1. {எகிப்துக்கு எதிராக} [PS] மக்களினத்தாரைக் குறித்து இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
2. எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்: [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [PE]
3. [PS] [QS][SS] பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்;[SE][SS] போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
4. [QS][SS] குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்;[SE][SS] படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்;[SE][SS] தலைக் கவசங்களுடன்[SE][SS] அணிவகுத்து நில்லுங்கள்;[SE][SS] ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்.[SE][SS] மார்புக் கவசங்களை[SE][SS] அணிந்து கொள்ளுங்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
5. [QS][SS] நான் காண்பது என்ன?[SE][SS] அவர்கள் திகிலடைந்து[SE][SS] புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்;[SE][SS] அவர்களுடைய படைவீரர்கள்[SE][SS] முறியடிக்கப் படுகிறார்கள்;[SE][SS] திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்; [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
6. [QS][SS] ஓட்டத்தில் வல்லவர்[SE][SS] ஓடிப்போக முடியாது;[SE][SS] படைவீரரும் தப்பியோட இயலாது;[SE][SS] வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில்[SE][SS] அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
7. [QS][SS] நைல்நதி போல் பொங்கி எழுந்து,[SE][SS] அலைமோதும் நதிகளெனப்[SE][SS] பாய்ந்து வரும் இவன் யார்? [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
8. [QS][SS] நைல்நதிபோல் பொங்கி எழுந்து[SE][SS] அலைமோதும் நதிகளெனப்[SE][SS] பாய்ந்து வருகின்றது எகிப்து.[SE][SS] நான் பொங்கி எழுந்து,[SE][SS] மண்ணுலகை மூடிக்கொள்வேன்;[SE][SS] நகரையும் அதன் குடிகளையும்[SE][SS] அழித்தொழிப்பேன் என்று[SE][SS] அவன் சொல்லிக்கொள்கிறான். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
9. [QS][SS] குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்;[SE][SS] தேர்களே, விரைந்து ஓடுங்கள்;[SE][SS] படைவீரர்களே,[SE][SS] முன்னேறிச் செல்லுங்கள்.[SE][SS] எத்தியோப்பியரும் லீபியரும்[SE][SS] கேடயம் ஏந்தட்டும்![SE][SS] லீதியர் அம்புகளைத் தொடுத்து[SE][SS] நாணேற்றட்டும்! [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
10. [QS][SS] அந்த நாள், படைகளின்[SE][SS] ஆண்டவராகிய தலைவரின் நாள்;[SE][SS] ஆண்டவர் தம் எதிரிகளைப்[SE][SS] பழிவாங்கும் நாள்,[SE][SS] வாள் உண்டு நிறைவுகொள்ளும்;[SE][SS] குருதி குடித்து வெறிகொள்ளும்.[SE][SS] வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு[SE][SS] பேராற்றங்கரையில்[SE][SS] படைகளின் ஆண்டவராகிய[SE][SS] தலைவருக்குப் பலியிடப்படும். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
11. [QS][SS] கன்னிப் பெண் எகிப்தே![SE][SS] கிலயாதுக்குச் சென்று,[SE][SS] பொன் மெழுகு கொண்டுவா,[SE][SS] பல்வகை மருந்துகளை[SE][SS] நீ பயன்படுத்துவது வீணே![SE][SS] உன் காயங்கள் ஆறவே ஆறா. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
12. [QS][SS] மக்களினத்தார் உன் இழிவுபற்றிக்[SE][SS] கேள்வியுற்றனர்;[SE][SS] உன் அழுகுரல்[SE][SS] மண்ணுலகை நிறைந்தது;[SE][SS] படைவீரன் படைவீரனோடு[SE][SS] இடறிக்கொள்ள[SE][SS] இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][PE][QE]
13. [PS] பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ]
14. [QS][SS] எகிப்தில் அறிவியுங்கள்;[SE][SS] மிக்தோலில் பறைசாற்றுங்கள்;[SE][SS] மெம்பிசிலும் தகபனகேசிலும்[SE][SS] முரசறையுங்கள்;[SE][SS] அணிவகுத்து நில்; தயாராய் இரு![SE][SS] உன்னைச் சுற்றிலும் உள்ளவை[SE][SS] வாளுக்கு இரையாகும். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
15. [QS][SS] உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்?[SE][SS] அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்?[SE][SS] ஆண்டவர் அவனைத்[SE][SS] தள்ளிவிட்டதால் அன்றோ! [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
16. [QS][SS] அவர் பலரை இடறிவிழச் செய்தார்.[SE][SS] ‘எழுந்திருங்கள், கொடுங்கோலன்[SE][SS] வாளினின்று தப்பிப்போம்;[SE][SS] நம் சொந்த மக்களிடம்[SE][SS] நம் தாய் நாட்டுக்கே[SE][SS] திரும்பிச் செல்வோம்’ என்று[SE][SS] ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
17. [QS][SS] ‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்று[SE][SS] எகிப்திய மன்னன் பார்வோனுக்குப்[SE][SS] பெயர் சூட்டுங்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
18. [QS][SS] படைகளின் ஆண்டவர் என்னும்[SE][SS] பெயருடைய மன்னர் கூறுகிறார்:[SE][SS] வாழும் என் மேல் ஆணை![SE][SS] மலைகளுக்குள் தாபோர் போலவும்[SE][SS] கடலோரத்துக் கர்மேல் போலவும்[SE][SS] ஒருவன் ஆற்றலுடன் வருவான். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
19. [QS][SS] மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென[SE][SS] மூட்டை கட்டிக்கொள்;[SE][SS] மெம்பிசு அழிந்துபோகும்;[SE][SS] குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
20. [QS][SS] எகிப்து ஓர் அழகான இளம்பசு![SE][SS] வடக்கினின்று உண்ணி ஒன்று[SE][SS] அவள்மீது வந்து அமர்ந்துள்ளது. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
21. [QS][SS] அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர்[SE][SS] கொழுத்த கன்று போன்றவர்கள்;[SE][SS] அவர்களும் புறமுதுகுகாட்டி[SE][SS] ஒருமிக்க ஓடிவிட்டார்கள்.[SE][SS] அவர்களால்[SE][SS] எதிர்த்து நிற்க முடியவில்லை.[SE][SS] அவர்களுடைய அழிவின் நாள்,[SE][SS] அவர்களது தண்டனையின் காலம்[SE][SS] அவர்கள்மேல் வந்துற்றது. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
22. [QS][SS] நழுவிச் செல்லும் பாம்பு போன்று[SE][SS] அவள் சீறுகின்றாள்;[SE][SS] அவள் எதிரிகள் வலிமையோடு[SE][SS] அணிவகுத்து வருகின்றார்கள்;[SE][SS] மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு[SE][SS] அவளை எதிர்த்து வருகின்றார்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
23. [QS][SS] அவளது காடு[SE][SS] ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது.[SE][SS] அவர்கள் அதை வெட்டுவார்கள்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட[SE][SS] மிகுதியானவர்கள்.[SE][SS] அவர்களைக் கணக்கிட முடியாது. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][QE]
24. [QS][SS] மகள் எகிப்து[SE][SS] இகழ்ச்சிக்கு உள்ளாவாள்;[SE][SS] வடக்கு நாட்டு மக்களிடம்[SE][SS] அவள் கையளிக்கப்படுவாள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] [SE][PE][QE]
25. [PS] இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ]
26. அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ]
27. [QS][SS] என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே;[SE][SS] இஸ்ரயேலே, கலங்காதே![SE][SS] தொலை நாட்டினின்று[SE][SS] உன்னை நான் மீட்பேன்;[SE][SS] அடிமைத்தன நாட்டினின்று[SE][SS] உன் வழிமரபினரை விடுவிப்பேன்;[SE][SS] யாக்கோபு திரும்பிவந்து[SE][SS] அமைதியில் இளைப்பாறுவான்;[SE][SS] அவனை அச்சுறுத்துவார் எவருமிலர். [* எரே 30:10-11.[QE]. ] [SE][QE]
28. [QS][SS] என் ஊழியன் யாக்கோபே,[SE][SS] அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்.[SE][SS] நான் உன்னோடு இருக்கிறேன்;[SE][SS] எந்த மக்களினத்தாரிடையே[SE][SS] உன்னைத் துரத்தியடித்தேனோ,[SE][SS] அவர்கள் அனைவரையும்[SE][SS] முற்றிலும் அழித்தொழிப்பேன்;[SE][SS] உன்னையோ[SE][SS] முற்றிலும் அழிக்க மாட்டேன்;[SE][SS] உன்னை நீதியோடு தண்டிப்பேன்;[SE][SS] உன்னை எவ்வகையிலேனும்[SE][SS] தண்டியாது விடேன். [* எரே 30:10-11.[QE]. ] [SE][PE]