக்கு அது கற்றுக்கொடுக்கும்; வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும். 8 அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக; அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும். 9 இவற்றில் ஆண்டவரை அறியாதது எது? அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது? 10 அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன. [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.. ] 11 செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா? நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா? 12 முதியோரிடம் ஞானமுண்டு; ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு. 13 ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன! 14 இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது; அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது. 15 இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்; வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும். 16 வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன; ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே! 17 அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்; நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார். 18 அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்; அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்; 19 குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்; நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்; 20 வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்; முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்; 21 உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்; வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்; 22 புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார் . காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார். 23 மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்; பின்பு அழிக்கின்றார்; மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்; பின், குறையச் செய்கின்றார். 24 மண்ணக மக்களின் தலைவர் தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார். 25 இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்; குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References