தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {கடவுளின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள யோபு தூண்டப்படல்} [PS] [QS][SS] அதற்கு நாமாவியனான[SE][SS] சோப்பார் சொன்ன மறுமொழி:[SE][QE]
2. [QS][SS] திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா?[SE][SS] மிகுதியாகப் பேசுவதால்,[SE][SS] ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?[SE][QE]
3. [QS][SS] உம் வீண் வார்த்தைகள் மனிதரை[SE][SS] வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது[SE][SS] உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?[SE][QE]
4. [QS][SS] “என் அறிவுரை தூயது; நானும்[SE][SS] என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.[SE][QE]
5. [QS][SS] ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை[SE][SS] உமக்கெதிராயத் திறக்கட்டும்” என[SE][SS] யாரேனும் அவரை வேண்டாரோ![SE][QE]
6. [QS][SS] அவரே ஞானத்தின் மறைபொருளை[SE][SS] உமக்கு அறிவிக்கட்டும்;[SE][SS] அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்;[SE][SS] கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை[SE][SS] மறந்தார் என்பதை அறிக![SE][QE]
7. [QS][SS] கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை[SE][SS] நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின்[SE][SS] எல்லையைக் கண்டுணர முடியுமா?[SE][QE]
8. [QS][SS] அவை வானங்களை விட உயர்ந்தவை;[SE][SS] நீர் என்ன செய்வீர்?[SE][SS] அவை பாதாளத்தைவிட ஆழமானவை;[SE][SS] நீர் என்ன அறிவீர்?[SE][QE]
9. [QS][SS] அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது;[SE][SS] ஆழ்கடலைவிட அகலமானது.[SE][QE]
10. [QS][SS] அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும்,[SE][SS] அவைமுன் நிறுத்தினாலும்[SE][SS] அவரைத் தடுப்பார் யார்? [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] ஏனெனில், அவர் மனிதரின்[SE][SS] ஒன்றுமில்லாமையை அறிவார்;[SE][SS] தீமையைக் காண்கின்றார்; ஆனால்,[SE][SS] அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.[SE][QE]
12. [QS][SS] காட்டுக்கழுதைக்குட்டி[SE][SS] மனிதனாகப் பிறந்தால்,[SE][SS] அறிவிலியும் அறிவு பெறுவான்.[SE][QE]
13. [QS][SS] உம்முடைய உள்ளத்தை[SE][SS] நீர் ஒழுங்குபடுத்தினால்,[SE][SS] உம்முடைய கைகளை[SE][SS] அவரை நோக்கி நீட்டுவீராக![SE][QE]
14. [QS][SS] உம் கையில் கறையிருக்குமாயின்[SE][SS] அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில்[SE][SS] தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.[SE][QE]
15. [QS][SS] அப்போது உண்மையாகவே நாணமின்றி[SE][SS] உம் முகத்தை ஏறெடுப்பீர்;[SE][SS] நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.[SE][QE]
16. [QS][SS] உம் துயரை நீர் மறந்துபோவீர்;[SE][SS] கடந்துபோன வெள்ளம்போல்[SE][SS] அதை நினைகூர்வீர்.[SE][QE]
17. [QS][SS] உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்;[SE][SS] காரிருளால் மூடப்பட்டிருந்தாலும்[SE][SS] காலைபோல் ஆவீர்;[SE][QE]
18. [QS][SS] நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;[SE][SS] சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;[SE][QE]
19. [QS][SS] ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்;[SE][SS] உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;[SE][QE]
20. [QS][SS] தீயோரின் கண்கள் மங்கிப்போம்;[SE][SS] அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்;[SE][SS] உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை![SE][PE][QE]
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 42
கடவுளின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள யோபு தூண்டப்படல் 1 அதற்கு நாமாவியனான சோப்பார் சொன்ன மறுமொழி: 2 திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா? மிகுதியாகப் பேசுவதால், ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ? 3 உம் வீண் வார்த்தைகள் மனிதரை வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ? 4 “என் அறிவுரை தூயது; நானும் என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர். 5 ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை உமக்கெதிராயத் திறக்கட்டும்” என யாரேனும் அவரை வேண்டாரோ! 6 அவரே ஞானத்தின் மறைபொருளை உமக்கு அறிவிக்கட்டும்; அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்; கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை மறந்தார் என்பதை அறிக! 7 கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா? 8 அவை வானங்களை விட உயர்ந்தவை; நீர் என்ன செய்வீர்? அவை பாதாளத்தைவிட ஆழமானவை; நீர் என்ன அறிவீர்? 9 அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது; ஆழ்கடலைவிட அகலமானது. 10 அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும், அவைமுன் நிறுத்தினாலும் அவரைத் தடுப்பார் யார்? [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.. ] 11 ஏனெனில், அவர் மனிதரின் ஒன்றுமில்லாமையை அறிவார்; தீமையைக் காண்கின்றார்; ஆனால், அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை. 12 காட்டுக்கழுதைக்குட்டி மனிதனாகப் பிறந்தால், அறிவிலியும் அறிவு பெறுவான். 13 உம்முடைய உள்ளத்தை நீர் ஒழுங்குபடுத்தினால், உம்முடைய கைகளை அவரை நோக்கி நீட்டுவீராக! 14 உம் கையில் கறையிருக்குமாயின் அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில் தீமை குடிகொள்ளாதிருக்கட்டும். 15 அப்போது உண்மையாகவே நாணமின்றி உம் முகத்தை ஏறெடுப்பீர்; நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர். 16 உம் துயரை நீர் மறந்துபோவீர்; கடந்துபோன வெள்ளம்போல் அதை நினைகூர்வீர். 17 உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்; காரிருளால் மூடப்பட்டிருந்தாலும் காலைபோல் ஆவீர்; 18 நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்; சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்; 19 ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்; உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்; 20 தீயோரின் கண்கள் மங்கிப்போம்; அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்; உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References